ஓணம் பண்டிகை வரலாறு பற்றி தெரியுமா.?

Advertisement

ஓணம் பண்டிகை வரலாறு | Onam Festival History in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஓணம் பண்டிகை வரலாறு பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். நாம் கொண்டாடும் ஒவ்வொரு விழாவிற்கும் ஒரு வரலாறு இருக்கும். ஆனால், அதனை பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக நம் பொதுநலம் பதிவில் ஒவ்வொரு விழாவிற்கும் உரிய வரலாறு பற்றி பதிவிட்டு வருகிறோம்.

அந்த வகையில் ஒன்றையே பதிவில் ஓணம் பண்டிகை வரலாறு பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். ஓணம் அல்லது ஆவணி திருவோணம் பண்டிகை என்பது, இந்தியாவில் தென் தமிழகத்திலும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் விழா ஆகும். அதாவது, ஆவணி மாதத்தில் வரக்கூடிய திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது தான் ஓணம் பண்டிகை.

கேரளாவின் ஓணம் ஸ்பெஷல் காரம் மற்றும் புளிப்பு சுவைக்கொண்ட இஞ்சிப்புளி

ஓணம் பண்டிகை வரலாறு:

ஓணம் பண்டிகை ஆனது, கொல்லவர்ஷம் எனும் மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை தொடர்ந்து 10 நாட்களை கொண்டாடப்படுகிறது. சங்ககால ஏடுகளில்  விஷ்ணுவின் பிறந்தநாளாகவும் வாமணன் அவதரித்ததும் ஓணம் பண்டிகை அன்றுதான் என கூறப்படுகிறது. இப்பண்டிகை ஆனது,  வழக்கமாக ஆகஸ்ட் நடுப்பகுதியில் தொடங்கி செப்டம்பர் நடுப்பகுதி வரை நீடிக்கும் இந்த ஆண்டு 2024 செப்டம்பர் 06 ஆம் தேதி முதல் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.

 onam pandigai varalaru

 மகாபலி சக்கரவர்த்தியின் ஆனவத்தினை அடக்குவதற்காக, திருமால் வாமனராக அவதாரம் எடுத்து, மகாபலி சக்ரவர்த்தியிடம் மூன்று அடி மண் தானமாக கேட்டார், முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, அவரை அழிக்க முற்படும் சமயம், மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என்று கூறியதை ஏற்று வாமனர் அருள் புரிந்தார் என்றும், அந்த நம்பிக்கையின் அடிப்படையில் மக்களை காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளை ஓணம் எனும் திருவோணத் திருநாளாகவும், கொண்டாடுகின்றனர்.ஓணம் பண்டிகை ஒரு அறுவடையின் திருவிழா ஆகும். இது உயிரோட்டத்தையும், அழகையும் குறிக்கிறது. 

ஓணம் பண்டிகை வரலாறு

ஓணம் பண்டிகை அன்று பல்வேறு உணவு ரெசிபிகள் தயார் செய்யப்படும். அன்றைய தினத்தில் “ஓண சாத்யா” 64 வகையான உணவுகள் செய்வார்கள். அதுமட்டுமில்லாமல், ஓணம் பண்டிகை அன்று, அனைவரது வீட்டிலும் “அத்தப்பூ” என்ற பூக்கோலம் போடுவார்கள். பெண்கள், கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை அணிந்தும் பாடல்கள் பாடியும் இந்த விழாவினை கொண்டாடுவார்கள்.

ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்

இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> Varalaru
Advertisement