சபரிமலை ஐயப்பன் வரலாறு | ayapan varalaru
ஐயப்பன் பக்தர்கள் கார்த்திகை மாதம் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை வழிபடுவார்கள்.ஐயப்பன் வரலாறு என்ன என்பதை பற்றி இந்த பதிவில்பார்க்கலாம்.ஐயப்பன் பக்தர்கள் கடும் விரதம் இருந்து மாலை அணிந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வார்கள்.ஐயப்பன் சாமிக்கு முதல் தடவை மாலை அணிபவர்களை கன்னிசாமி என்று கூறுவார்கள்.
மேலும், மகிஷாசுரன் என்ற அரக்கன் கடும் தவம் இருந்து தன்னை யாரும் அழிக்க கூடாது என்ற வரம் பெற்றான்.முப்பெரும் தேவியர் சண்டிகாதேவி என்னும் அவதாரம் எடுத்து மகிஷாசுரனை வதம் செய்தனர். அந்த வகையில் மகிஷி என்ற அரக்கியின் கொடுமைகளில் ரிஷிகளை காப்பாற்ற சிவபெருமானும் விஷ்ணுவும் மோகினி அவதாரம் இணைத்து ஐயப்பனை படைத்தார். அந்த வகையில் ஐயப்பனின் வரலாறு பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க…..
மணிகண்டன் பிறப்பு :

மகிஷாசுரனி சகோதரி மகிஷி தன் சகோதரன் கொள்ளபட்டதற்கு கடும் தவம் இருந்தால். ஒரு ஆணுக்கும் இன்னொரு ஆணுக்கும் பிறகும் குழந்தையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும் என்ற வரம் பெற்றால் .
மகிஷியை அளிப்பதற்காக ஐயப்ப அவதாரத்தை விஷ்ணு சிவ பெருமான் உருவாக்கினார். பாற்கடலை கடைந்த போது அசுரர்களை மயக்க திருமால் மோகினி அவதாரம் எடுத்தார். அவர் அழகை கண்டு பரவசம் அடைந்த சிவன் அவரை தழுவினார். இதனால் சிவ விஷ்ணுவின் ஆற்றல் கொண்ட தர்மசாஸ்தா அவதரித்தார்.
பந்தள மன்னர் ராஜசேகரன் தனக்கு குழந்தை இல்லாமல் இருந்து வந்தார். அவர் தனக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று சிவனிடம் தினமும் மனம் உருகி வேண்டினார்.
மார்கழி மாதம் உத்திர நட்சத்தினத்தன்று பந்தள மன்னர் காட்டுக்கு சென்றபோது அங்கு கடந்த ஒரு குழந்தையை கண்டெடுத்தார். அந்த குழந்தையை அரண்மனைக்கு எடுத்துவரும்போது முதியவர் வடிவில் வந்த திருமால் அந்த குழந்தைக்கு கனகமணிமாலை அணிந்து மணிகண்டன் என்னும் பெயரை வைத்தார்.
ஐயப்பனின் திறமை:
குருகுலத்தில் சேர்க்கப்பட்ட மணிகண்டன் அனைத்து கலைகளையும் தேர்ச்சிபெற்றார். அப்போது குருவின் வாய் பேச முடியாத மகனை பேச வைத்து அற்புதம் செய்தார்.
இந்த நிலையில் ராணிக்கு அழகான ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு ராஜராஜன் என்னும் பெயர் வைக்கப்பட்டது. மன்னர் தன் மூத்த மகனான மணிகண்டனுக்கு பட்டம் சூட்ட விரும்பினார்.
ராணி தலைவலி வந்தது போல் நடித்தால்.புலி பாலை கொண்டுவந்தால் தான் ராணியை காப்பற்ற முடியும் என்று மருத்துவரை கூற வைத்தனர். புலி பாலை யார் கொண்டு வருவது என்று அனைவரும் யோசித்து கொண்டிருந்தனர். அப்போது மணிகண்டன் புலிப்பாலை நான் கொண்டு வருகிறேன் என்றான்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஏன் பெண்கள் போகக்கூடாது தெரியுமா.?
மணிகண்டனுக்கு, மகிஷிக்கும் நடந்த போர்:
காட்டுக்குள் மணிகண்டனுக்கு மகிஷிக்கும் பெரும் போர் நடந்தது. மகிஷியை மணிகண்டன் அம்பு ஏய்தி வீழ்த்தினார். தன்னை வீழ்த்தியது ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த ஒருவன் என்பதை உணர்ந்த மகிஷி மறுஉருவம் பெற்றால்.
ஐயப்பனை திருமணம் செய்ய விரும்பினால் ஆனால் ஐயப்பன் பிரம்மச்சாரியாக இருப்பதாக கூறி ஐயப்பன் அவளை இடது தோலில் தூரமாக நிலைகொள்ளும்படி கூறினாள். அவரே மஞ்சமாதா என்று அழைக்கப்படுகிறார்.
அதன்பிறகு, புலி மீது அமைர்ந்து பந்தள நாட்டு அரண்மனைக்கு வந்தார் அதனை கண்டு அங்கு இருந்த அனைவரும் கை கூப்பி வணங்கினர்.
தெய்வ பிறவி :
12 வயது முடிந்ததும் தான் ஒரு தெய்வ பிறவி என்பதை பந்தள மன்னர் ராஜசேகரனுக்கு ஐயப்பன் உணர்த்தினார். தனக்கு சபரிமலையில் ஒரு ஆலையம் கட்ட உத்தரவிட்டார்.
சபரிமலையில் தான் ஒரு அம்பை எய்வதாகவும் அது எங்கு நிக்கிறதோ அங்கு ஒரு ஆலயத்தை அமைக்குமாறு உத்தரவிட்டார்.
அதன் படி பந்தள ராஜ ஐயப்ப கோவிலை காட்டினார். பரசுராமர் உதவியோடு மகரசங்கர நாளில் சனிக்கிழமையன்று கோவில் கட்டி திறக்கப்பட்டது. ஆண்டுதோறும் இடிமுடி கட்டி தம்மை கணவரும் பக்கதர்களுக்கு ஜோதிவடிவில் இன்றும் அருள்பாலித்து கொண்டிருக்கிறார்.
| இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |














