வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை கட்டுரை | About Kavimani Desigavinayagam Pillai in Tamil

Updated On: October 24, 2024 11:25 AM
Follow Us:
Kavimani Desigavinayagam Pillai History in Tamil
---Advertisement---
Advertisement

Kavimani Desigavinayagam Pillai History in Tamil |கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை குறிப்பு

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களது வாழ்க்கை வரலாறு பற்றி படித்தறிவோமா..? கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைஓர் இயக்கம் சாரா இனிமை கவிஞர்  என்று சொல்லலாம். மேலும் எளிமை கவிஞர், உண்மை கவிஞர், உணர்ச்சி கவிஞர் என்று கூறலாம். இவர் தேனொழுகக் கவிபாடுவதில் வல்லவர். கவிதை நூல்களோடு பல ஆராய்ச்சி நூல்களையும் இவர் படைத்துள்ளார். சரி கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைஅவர்களது வரலாற்றை பற்றி இங்கு சில தகவல்களை பார்ப்போம் வாங்க.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை கட்டுரை:

குறிப்பு சட்டகம்:

  • பிறப்பு
  • கல்வி
  • கவிமணியின் ஆசிரியர் பணி
  • இலக்கியப் பணி
  • கவிமணி ஒரு மொழிபெயர்ப்பாளர்
  • விருதுகள்
  • புகழ்பெற்ற பாடல் வரிகள்
  • இயற்றிய நூல்கள்
  • இறப்பு

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறப்பு:

Kavimani Desigavinayagam Pillai History in Tamil – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்து தேரூரில் 1876-ஆம் ஆண்டு  ஜூலை 27 திங்கட்கிழமை பிறந்தார். இவருடைய தந்தை பெயர் சிவதானுப்பிள்ளை. இவரது தாயின் பெயர் ஆதிலெட்சுமி அம்மையார்.

கல்வி:

ஆரம்ப கல்வியினை அவரது சொந்த ஊரான தேரூரில் உள்ள தொடக்க பள்ளியில் தொடங்கினார். அதன் பிறகு கோட்டாறு என்னும் ஊரில் ஆங்கில பள்ளியில் பயின்றார். அதன் பிறகு அவரது உயர்கல்வியை நாகர் கோவில் ஸ்காட் கிறித்தவக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை சிறுவயதில் இருக்கும்போதே அவரது தந்தையார் கால மானார். ஆனாலும், தாயின் ஊக்குவிப்புடன் தொடர்ந்து கற்றார்.

கவிமணியின் ஆசிரியர் பணி:

கோட்டாற்றில் மத்தியதரப் பாடசாலையின் உதவி ஆசிரியராகவும், பின்னர் நாகர்கோவில் போதனா முறைப் பாடசாலையிலும் திருவனந்தை பெண் போதனா முறைப் பாடசாலையிலும் உதவியாசிரியராகவும் அமர்ந்தார். விஞ்ஞான ஆசிரியராகவே பணிபுரிந்தார். ஆனால் இலக்கியக் கல்வியில் தொடர்ந்து தன்னைக் கரைத்துக்கொண்டு வந்தார். மேலும் மேலும் நூல்களைக் கற்பதும் ஆராய்ச்சி செய்வதும் பாடல்களை இயற்றுவதும் இவரது அன்றாட வாழ்க்கையாயிற்று.  முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகவும், கல்லூரி விரிவுரையாளராகவும் பணிபுரிந்து, 1931-யில் ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின் தம் மனைவியின் ஊராகிய புத்தேரியில் தங்கிக் கவிதை இயற்றுவதிலும் கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார்.

இலக்கியப் பணி:

குழந்தைகளுக்காக தமிழில் முதல்முதலில் தொடர்ச்சியாக பாடல்களை எழுதினார். 1938 ஆண்டு வெளியான அவருடைய மலரும் மாலையும் தொகுதியில் 25 க்கும் மேற்பட்ட குழந்தைப் பாடல்கள், 7 கதைப் பாட்டுகள் இடம் பெற்றிருந்தது. அவற்றுள் தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு என்ற பாடல் இன்றளவும் பிரபலமாக உள்ள அவரது குழந்தைப் பாடல்களில் ஒன்று ஆகும்.

கவிமணி ஒரு மொழிபெயர்ப்பாளர்:

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எட்வின் ஆர்னால்டின் ‘ஆசிய ஜோதி’ யைத் தமிழில் தழுவி எழுதினார். பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களைத் தழுவி தமிழில் எழுதினார்.

  • கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஒரு ஆராய்ச்சியாளர்:
  • இவர் ஆராய்ச்சி துறையிலும் பல அற்புத பணிகளை செய்துள்ளார். அதாவது 1922-யில் ‘மனோன்மணியம் மறுபிறப்பு’ என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார்.
  • சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார்.
  • கம்பராமாயணம் திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார்.
  • ‘காந்தளூர்ச்சாலை’ பற்றிய ஆய்வு நூலை எழுதினார்.

விருதுகள்:

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகள்.

  1. 24 டிசம்பர் 1940-யில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை கவிமணி என்ற பட்டம் வழங்கினார்.
  2. 1943-யில் அண்ணாமலை அரசர் ஆத்தங்குடியில் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். பெரும் பொருள் வழங்க முன் வந்தபோது அதை வாங்க மறுத்து விட்டார்.
  3. 1954-யில் கவிமணிக்குத் தேரூரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டது.
  4. அக்டோபர் 2005-யில் இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பித்தது.

புகழ்பெற்ற பாடல் வரிகள்:

  • மங்கையராக பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா
  • தேடிப்பார்த்தாலும் சாதி தெரிவதுண்டா-அப்பா?
  • தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு அங்கே துள்ளி குதிக்குது கன்றுக்குட்டி.
  • தெள்ளத் தெளிந்த தமிழில் உண்மை எடுத்துரைப்பது தமிழ்
வீரமங்கை வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாறு

இயற்றிய நூல்கள்:

  • அழகம்மை ஆசிரிய விருத்தம் (கவிமணி இயற்றிய முதல் நூல்)
  • ஆசிய ஜோதி
  • உமர்கய்யாம் பாடல்கள்
  • மலரும் மலையும்
  • மருமக்களின் செல்வம்
  • தேவியின் கீர்த்தனைகள்.
  • குழந்தை செல்வம்
  • கவிமணியின் உரைமணிகள்
  • தீண்டாதார் விண்ணப்பம்
  • காந்தளூர் சாலை

இறப்பு:

தனது இலக்கிய படைப்புகளினால் தமிழுக்கு தொண்டாற்றி வந்த கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 1954-ஆம் ஆண்டு செப்டம்பர் 26-ஆம் தேதி இந்த உலகத்தை விட்டு மறைந்தார். இலக்கிய படைப்புகளினால் தமிழுக்கு தொண்டாற்றிய கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஆனால் இவருக்கு சமாதி எழுப்புவதையோ சிலை அமைப்பதையோ அவர் விரும்பவில்லை. உடை, உணவு, வாழ்க்கை முறை அனைத்திலும் எளிமையைக் கடைப்பிடித்தவர் கவிமணி அவர்கள்.

மேலும் இது போன்ற வரலாற்றை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  Varalaru
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now