எம் ஜி ஆர் வாழ்க்கை வரலாறு | MGR History in Tamil

Advertisement

எம் ஜி ஆர் வாழ்க்கை வரலாறு கட்டுரை | M G Ramachandran History Tamil

தமிழ் மக்களால் புரட்சித் தலைவர், மக்கள் திலகம், பொன்மனச் செம்மல் என்று பல்வேறு பெயர்களால் இன்றும் மக்களால் போற்றப்படும் ஒரு மாமனிதர் எம் ஜி ஆர்  அவர்கள். ஒரு நடிகர் மக்களின் பேராதரவை பெற்று ஒரு அரசியல் தலைவராகவும், முதலைமைச்சராகவும் முடியும் என்றால் அது மிகப்பெரிய சாதனை தான். அவர்  இந்த சாதனையை ஒரே நாளில் நிகழ்த்தி விடவில்லை. பல்லாண்டு கால கடின உழைப்பு அதன் பின்னணியில் இருந்திருக்கிறது. நாம் இந்த பதிவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

பிறப்பு: 

  • MGR History in Tamil: இவர் 1917-ம் ஆண்டு ஜனவரி 17-ம் நாள் இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தார். இவருடைய பெற்றோர் பெயர் மேலக்காடு கோபால மேனன், சத்யபாமா ஆகும். இவருடன் உடன் பிறந்தவர்கள் இரண்டு பேர். ஒரு சகோதரி, ஒரு சகோதரன். எம்.ஜி.ஆருக்கு இரண்டரை வயதான போது தந்தை மறைந்துவிட்டார், தந்தையின் பிரிவை தாங்க முடியாமல் சகோதரியும் மறைந்துவிட்டாள்.
  • தொடர் இறப்பை கண்டு எம்.ஜி.ஆரின் தாயார் கவலையுடன் இருந்தார், இருப்பினும் குழந்தையை நாம் தான் வளர்க்க வேண்டும் என்று எண்ணி மனதில் தைரியத்தை வளர்த்து கொண்டு இரண்டு பிள்ளைகளையும் வளர்ப்பதற்காக கும்பகோணத்திற்கு சென்றார்.
  • குடும்பத்தில் நிலவிய வறுமை காரணத்தால் இரண்டு மகன்களாலும் படிப்பை தொடர முடியவில்லை. இதனால் இருவரும் நாடகத்தில் நடித்து பொருள் ஈட்டி வந்தனர். நாடகத்தில் எம்.ஜி.ஆரின் கடின உழைப்பு தான் இவரை திரையுலகில் ஒரு சகாப்தமாக உருவாக்கியுள்ளது.

திரைப்பயணம்:

  • M G R History in Tamil: திரைத்துறையில் இவருடைய திறமையின் மூலம் வெளிவந்த முதல் படமான சதிலீலாவதி இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. அதற்கு பிறகு வந்த படங்கள் யாவும் இவருக்கு வெற்றியை கொடுக்க கூடியதாகவே இருந்தது.
  • எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த படம் ராஜகுமாரி. இவர் மொத்தம் 136 படங்கள் நடித்துள்ளார். இவருடைய நடிப்பிற்கு தமிழக மக்கள் அனைவரும் அடிமை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு எம்.ஜி.இராமச்சந்திரனின் நடிப்பு இருந்தது.

திருமணம்:

  • எம் ஜி ஆர் வாழ்க்கை வரலாறு: இவருடைய முதல் மனைவி தங்கமணி என்பவர் ஆவார். உடல் நலக்குறைவால் 1942-ம் ஆண்டு தங்கமணி இறந்துவிட்டார், அவருடைய மறைவிற்கு பிறகு சதானந்தவதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். 1962-ம் ஆண்டு சதானந்தவதியும் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர் அவர்கள் ஜானகி என்பவரை மணம் முடித்தார்.

அரசியல்:

  • அறிஞர் அண்ணா மீது உள்ள பற்றால் எம்.ஜி.ஆர் அரசியலில் இணைந்து மக்களுக்கு தொண்டுகளை ஆற்ற தொடங்கினார். சினிமாவில் இவருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு காரணமாக கட்சியில் உள்ள முக்கியமான பொறுப்புகள் இவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

முதலமைச்சர்:

  • MGR History in Tamil: பின்னர் அண்ணா மறைவிற்கு பிறகு கலைஞர் கருணாநிதி அவர்கள் முதலமைச்சர் ஆனார். கலைஞருக்கும், எம்.ஜி.ஆருக்கும் இருந்த வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆர் தி.மு.கா-வை விட்டு நீங்கி அ.தி.மு.க எனும் புதிய கட்சியை தொடங்கினார். எம்.ஜி.ஆருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு மூலம் 1978-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சரானார்.

நலத்திட்டங்கள்:

  • ஆட்சிக்காலத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் பல நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். சத்துணவு திட்டம், இலவச சீருடை திட்டம், இலவச மின்சாரத் திட்டம், பெண்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இட ஒதுக்கீடு திட்டம் போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.

விருதுகள்:

  • எம் ஜி ஆர் வாழ்க்கை வரலாறு: 1988-ம் ஆண்டு பாரத ரத்னா விருதை பெற்றார்.
  • கிருபானந்த வாரியார் என்பவரால் பொன்மனச் செம்மல் என்ற சிறப்பு பெயரை பெற்றார். புரட்சி நடிகர், மக்கள் திலகம், வாத்தியார், புரட்சித்தலைவர், இதய தெய்வம் என பல்வேறு சிறப்பு பெயர்களையும் பெற்றுள்ளார்.

மறைவு:

  • M.G.R Life History in Tamil: உலகத்திற்கு பல நன்மைகளை செய்த எம்.ஜி.ஆர் அவர்கள் உடல் நலக்குறைவால் டிசம்பர் 24-ம் தேதி 1987 -ம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார். இவரின் இறப்பை கண்டு தமிழக மக்கள் மீளா துயரத்தில் இருந்தனர். மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் அடக்கம் செய்யப்பட்ட இடம் நினைவிடமாக உள்ளது.
காமராஜர் வாழ்க்கை வரலாறு
பகத்சிங் வாழ்க்கை வரலாறு

 

இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> Varalaru
Advertisement