கண்ணகி வாழ்க்கை வரலாறு | Kannagi Varalaru in Tamil
சிலப்பதிகாரம் என்றால் முதலில் ஞாபகத்தில் வருவது கண்ணகிதான். சிலப்பதிகாரம் என பெயர் வருவதற்கு காரணம் கண்ணகி. சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம் சிலம்பின் மூலம் உருவானது என்பதால் சிலப்பதிகாரம் என்று பெயர் வந்தது. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள். ஐம்பெரும் காப்பியங்களில் முதன்மையானது இந்த சிலப்பதிகாரம் சிலைப்பூவின் மூலம் உருவான கதையால் சிலப்பதிகாரம் பெயர் வந்தது.
ஒழுக்கத்திற்கு மறு பெயர் கண்ணகி. பெண்களின் தைரியம், ஆளுமை, யாருக்கும் அஞ்சாத பேச்சித்திறன் மொத்தத்திற்கும் முன் உதாரணமாக வாழ்ந்தவள் கண்ணகி. கண்ணகி ஆசை கணவன் தவறே செய்யாத குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டதால் கோவத்தில் மதுரையை எரித்த கண்ணகியின் வாழ்க்கை வரலாற்றை இந்த பதிவில் காண்போம்.
கோவலன் கண்ணகி கதை:
கோவலன் காவிரிப்பூம்பட்டினத்தில் பெரு வணிகன் மாசாத்துவான் மகன். கோவலனின் தந்தை காவிரிப்பூம்பட்டினத்தில் பெரிய வணிகராக இருந்ததால் கோவலனை செல்வந்தராக வளர்த்தான். கண்ணகி காவிரிப்பூம்பட்டினத்தில் மாநாயகன் மகள் இவளும் செல்வத்திற்கு குறைவே இல்லாதவள். இவர்களது தாய் தந்தை இருவர் வீட்டில் முடிவு செய்து, கோவலன் கண்ணகி இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.
வீரமங்கை வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாறு |
கோவலன் மாதவி கதை:
கண்ணகி கோவலன் இருவர் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தது. கோவலன் இசையின் மீது கொண்ட ஆர்வம் இசை கருவிகளை வாசிக்க ஆரம்பித்தான் அது மட்டுமில்லாமல் அவனுக்கு கலை மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. கோவலனுக்கு எல்லா கலைகளின் மீதும் மதிப்பும் பிடிப்பும் இருந்தது. ஒரு நாள் ஆடல் நாயகியான மாதவியை பார்த்தான், அவளையும் அவளின் நடனத்தையும் பார்த்து கோவலன் மாதவியை நேசிக்க ஆரம்பித்தான். கோவலன் உன்னுடன் சேர்ந்து வாழவேண்டும் என்பதை மாதவிடம் கூறுகிறாள். மாதவியும் கோவலன் ஆசைக்கு இணங்க ஒரே வீட்டில் சேர்ந்து வாழ தொடங்கினார்கள்.
கண்ணகியின் சிறப்பு:
கண்ணகியை விட்டு கோவலன் பிரிந்து நிரந்தரமாக மாதவியுடன் வாழ நினைத்தான். மாதவியுடன் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்தான். கண்ணகி கோவலனை நினைத்து என் கணவன் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்வதை நினைத்து மன வேதனையுடன் வாழ்ந்தால். கோவலன் மீது கோவத்தை காட்டாமல் மற்றவர்களை குறை கூறாமல் தன் கணவனுடன் எப்படி சேர்வது என்று யோசித்து வந்தால்.
கோவலன் மாதவி பிரிவு:
கோவலன் மாதவி மீதும் அவள் நடனத்தின் மீதும் கொண்ட திராத ஆசையினால். மாதவி என்ன ஆசைப்பட்டு கேட்டாலும் மறுக்காமல் நிறைவேற்றி வந்தான். மாதவி கோவலனிடம் இருந்த காசு பணம் நகைகளை சிறிது சிறிதாக எடுக்க தொடங்கினாள். கடைசியாக எல்லா செல்வங்களையும் பரித்துகொண்டால் பிறகு கோவலனிடமிருந்து மாதவி விலக ஆரம்பித்தால். அதனை உணர்ந்த கோவலன் அப்போது கண்ணைகியை நினைத்தான்.
கண்ணகியை தேடி வந்த கோவலன்:
செல்வத்தை பறிகொடுத்த கோவலன் கொஞ்ச நாட்களில் மிண்டும் கண்ணகியிடம் வந்து சேர்ந்தான். கோவலனை கண்ட கண்ணகி அவனிடம் ஒரு வார்த்தையும் கேட்காமல் நின்றால். கண்ணகியை கண்ட கோவலன் மாதவியை விட அதிக அளவு கண்ணகி என் மீது பாசம் வைத்திருக்கிறாள் என்று புரிந்து கொண்டான். கண்ணகியின் அருகில் சென்று கோவலன் அவளது கைகளை பிடித்து. என்னிடம் இருந்த செல்வத்தை பறிகொடுத்துவிட்டேன். எனவே நாம் மதுரை சென்று இழந்த செல்வங்களை மறுபடியும் சேர்த்து பழைய நிலைமைக்கு வருவோம் என்று கூறி கண்கலங்கினான். கண்ணகி கோவலனிடம் கவலை கொள்ள வேண்டாம் என கூறி மதுரையை நோக்கி புறப்பட்டார்கள்.
சரோஜினி நாயுடு வாழ்க்கை வரலாறு |
காற் சிலம்பை விற்க முயன்ற கோவலன்:
மதுரை வந்த கண்ணகி கோவலனிடம் எந்த ஒரு பண காசு இல்லை. செலவிற்காக கண்ணகி அணிந்திருந்த மாணிக்கத்தால் ஆனா சிலம்பை கோவலனிடம் கொடுத்து விற்று வர சொன்னால். அவள் அணிந்திருந்த சிலம்பு மாணிக்கத்தால் ஆன சிலம்பு. அதில் இருக்கின்ற ஒரு கல் பல ஆயிரம் போகும். அதனை விற்க கடை விதிக்கு கோவலன் சென்றான்.
அரசனின் மனைவிடம் இருந்த சிலம்பை திருடிய பொற்கொல்லன்:
பாண்டிய மன்னரின் மனைவி அணிந்திருந்த சிலம்பை திருடி விட்டு அவையின் பொற்கொல்லன் தடுமாறிக் கொண்டிருந்தான். அப்போது காற்சிலம்புடன் கடை வீதியில் நின்ற கோவலனை கண்ட பொற்கொல்லன் அவன் அதிலிருந்து தப்பிக்க அதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டான். கோவலனை அரசனிடம் பொய் கூறி சிறை பிடித்து கொடுத்தான்.
கோவலன் கொலையுண்ட வரலாறு:
கோவலனை காற்சிலம்புடன் அரசவைக்கு அழைத்து வந்தார்கள். பிறகு அரசர் நீ யார் சொல் என்று கேட்கிறார்கள். அதற்கு கோவலன் நான் காவிரிபூம்பட்டினத்தில் வாழ்ந்த மாசாத்து வாணிகன் மகன் என் பெயர் கோவலன். செல்வத்தை இழந்து, செல்வத்தை ஈட்டுவதற்காக மதுரை வந்தோம். என் மனைவின் காற்சிலப்பை விற்க முயன்ற பொழுது சிப்பாய்கள் என்னை சிறை பிடித்து வந்தார்கள். நான் கூறுவது உண்மை இந்த காற் சிலம்பு என் மனைவியுடையது என்று கூறினான். அவனின் பேச்சை கேட்காத பாண்டிய மன்னன் உடனே அவனை கொலை செய்ய உத்தரவிட்டார். அவர் தீர்ப்பின் படி கோவலன் கொலை செய்யப்பட்டான்.
கரிகால் சோழன் வரலாறு |
வழக்குரை காதை பாடல்:
தேரா மன்னா செப்புவது உடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன் பெரும்பெயர்ப் புகார்என் பதியே அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்
சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு
என்கால் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி நான்…
என் பெயர் கண்ணகி என்று கடும் கோவத்தொடு அரண்மனை அதிர பேசினால் கண்ணகி. விசாரணை செய்யாமல் என் கணவனுக்கு தீர்ப்பு வழங்கியது தவறு. என் கணவனின் கையில் இருக்கும் சிலம்பை உடைத்து பாருங்கள் மாணிக்கத்தால் ஆனா சிலம்பு என்று தெரியும். உடைத்து பார்க்கும் போது தெரிந்தது அந்த சிலம்பு மாணிக்கத்தால் ஆனது என்று. உடனே கண்ணகி அவள் கையில் இருந்த இன்னொரு சிலம்பை தூக்கி எறிந்தாள் அதில் இருக்கும் மாணிக்க பரல்கள் சிதரியது. விசாரிக்காமல் தீர்ப்பு வழங்கிய மன்னா என்று சத்தம் இட்டால். அரசன் நான் வழங்கிய தீர்ப்பு தவறு இப்போதே என் உயிர் பிரியட்டும் என்று சொல்லிவிட்டு கீழே விழுந்த மன்னன் எழவில்லை அதை கண்ட அரசன் மனைவியும் நீங்கள் இல்லாத இந்த உலகில் நான் இல்லை என்று சொல்லி மனைவியும் உயிரை விட்டால்.
மதுரையை எரித்த கண்ணகி:
கற்புக்கு தனித்துவம் கண்ணகி. அவளின் கண்ணீருக்கு மதுரை நகரம் பதில் சொல்ல வேண்டும் என்பதை மனதில் கொண்ட கண்ணகி என் கணவனை கொன்ற இந்த நகரம் எரிந்து சாம்பலாகட்டும் என்று சாபம் இட்டால். மதுரை நகரம் முழுவதும் எரிந்து சாம்பலானது. பத்தினி சாபம் பலித்தது என்று மதுரை முழுவதும் பேசினார்கள்.
கண்ணகிக்கு அடைக்கலம் கொடுத்தது யார்?
கணவன் இறந்த சோகத்தில் கண்ணகி வெகு தூரம் நடக்க ஆரம்பித்தால். நடந்து அவளின் பாதங்கள் குருதியில் நனைந்து இருந்தது. கேரளா மாநிலத்தில் ஒரு பகுதியான இடுக்கி என்ற இடத்தை அடைந்தாள். அங்கு இருக்கும் குறவர்களின் வீட்டில் அடைக்கலம் புகுந்தாள். தனக்கு நடந்த குற்றத்தை கண்ணீர் மல்க குறவரிடம் கூறினால். பல காலம் அவளின் மரணத்திற்காக காத்திருந்தாள். ஒரு நாள் கோவலன் கண்ணகியை தேவர் உலகத்திற்கு கூட்டி சென்றதாக கூற படிகிறது.
இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> | Varalaru |