Krishna Jayanthi Varalaru in Tamil | கோகுலாஷ்டமி என்றால் என்ன.?
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கிருஷ்ண ஜெயந்தி/கோகுலாஷ்டமி தோன்றிய வரலாறு பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். கிருஷ்ண ஜெயந்தி/கோகுலாஷ்டமி நாள் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். இந்நாளில், கிருஷ்ணருக்கு விரதம் இருந்து வழிபட்டு வந்தால் நற்பலன்களை பெறலாம். குழந்தை இல்லாதவர்கள் இந்நாளில் விரதம் இருந்து கிருஷ்ணரை வழிபட்டு வந்தால் அடுத்த வருடத்திற்குள் அந்த கிருஷ்ணரே குழந்தையாக வந்து பிறப்பார்.
அதேபோல், சிறு குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் அணிந்து வீட்டிற்கு வரவழைத்து வழிபாடு செய்தால், அந்த கிருஷ்ணரே வீட்டிற்கு வந்து அருள் புரிவார் என்பது ஐதீகம். இப்படி பல சிறப்புகளை அளிக்கும் கோகுலாஷ்டமி இந்த ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று வருகிறது. எனவே, கிருஷ்ண ஜெயந்தி வரலாறு பற்றி நாம் அனைவருமே தெரிந்துகொள்ளும் வகையில், இப்பதிவில் கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி வரலாறு பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
கிருஷ்ண ஜெயந்தி பூஜை வீட்டில் செய்வது எப்படி.?
கிருஷ்ண ஜெயந்தி/கோகுலாஷ்டமி வரலாறு | Krishna Jayanthi History in Tamil:
தேவகிக்கும், வசு தேவருக்கும் மனம் முடித்து தன் தேரிலே அரண்மனை நோக்கி அளித்து சென்றான் கம்சன். அப்போது வானத்தில் உதித்த அசுர எறி, தேவகி வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தையினால் உன் உயிருக்கே ஆபத்து என்று கம்சனிடம் கூறியது. அதனை கேட்ட கம்சன், இதுவரை அன்பாக பார்த்துக்கொண்டு தேவகியை வெறுப்பாக பார்க்க தொடங்கினான் கம்சன். அவளை அப்போதே கொன்று விட வேண்டும் என்று நினைத்த கம்சனை வசுதேவர் தடுத்தார். தங்களுக்கு பிறக்கும் அனைத்து குழந்தைகளையும், உங்களிடமே கொடுத்து விடுகிறோம், என்னையும் என் மனைவியையும் எதுவும் செய்து விடாதீர்கள் என்று வசுதேவர் கம்சனிடம் கேட்டு கொண்டார். இதனால், மன சமாதானம் அடைந்தான் கம்சன்.
அதன், பிறகு தன் தங்கையையும் அவள் கணவனையும் ஒரு சிறையில் அடைத்து வைத்து தனது கண்காப்பிலேயே வைத்து கொண்டான். அவர்களுக்கு பிறந்த ஒவ்வொரு குழந்தையையும் தரையில் வீசி கொன்றான் கம்சன். அவர்களின் கணக்குப்படி 7 குழந்தைகள் பிறந்து அவர்களின் வாழ்க்கை முடிந்து விட்டது. அடுத்து 08 -வது குழந்தைக்காக காத்துக்கொண்டிருந்தார்கள்.
அப்போது, ஆவணி மாதம் சுக்ல பட்ச அஷ்டமி நாளில் நள்ளிரவு 12.00 மணிக்கு தேவகியின் வயிற்றில் பிறந்தார் கிருஷ்ணர். தங்களுக்கு பிறந்த குழந்தையை ரசிப்பதை மறந்து இருவரும் தரிசித்து கொண்டிருந்தார்கள். ஏனென்றால் அக்குழந்தையின் தோற்றம், ஓளி பொருந்திய தேகம் தெய்வ கடாக்ஷத்தை கண் முன்னே நிறுத்தியது. சிறிது நேரத்தில் அக்குழந்தை மகா விஷ்ணுவாக மாறி நின்றது.
நீங்கள் இருவரும், சுதவா விருச்சுவ தம்பதியாக இருந்த போது, 2000 ஆண்டுகள் என்னை நோக்கி தவம் செய்தீர்கள். அப்போது என்னையே நீங்கள் மகனாக பெற வேண்டும் என்று வரம் கேட்டீர்கள். நான் அந்த பிறவியில் விருச்சுவி கர்வா என்ற பெயரில் மகனாக பிறந்தேன். மறுபிறவியில் நீங்கள் காசியர், அதிதி தம்பதியராக இருந்தபோது, உபேந்திரவனாக பிறந்து வளர்ந்தேன்.
குழந்தை இல்லாதவர்கள் கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதம் இருந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்
இப்போது, கண்ணன் என்ற திருநாமத்தில் வளர உங்களுக்கு மீண்டும் வளர்ந்துள்ளேன். இதன் பிறகு உங்களுக்கு பிரபு இல்லை. உங்களையும் மக்களையும் கம்சனிடம் இருந்து விடுவிக்க வேண்டிய கடமை உள்ளது. அதன் பிறகு, நீங்கள் வைகுண்டம் வந்துவிட வேண்டியது தான்.
என்னை கோகுலத்தில் உள்ள யசோதைஇடம் சேர்த்து விடுங்கள். அதற்கு பதிலாக அவருக்கு பிறந்த பெண் குழந்தையை இங்கு கொண்டு வந்து விடுங்கள். அதன் பிறகு எலலாமே நல்லதாகவே நடக்கும் என்று கூறினார் மகா விஷ்ணு. எனவே, அந்த சிறையில் நள்ளிரவில் கிருஷ்ணர் அவதரித்த நாளே கோகுலாஷ்டமி, கிருஷ்ன ஜெயந்தி என்று அழைக்கப்படுகிறது. அஷ்டமி நாளில் அவதரித்தலால் கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.
இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> | Varalaru |