பாடகி லதா மங்கேஷ்கர் வாழ்க்கை வரலாறு | Singer Lata Mangeshkar History in Tamil
லதா மங்கேஷ்கர் அவர்கள் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகி ஆவார். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாக தனது தேனிசை குரலால் ஒட்டுமொத்த உலக மக்களையும் மகிழ்வித்தவர். இந்திய ரசிகர்களால் இசை குயில் என்றும் சிறப்பாக அழைக்கப்படுகிறார். இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா விருது”, “பத்ம பூஷன் விருது”, “பத்ம விபூஷன்” விருதுகளைப் பெற்றது மட்டுமல்லாமல், தேசிய விருது, தாதாசாகேப் பால்கே விருது, நான்கு முறைக்கு மேல் ஃபிலிம்பேர் விருதுகள் என மேலும் பல விருதுகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார். இன்றைய தினம் நம்மை விட்டும், இவ்வுலகை விட்டு விடைப்பெற்று கொண்ட இந்த நேரத்தில் அவரின் வாழ்க்கை பயணத்தை ஒருமுறை பார்ப்போம் வாங்க..
வீரமங்கை வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாறு |
லதா மங்கேஷ்கர் பிறப்பு காலம்:
இந்திய ரசிகர்களால் இவருக்கு இசை குயில் என்று பட்டம் வழங்கப்பட்டது. லதா மங்கேஷ்கர் அவர்கள் பண்டிட் தீனநாத் மங்கேஷ்கருக்கும், செவந்திக்கும் 1929 ஆம் ஆண்டில் செப்டம்பர் 28-ம் தேதியில் இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்திலுள்ள “இந்தூர்” என்ற இடத்தில் பிறந்தார்.
வாழ்க்கை மற்றும் கல்வி:
பாடகி லதா மங்கேஷ்கரின் தந்தை ஒரு கிளாசிக்கல் பாடகர் மற்றும் நாடக கலைஞராக இருந்தவர். இதனாலேயே தன் தந்தையிடம் 5 வயது முதல் லதா மங்கேஷ்கர் இசை கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். பிறகு, புகழ் பெற்ற அமான் அலி கான் சாகிப் மற்றும் அமநாத் கான் ஆகியோரின் கீழ் இசைப்பயிற்சி மேற்கொண்டார்.
லதா மங்கேஷ்கரின் இசை பயணம்:
லதா மங்கேஷ்கர் தனது சினிமா துறையில் முதன் முதலில் “கிதி ஹசால்” என்ற மராத்திய பாடலை 1942 ஆம் ஆண்டு பாடினார். அந்த ஆண்டிலே அவர் தந்தையை இழந்ததால் குடும்பம் மிகவும் நெருக்கடிக்கு உள்ளானது. அந்த நேரத்தில் இசையமைப்பாளர் குலாம் ஹைதர் என்பவர் “மஜ்பூர்” என்ற திரைப்படத்தில் பாட வாய்ப்பு கொடுத்தார்.
இது அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். இதனை தொடர்ந்து வந்த ‘மகால்’, ‘அந்தாஸ்’, ‘பர்சாத்’, ‘துலாரி’ போன்ற படங்கள் இவருக்கு பெரும் புகழை தந்தது.
பாடல் பாடிய குழுவினர்கள்:
லதா மங்கேஷ்கர் சினிமா துறையில் 1942 முதல் பாடத்தொடங்கிய அவர், அனில் பிஸ்வாஸ், ஷங்கர் ஜெய்கிஷன், நவ்ஷத், எஸ்.டி. பர்மன், சி. ராம்சந்த்ரா, ஹேமந்த் குமார், சலீம் சவ்திரி, கய்யாம், ரவி, சஜ்ஜத் ஹூசைன், ரோஷன், கல்யாண்ஜி, ஆனந்த்ஜி, வசந்த் தேசாய், சுதிர் பாட்கே, ஹன்ஸ்ராஜ் பெல், மதன் மோகன், மற்றும் உஷா கன்னா, ராகுல் தேவ் பர்மன், ராஜேஷ் ரோஷன், அனு மாலிக், ஆனந்த் மிலிந்த், ஷிவ் ஹரி, ராம் லட்சுமண், ஏ.ஆர் ரகுமான், இளையராஜா என எல்லா இசையமைப்பளர்களுடன் சேர்ந்து பாடல்களை பாடியுள்ளார்.
இயற்றிய ஆல்பம்:
1961-ஆம் ஆண்டில் பஜனை பாடல்கள் அடங்கிய “அல்லாஹ் தேரா நாம்” மற்றும் “பிரபு தேரா நாம்” என்ற இரண்டு ஆல்பத்தை வெளியிட்டார். 1974-ல் ‘மீராபாய்” பஜன்ஸ்’, ‘சான்வரே ரங் ராச்சி’, மற்றும் ‘உத் ஜா ரெ காக’, 2007ல் “சாத்கி” என்ற ஆல்பத்தையும் இயற்றியுள்ளார்.
2012 ஆம் ஆண்டு அவருடைய சொந்த பெயரில் (எல்.எம்) ஒரு இசை ஆல்பத்தையும் வெளியிட்டார்.
வழங்கிய விருதுகள்:
- 1969 ஆம் ஆண்டு “பத்ம பூஷன் விருது” பெற்றார்.
- 1972 ஆம் ஆண்டு பீட்டி நா பிடாய் ரெய்னா (பரிஜாய்) என்ற பாடலுக்காக தேசிய விருது பெற்றார்.
- 1974 ஆம் ஆண்டு உலக அளவில் அதிக பாடல்களை பாடியதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றார்.
- 1975 ஆம் ஆண்டு ரூதே ரூதே பியா என்ற பாடலுக்காக தேசிய விருது பெற்றார்.
- 1989 ஆம் ஆண்டு “தாதா சாஹேப் பால்கே விருது” பெற்றார்.
- 1990 ஆம் ஆண்டு யாரா சீலி சீலி என்ற பாடலுக்காக தேசிய விருது பெற்றார்.
- 1993 ஆம் ஆண்டு பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார்.
- 1996 ஆம் ஆண்டு ஸ்டார் ஸ்க்ரீன் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார்.
- 1997 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி விருது பெற்றார்.
- 1999 ஆம் ஆண்டு “பத்ம விபூஷன் விருது” பெற்றார்.
- 1999 ஆம் ஆண்டு என்.டி.ஆர் விருது மற்றும் வாழ்நாள் சாதனையாளருக்கான ஜீ சினிமா விருது பெற்றார்.
- 2001 ஆம் ஆண்டு “நூர்ஜஹான் விருது” பெற்றார்.
- 2001 ஆம் ஆண்டு “மகாராஷ்டிரா ரத்னா விருது” பெற்றார்.
- 2001 ஆம் ஆண்டு “பாரத் ரத்னா விருது” பெற்றார்.
இறப்பு:
கடந்த ஜனவரி மாதம் 26-ம் தேதி கொரோனா நோய் தொற்றின் காரணமாக மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரது வயோதிகள் காரணமாக அவருக்கு தீவிரமான சிகிச்சை அளிக்கப்படவில்லை.
பின்னர், அவருக்கு அதிகமான மூச்சு திணறல் ஏற்பட்டதால், தீவிர சிகிச்சையில் இருந்தார். அவருக்கு செயற்கை மூச்சு காற்று தான் வழங்கப்பட்டு வருகிறது என்று மருத்துவ நிர்வாகம் தகவல் தெரிவித்து இருந்தது.
இந்தியாவின் இசைக் குயில் என்று வர்ணிக்கப்படும் பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் தமது 92-வது வயதில் 06.02.2022 அன்று காலை காலமானார்.
இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> | Varalaru |