Somavaram Endral Enna | Somavaram History in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சோமவாரம் என்றால் என்ன.? அது தோன்றிய வரலாறு பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க. சோமவாரம் விரதம் பற்றி நாம் அனைவருமே அறிந்து இருப்போம். ஆனால், சோமவாரம் என்றால் என்ன.? என்பதே நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கா வாய்ப்பில்லை. எனவே, நீங்கள் சோமவாரம் பற்றி தெரிந்து கொள்ள விரும்புவீர்கள். ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.
சோமவார விரதம் என்பது, சிவ பெருமானுக்கு இருக்க கூடிய விரதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த விரதம் ஆகும். கார்த்திகை மாதத்தில் வரும் ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் சிவபெருமானை நினைத்து இருக்கக்கூடிய விரதம் ஆகும். இந்த விரதத்தைப் போன்று வேறு எந்த விரதத்திலும் சிவபெருமான் திருப்தி அடைய மாட்டார் என்பது ஐதீகம். Somavaram தோன்றியதற்கு ஒரு வரலாற்று கதை ஒன்று உள்ளது.
சோமவாரம் என்றால் என்ன.?| Somavaram Meaning in Tamil:
சிவபெருமானுக்கு உரிய விரதங்கள் எட்டு இருக்கிறது. அவற்றில் ஒன்று தான் ஒன்று கார்த்திகை சோம வார விரதம். இந்த விரதத்தில் தான் சிவபெருமான் திருப்தி அடைவார். சோமவார விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைபிடிக்கலாம்.
சோமவாரம் என்றால், திங்கட்கிழமை என்று பொருள்படும். சோமன் என்றால் பார்வதியோடு சேர்ந்திருக்கும் சிவபெருமான் என்று அர்த்தம். அதுமட்டுமில்லாமல், சந்திரனுக்கு சோமன் என்ற பெயரும் உண்டு. இதை முதன் முதலில் சந்திரன் அனுஷ்டித்ததாகவும், அதன் காரணமாகவே இதற்கு சோமவார விரதம் என்று பெயர் வந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றது.ஓம் நம சிவாய மந்திரம் மற்றும் சிவனின் 108 போற்றி..!
Somavaram History in Tamil:
- ஒரு முறை, தட்சன் கொடுத்த சாபத்தால் சந்திரன் கொடிய நோயால் அவதிப்பட்டு வந்தார். தன் சாபம் நீங்கி நோய் குணமாக வேண்டுமென்று, சந்திரன் கார்த்திகை மாதத்தின் அனைத்து திங்கட்கிழமைகளில் சிவபெருமானை நினைத்து விரதம்கடைபிடித்தான். சந்திரனின் விரதத்தினால் மகிழ்ந்த சிவபெருமான் சந்திரனுக்கு தட்சனின் சாபத்திலிருந்து விமோசனம் அளித்தார்.
- அதுமட்டுமில்லாமல், சந்திரன், சோம வார விரதத்தின் மகிமையால் எம்பெருமானின் ஜடாமுடியில் இளம் பிறையாக அமரும் பாக்கியமும் பெற்றான்.
- சிவபெருமானின் அருளால், நோய் நீங்கியதுடன், நவக்கிரகங்களில் ஒருவரானார். எனவே, சந்திரன் பெயரால் தோன்றியதே சோமவாரம் (திங்கட்கிழமை).
- ‘சோம வாரம் தோறும் பூஜை செய்து விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு நன்மையே அளிக்க வேண்டும் என்று சந்திரன் சிவபெருமானிடம் வேண்டுதல் வைத்தான்.
- பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களுள் ஒன்று குஜராத் மாநிலத்தில் உள்ள சோமநாதம் என்ற இடத்தில் சந்திரன் சிவபெருமானுக்கு சோம வார விரதம் இருந்து, அவர் ஜடாமுடியில் இளம் பிறையாக அமர்ந்தான் என்பது ஐதீகம்.
- கார்த்திகை முதல் திங்கட்கிழமை தொடங்கி கடைசி திங்கட்கிழமை அவரை இந்த விரதத்தினை கடைபிடிக்க வேண்டும்.
இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> | Varalaru |