சரோஜினி நாயுடு வாழ்க்கை வரலாறு | Sarojini Naidu History in Tamil

Sarojini Naidu History in Tamil

சரோஜினி நாயுடு வரலாறு | Sarojini Naidu in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய வரலாறு பகுதியில் சரோஜினி நாயுடு அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம். சரோஜினி நாயுடு அவர்கள் மிகச்சிறந்த பேச்சாளர், சுதந்திர போராட்ட வீரர், அரசியல்வாதி, ஆளுநர் இது போன்று இவரின் சிறப்புகளை கூறிக்கொண்டே போகலாம். இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவராகவும், இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் மாநில ஆளுநராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சரி வாங்க இந்த பதிவில் சரோஜினி நாயுடு பற்றிய வாழ்க்கை வரலாற்றினை படித்து தெரிந்துக்கொள்ளலாம்..

பகத்சிங் வாழ்க்கை வரலாறு

சரோஜினி நாயுடு பிறப்பு:

சரோஜினி நாயுடு அவர்கள் பிப்ரவரி 13-ஆம் தேதி 1879-ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் ஹைதராபாத் நகரில் பிறந்தவர். இவருடைய தந்தை பெயர் அகோர்நாத் சடோபத்யாயா, தாயார் பெயர் பரத சுந்தரி தேவி ஆவார்.

இவருடைய தந்தை பெரிய கல்வி நிறுவனம் நடத்தி வந்த மிகப்பெரிய செல்வந்தர், தாயார் ஒரு பெண் கவிஞர். உடன்பிறந்தவர்களோடு சேர்த்து மொத்தம் 8 பேர் அவரது குடும்பத்தில் இருந்தனர். ஆனால், இவரே அந்த குடும்பத்தின் மூத்த பிள்ளை. இவர்களது குடும்பம் பெங்காலி பிராமணர் குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

சரோஜினி நாயுடுவின் கல்வி:

சிறிய வயதிலிருந்து சரோஜினி நாயுடு கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்டவராய் இருந்தவர். இவர் உருது, தெலுங்கு, ஆங்கிலம், பெங்காலி, மற்றும் பாரசீக மொழிகளில் சிறந்து விளங்கினார். சரோஜினி நாயுடு அவர்களுக்கு கவிதை எழுதும் ஆற்றல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தது.

சரோஜினி நாயுடுவின் தந்தை இவரை ஒரு கணித மேதையாகவோ அல்லது ஒரு விஞ்ஞானியாகவோ ஆக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் இவருக்கு கவிதை எழுதுவதில் அதிக ஆர்வம் இருந்ததால் ஆங்கில மொழியில் நிறைய கவிதைகளை எழுதினார்.

தன்னுடைய 16 வயதில் சரோஜினி நாயுடு இங்கிலாந்து சென்று லண்டனிலுள்ள கிங் கல்லூரியில் படித்தார். அதற்கு மேலும் படிப்பதற்காக கேம்பிரிட்ஜ் கிர்டன் கல்லூரியிலும் படித்தார்.

திருமண வாழ்க்கை:

சரோஜினி நாயுடு அவர்கள் இங்கிலாந்தில் தனது மேற்படிப்பினை படித்து கொண்டிருக்கும் போது டாக்டர் கோவிந்தராஜூலு என்பவரை சந்தித்தார். பிறகு அவரையே காதலித்து தன் தந்தையின் முழு ஆதரவோடு 19-வது வயதில் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மகிழ்ச்சியான மணவாழ்வு அமைந்தது. திருமண வாழ்வில் சிறந்த முறையில் இருந்த இவர்களுக்கு மொத்தம் 4 குழந்தைகள் பிறந்தனர். அவர்களின் பெயர்கள் ஜெயசூர்யா, பத்மஜா, ரந்தீர், லீலாமணி.

காமராஜர் வாழ்க்கை வரலாறு

சரோஜினி நாயுடுவின் அரசியல் வாழ்க்கை:

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு உத்திரப்பிரதேசத்தின் ஆளுநராக இருந்தார். இதன் மூலம் இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் என்ற சிறப்பினையும் பெற்றவர். 1924 ஆம் ஆண்டு, கிழக்கு ஆப்ரிக்க இந்திய காங்கிரஸில் பங்கேற்ற இரண்டு இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர்களுள் சரோஜினி நாயுடுவும் ஒருவராவார். 1925-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சுதந்திர போராட்ட பங்கு:

தேசிய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதே ஆண்டில் கான்பூரில் நடைபெற்ற சட்ட மறுப்பு இயக்கத்தில் காந்தியடிகளுடன் சேர்ந்து சிறை சென்றார். பிறகு 6 வருடங்கள் கழித்து 1931-ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகும் அவர் சுதந்திர போராட்ட முயற்சிகளை தொடர்ந்தார் அவர் 1942ல் நடைபெற்ற “வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தில் கலந்து கொண்டு மீண்டும் சிறை சென்றார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வாழ்க்கை வரலாறு

சரோஜினி நாயுடு இறப்பு:

சரோஜினி நாயுடு அவர்கள் ஆளுநர் ஆன 2 வருடம் கழித்து 1949-ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி அவரது அலுவலகத்தில் பணி செய்து கொண்டிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.

இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >>Varalaru