மொஹரம் பண்டிகை என்றால் என்ன.? அதன் வரலாறு என்ன.?

Advertisement

What is Muharram Festival in Tamil | மொஹரம் பண்டிகை என்றால் என்ன.? | Muharram Meaning in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மொஹரம் பண்டிகை என்றால் என்ன.? அதன் வரலாறு என்ன.? என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். பெரும்பாலும் இந்துக்களுக்கு இஸ்லாமிய பண்டிகை பற்றி அந்த அளவிற்கு தெரியாது. இஸ்லாமிய பண்டிகைகளில் ரமலான், பக்ரீத் பண்டிகைகள் மட்டுமே பெரும்பாலும் தெரியும். ஆனால், இஸ்லாமியர்கள் இதனை தவிர்த்து பல பண்டிகைகள் கொண்டாடடி வருகிறார்கள். அவற்றில் ஒன்று தான் மொஹரம் பண்டிகை.

மொஹரம் பண்டிகை பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் மொஹரம் பண்டிகை பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ளலாம் வாங்க.

மொஹரம் பண்டிகை என்றால் என்ன.?

 Muharram History in Tamil

முஃகர்ரம் அல்லது முகரம்/மொஹரம் பண்டிகை என்பது இஸ்லாமியர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமாக மொஹரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இசுலாமிய ஆண்டின் நான்கு புனித மாதங்களில் முஹர்ரம் பண்டிகையும் ஒன்று. அதாவது, முஹர்ரம், ரஜப், துல் கஃதா மற்றும் துல் ஹஜ் ஆகிய நான்கு மாதங்களும் புனித மாதங்களாகும்.

மொஹரம் பண்டிகை இந்த ஆண்டு 2024 இந்தியாவில் ஜூலை 17 ஆம் தேதியும், அரபு நாடுகளில் ஜூலை 18 ஆம் தேதியும் கடைபிடிக்கப்படுகிறது. இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதமான மொஹரம் மாதத்தின் 10 -வது ஆஷூரா மொஹரம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

மொஹரம் பண்டிகை வாழ்த்துக்கள்

Muharram History in Tamil | மொஹரம் பண்டிகை வரலாறு:

இஸ்லாமியர்கள் இரண்டு வகை பிரிவினர் உள்ளனர்.  ஒன்று ஷியா மற்றொன்று சன்னி பிரிவு இஸ்லாமியர்கள். இந்த இரண்டு பிரிவினர்களும் இருவேறுபட்ட காரணங்களுக்காக மொஹரம் தினத்தை கொண்டாடுகிறார்கள்.

ஷியா பிரிவினர்கள், கர்பாலா போரில் முகம்மது நபியின் பேரனான ஹுசைன் இப்னு அலி கொல்லப்பட்டதை எண்ணி துக்க நாளாக மொஹரம் பண்டிகையை கடைபிடிக்கின்றனர். மறுபுறம், சன்னி பிரிவினர் எகிப்திய அரசரை வெற்றி கொண்ட நாளாக இந்த மொஹரம் பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

இந்த புனித மாதத்தில் சண்டைகள் இடுவதும், புனித போர் புரிவதற்கும் தடைசெய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்கள், இந்த மாதத்தின் 09 மற்றும் 10 ஆம் நாளில் அல்லது 10 நாள் மட்டும் உண்ணா நோன்பு இருப்பார்கள். இந்த 10 ஆம் நாள் தியாகத் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அரபு மொழியில் ஆசூரா என்றும் கொண்டாடப்படுகிறது.

இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> Varalaru
Advertisement