முதலாம் ராஜராஜ சோழனின் வரலாறு

raja raja cholan varalaru in tamil

ராஜராஜ சோழன் வரலாறு

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் முதலாம் ராஜராஜ சோழனின் வரலாறு பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். இன்றும் இந்த ராஜராஜ சோழனை பற்றி நம் வரலாறு பாடப்புத்தகங்களில் இன்னும் இடம் பெற்று தான் வந்துகொண்டு இருக்கிறது. இந்த ராஜராஜ சோழன் தஞ்சையை ஆண்ட மன்னர் என்றும் பெருமையுடன் அழைக்கப்படுகிறார், மேலும் இவருடைய படைப்புகள், சிறப்பு பெயர்கள், வாழ்க்கை நிகழ்வுகள் போன்றவற்றை நம் பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

கரிகால் சோழன் வரலாறு

ராஜராஜ சோழன் பிறப்பு:

முதலாம் ராஜராஜ சோழன் அவர்கள் சுந்தர சோழன் ஆகிய இரண்டாம் பராந்தகன் வானவன் மாதேவிக்கும் கிபி 585 ஐப்பசித் திங்கள் 25 ஆம் நாள் சதய நன்னாளில் பிறந்தவராவார். இவருடைய இயற்பெயர் “அருண்மொழி தேவர்” என்றும் அழைக்கப்படுகிறார். இவர் கிபி 985 ஜூன் திங்கள் இருபத்தி ஐந்தாம் நாள் அரசு கட்டில் ஏறினான். அதன் பிறகு இவர் தந்தையுடன் இருந்து ஆட்சியை பெற்றுருக்கிறார். ஆட்சியை பெற்றவுடன் அறிவுத் தெளிவும், அரசாங்க விவேகமும், நிர்வாகத் திறமையும் போர் அனுபவம் பெற்றிருந்த  ராஜராஜ சோழன் புதிய சகாப்தங்களையும் படைத்தார்.

ராஜராஜ சோழனின் ஆட்சி காலத்தில் சோழருடைய வரலாற்றில் புதிய துருப்புமுனைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதன் பிறகு இவர் சோழர்களின் இரண்டாவது பேரரசுகளையும் உருவாக்கினார்.

ராஜராஜ சோழன் மனைவிகள்:

ராஜராஜ சோழன் அவர்கள் பல பெண்களையும் திருமணம் செய்திருக்கிறார், ஆனால் இவர் பல பெண்களையும் திருமணம் செய்திருந்தாலும் இவருடைய பட்டத்து அரசி “உலகமகாதேவி” ஆவர். இவருடைய மற்ற மனைவிகளின் பெயர்கள் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது உலகமகா தேவியார், திட்டைப்பிரான் மகள் சோழ மாதேவியார், அபிமானவல்லியார், திரைலோக்கிய மாதேவியார், பஞ்சவன் மாதேவியார், பிருதிவி மாதேவியார், இலாட மாதேவியார், மீனவன் மாதேவியார், நக்கன் தில்லை அழகியார், காடன் தொங்கியார், கூத்தன் வீராணியார், இளங்கோன் பிச்சியார் ஆகியோர்கள் ராஜராஜ சோழனின் மனைவிகள் ஆவார்கள். 

ராஜராஜ சோழன் சிறப்புகள்:

ராஜராஜ சோழன் அவர்கள் சோழர் வரலாற்றுக்கு அடித்தளமிட்ட விஜயாலய சோழர் முத்தரையர்களிடமிருந்து தஞ்சாவூரை கைப்பற்றி, தஞ்சாவூரை தலைநகரமாக மாற்றி கொண்டு ஆட்சி புரிந்துலுள்ளார். இவர் கடல் தண்டி நாட்டை கைப்பற்றிய முதல் மன்னன் என்றும் அழைக்கபடுக்கிறார்.

இவர் பல போர்களிலும் கலந்து கொண்டு வெற்றிபெற்று சோழர்களின் ஆட்சிக்கு நிலைத்தன்மையையும் கொடுத்துள்ளார். இவர் ஆட்சிக்கு வந்தபிறகு சோழர் மரபும்,  ராணுவமும் நிலைபெறச் செய்துள்ளார். அரசாங்க அமைப்பு, தரைப்படையும், கடற்படை போன்றவை  ஏற்படுத்தப்பட்டு  உள்ளது.

ராஜராஜ சோழனின் ஆட்சியின் போது ஓவியம், சிற்பம், நாடகம், நடனம், இசை, இலக்கியம் போன்றவை நன்றாக வளர்ச்சியடைய தொடங்கியது.  அதேபோல் இவரது காலத்தின் போது  தேவராத்தியின் திருமுறைகளும்  நாடு முழுவதும் வளர்ச்சியடைய தொடங்கியது.

சோல பேரரசுகளை அதிகமாக உருவாக்குவதற்காக பெரும்படையை திரட்டியவர் ராஜராஜ சோழனே ஆவர். இவர் திரட்டிய படைகள் அனைத்தும் இவர் நினைத்தது போல இவருக்கு பல சிறப்புகளையும், பாராட்டுகளையும் பெற்று கொடுத்தது.

ராஜராஜ சோழனின் வேறு பெயர்கள்:

ராஜராஜ சோழன் அவர்கள் நாற்பதுக்கும் மேற்பட்ட பெயர்களை கொண்டுள்ளார், இவர் இராஜராஜன், மும்முடிச் சோழன், செயங்கொண்டான், அருண்மொழி என்ற பெயர்கள் நகரங்களின் பெயர்களாக மாறியதோடு மற்றுமின்றி வளநாடுகளும் மண்டலங்களும் இம்மன்னனின் பெயராலேயே அறியப்பட்டு உள்ளது.

 • அழகிய சோழன்
 • மும்முடிச்சோழன்
 • சோழேந்திர சிம்மன்
 • ராஜ மார்த்தாண்டன்
 • ராஜேந்திர சிம்மன்
 • ராஜ விநோதன்
 • உத்தம சோழன்
 • உத்துக துங்கன்
 • உய்யக் கொண்டான்
 • உலகளந்தான்
 • கேரளாந்தகன்
 • சண்ட பராக்கிரமன்
 • சத்ருபுஜங்கன்
 • சிங்கனாந்தகன்
 • சிவபாத சேகரன்
 • சோழகுல சுந்தரன்
 • காந்தளூர் கொண்டான்
 • சோழநாராயணன்
 • அபயகுலசேகரன்
 • சோழ மார்த்தாண்டன்
 • திருமுறை கண்ட சோழன்
 • தெலிங்க குலகாலன்
 • நித்ய விநோதன்
 • பண்டித சோழன்
 • பாண்டிய குலாசனி
 • பெரிய பெருமாள்
 • மூர்த்தி விக்கிரமா பரணன்
 • ஜன நாதன்
 • ஜெயகொண்ட சோழன்
 • சத்திரிய சிகாமணி
 • கீர்த்தி பராக்கிரமன்
 • அரித்துர்க்கலங்கன்
 • அருள்மொழி
 • ரணமுக பீமன்
 • ரவி வம்ச சிகாமணி
 • ராஜ பாண்டியன்
 • ராஜ சர்வக்ஞன்
 • ராஜராஜன்
 • ராஜ கேசரிவர்மன்

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் கட்டியவர்:

ராஜராஜ சோழன் அவர்கள் மிகவும் தீவிரமான சிவன் பக்தர் என்பதால் தஞ்சையில் வரலாறு நிலைத்து நிற்கும் அளவிற்கு தஞ்சை பெரிய கோவிலை கட்டி வைத்தார்.

இந்த கோவில் ஆனது தமிழர் கட்டிட கலையின் உயர்வுக்கு சான்றாக உள்ளது என்றும் கருதப்படுகிறது. இந்த கோவில் ஆனது தமிழகத்தில் பெரும் சுற்றுலாத்தலமாகவும் அமைந்துள்ளது.

1005 ஆண்டு எழுப்பப்பட்ட கோவில் 1010 ஆம் ஆண்டு  கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலுல் முன்புறம் மிகவும் பெரிதான சிவலிங்கமும் உள்ளது, இது உலகிலோயே மிக பெரிய சிவலிங்கத்தை கொண்ட கோவில் என்றும் பெருமையாக அழைக்கபடுக்கிறது.

இந்த கோவிலின் கட்டிட அமைப்புகள் முழுவதும் தமிழ் மொழியை முக்கியத்துவமாக கொண்டு கட்டப்பட்டுள்ளது, அதாவது மெய்யெழுத்துக்கள் 18 என்பதனால் 18 அடி உயரத்தில் சிவலிங்கமும், உயிரெழுத்து 12 என்பதனால் லிங்கம் 12 அடி உயரத்திலும்⸴ உயிர்மெய் எழுத்துக்கள் 216 என்பதனால் கோபுரத்தின் உயரம் 216 அடி உயரத்திலும் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil