பாவை நோன்பு வரலாறு..! | Paavai Nonbu Varalaru In Tamil..!
மார்கழி மாதத்தில் கன்னி பெண்கள் அதிகாலை எழுந்து நீராடி வீட்டு வாசலில் கோலம் போட்டு பெருமாளை வழிபடுவார்கள். மேலும் கன்னி பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்றும் தங்களுக்கு பிடித்த கணவன் அமைய வேண்டும் என்றும் பாவை நோன்பை கடைபிடிப்பார்கள். இன்றைய பதிவில் பாவை நோன்பின் வரலாறு பற்றி தெரிந்தகொள்ளலாம்.
மார்கழி மாதம் என்றாலே சிறப்பு தான் பெண்கள் அதிகாலை எழுந்து கோலம் போடுதல் அறிவியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் நன்மை விளைவிக்கும். மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் ஆகும். பெண்கள் பெருமாள் கோவில்களுக்கு சென்று பெருமாளை வழிபட்டு திருப்பாவை படிப்பார்கள். பெண்கள் கடைபிடிக்கும் பாவை நோன்பின் வரலாறு பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
Paavai Nonbu Endral Enna | Paavai Nonbu Procedure in Tamil
பாவை நோன்பின் வரலாறு:
தேவர்கள் கண் விழித்து பகவானை வழிபடும் பிரஹம முகூர்த்த நேரம் தான் நமக்கு மார்கழி மாதம் ஆக வருகிறது. தேவர்கள் பூஜை செய்யும் இந்த மார்கழி மாதத்தில் நம்மளும் அதிகாலை எழுந்து இறைவனை வழிபட்டு பூஜை செய்தால் 1000 வருடம் பூஜை செய்த புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. கிருஷ்ணர் மாதங்களில் நான் மார்கழி என்று சொல்லி இருக்கிறார், ஏனென்றால் பிரேதா யுகத்தில் சீதா தேவியும், துவாபர யுகத்தில் ராதையும் கோபியர்களும், ருக்மிணியும் கண்ணனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று காத்தியாயினி வழிபட்டு இந்த மார்கழி மாதத்தில் விரதம் இருந்தார்கள்.
கிருஷ்ணர் அருஜுனனுக்கு கீதையை உபதேசித்து மாபெரும் மஹாபாரத யுத்தம் நடந்ததும் இந்த மார்கழி மாதத்தில் தான். மார்கழி வளர்பிறை 11 ஆம் தேதி தான் அருஜுனனுக்கு கிருஷ்ணர் கீதையை உபதேசம் செய்தார். இந்த வருடம் டிசம்பர் 11 ஆம் தேதி கீதை ஜெயந்தி வருகிறது.
யார் இந்த ஆண்டாள்?
தமிழ்நாட்டில் வைணவ சமயத்தை மக்களுக்கு உணர்த்தியவர்கள் தான் ஆள்வார்கள். 12 ஆழ்வார்களில் ஒருவர் தான் விஷ்ணு சித்தர் என்கிற பெரியாழ்வார். ஸ்ரீவில்லிபுத்தூரில் நந்தவனத்தில் துளசி செடிக்கு அடியில் இருந்து ஒரு குழந்தையை எடுத்து பெரியாழ்வார் வளர்க்கிறார். பெரியாழ்வார்க்கு குழந்தை இல்லாததால் அந்த குழந்தைக்கு கோதை என்று பெயர் சூட்டி அவளை வளர்த்து வருகிறார். சிறிய வயதில் இருந்து கோதைக்கு பெரியாழ்வார் வைணவ சமயம், கண்ணன் உடைய லீலைகள், பெருமாள் ஆகிய கதைகளை கூறி வளர்க்கிறார். கோதையை ஆண்டாள் என்றும் அழைப்பர்.
அதை கேட்டு வளர்ந்து வந்த கோதைக்கு கண்ணன் மேல் காதல் வசப்படுகிறாள். கண்னையே கணவராக நினைத்து வாழ்ந்து வருகிறாள் கோதை. கோதையும் பெரியாழ்வாரும் கோவிலில் அனைத்து இடங்களுக்கும் சென்று கோவிலை அழகு படுத்தி கோவிலை பராமரிப்பார்கள். இதனால் ஆண்டாள் கோவில் கற்பகிரஹம் வரைக்கும் செல்வாள்.
நந்தவனத்தில் இருந்து பூக்களை பறித்து மாலை கோத்து பெருமாளுக்கு படைப்பதை பெரியாழ்வார் வழக்கமாக கொண்டிருந்தார். அப்படி மாலை கோக்கும் பொழுது ஆண்டாள் நாம் கண்ணனுக்கு ஏற்றவளா என்று அந்த மாலையை எடுத்து அவள் அணிந்து பார்ப்பாள். மாயக்கண்ணனும் அதை பார்த்து சிரிப்பார். இதே போல் தினமும் மாலையை ஆண்டாள் அணிந்து பார்த்து விட்டு பெரியாழ்வார்க்கு தெரியாமல் மாலையை கழட்டி வைத்து விடுவாள். அந்த மாலையை பெரியாழ்வார் பெருமாளுக்கு போடுவார்.
தினமும் இதே வழக்கமாக நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் ஆண்டாள் மலையை அணிவதை பெரியாழ்வார் பார்த்துவிட்டு ஆண்டாளை திட்டிவிட்டு வேறு மாலையை பெருமாளுக்கு போட்டார். அன்று இரவு பெருமாள் பெரியாழ்வார் கனவில் தோன்றி ஆண்டாள் அணிந்து குடுத்த மாலை தான் எனக்கு வேண்டும் என்று கூறியிருக்கிறார். உடனே பெரியாழ்வாரும் ஆண்டாள் அணிந்த மாலையை தான் பெருமாளுக்கு படைத்தார். இதனால் ஆண்டாளை சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்றும் அழைப்பர்.
ஆண்டாள் தமிழில் இரண்டு புக்தகங்களை எழுதியிருக்கிறார் திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய புக்தகங்களை எழுதி இருக்கிறார்.
Paavai Nonbu Varalaru In Tamil:
மார்கழி மாதம் முழுவதும் கோபியர்கள் கண்ணனை கணவனாக அடைய காத்தியாயினியை வழிபட்டது போல் ஆண்டாளும் பெருமாளை அடைய அதிகாலை நீராடி கோலம் போட்டு வைகுண்ட பெருமாளை அடைய திருப்பாவையை பாடி பாவை நோன்பு மேற்கொள்கிறாள்.
ஆண்டாளுக்கு திருமணம் வயது வந்த பிறகு பெரியாழ்வார் திருமணம் செய்ய எண்ணினார். சிறிய வயதில் ஆண்டாள் பெருமாளை தான் திருமணம் செய்து கொள்வாள் என்று கூறியதை விளையாட்டாக நினைத்த பெரியாழ்வார். ஆண்டாள் திருமணம் வயது வந்த பிறகும் பெருமாளை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருக்கிறார். பெரியாழ்வார் மிகவும் குழப்பம் அடைந்து சோர்வாக இருந்தார்.
அப்பொழுது பெருமாள் பெரியாழ்வார் கனவில் தோன்றி ஆண்டாளை மணப்பெண் போல் அலங்கரித்து திருவரங்கத்துக்கு அழைத்து வர சொல்லியிருக்கிறார். பெரியாழ்வாரும் ஆண்டாளை ஸ்ரீவில்லிபுத்தூரிலுந்து ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து சென்று இருக்கிறார். கோவில் உடைய கருவறைக்குள்ளே சென்ற ஆண்டாள் பெருமாள் உடன் கலந்துட்டாள். இதை பார்த்து பதட்டம் அடைந்த பெரியாழ்வாரிடம் பெருமாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெருமாளும் ஆண்டாளும் காட்சி தருவதாக கூறுயிருக்கிறார்.
இதை தான் பாவை நோன்பு என்று கன்னி பெண்கள் தங்களுக்கு பிடித்த கணவனை நினைத்து பாவை நோன்பு இருக்கிறார்கள். கன்னி பெண்கள் அனைவரும் அதிகாலை எழுந்து நீராடி கோலம் போட்டு திருப்பாவை பாடி பாவை நோன்பு இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
திருப்பாவை பாடல் வரிகள் | Thiruppavai in Tamil
இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> | Varalaru |