Mukund Varadarajan Story in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க. முகுந்த் வரதராஜன் ஒப்பில்லா வீரமும், தியாகமும் நிறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை பயணம் தான் அமரன் என்ற படம். மேஜர் முகுந்த் வரதராஜன் என்பவர், இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்தவர். இவர் மறைவிற்கு பிறகு, அசோக சக்கரம் விருது வழங்கப்பட்டது.
சாகும்வரை இந்தியாவிற்காக சண்டையிட்ட முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை கதை பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம்.
Mukund Varadarajan in Tamil:
பிறப்பு:
1983 ஆம் ஆண்டு சென்னையை அடுத்த தாம்பரத்தில் ஏப்ரல் 12 ஆம் தேதி, வரதராஜன் – கீதா தம்பதியருக்கு மகனாய் பிறந்தவர் முகுந்த் வரதராஜன். இவருக்கு நித்யா, ஸ்வேதா என இரண்டு சகோதரிகள். இவரது குடும்பத்தில் தாத்தா மற்றும் இரண்டு மாமாக்களும் இராணுவத்தில் பணியாற்றியவர்கள். இதுவே, இவரை ராணுவத்தில் பணியாற்ற தூண்டியது.
கல்வி வாழ்க்கை:
முகுந்த் வரதராஜன் அவர்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயாவில் வணிகவியல் இளங்கலைப் பட்டம் பெற்றார். மேலும், சென்னை கிறித்துவக் கல்லூரியில் இதழியல் பட்டய படிப்பும் முடித்தார்.
திருமண வாழ்க்கை:
கேரளாவை சேர்ந்த இந்தூ ரெபேக்கா வர்கீஸ் என்ற பெண்ணை காதலித்து 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்ஷியா என்ற பெண் குழந்தையும் உள்ளது.
இராணுவ வாழ்க்கை:
இந்திய ராணுவத்தில் பணியாற்றி, இந்தியாவுக்காக பல சாகசங்களை மேற்கொண்டார். முக்கியமாக 2014 ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலை முறியடிப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இந்த சண்டைக்கு பிறகு, நன்றாக இருந்த முகுந்த் வரதராஜன் அவுட்ஹவுஸைத் தாண்டும்போது சுருண்டு விழுந்தார்.
Mukund Varadarajan Death Reason in Tamil:
இராணுவ சண்டையில், உடலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக சுருண்டு கீழே விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே இவர் இறந்தார்.
விருதுகள்:
முகுந்த் வரதராஜனுக்கு, மிக உயரிய வீரதீரச் செயல்களுக்காகவும் தன்னலமற்ற உயிர்த்தியாகத்திற்காகவும் வழங்கப்படும் விருதான அசோகச் சக்கரம் (Ashoka Chakra) விருது வழங்கப்பட்டது. அதே சமயம், நாட்டின் மிக உயர்ந்த அமைதிக்கால வீர விருதான சௌரிய சக்ரா விருதும் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்து அசோக சக்கரம் விருது பெற்ற நான்காவது வீரர் முகுந்த் வரதராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> | Varalaru |