ஷாஜகான் மும்தாஜ் வாழ்க்கை வரலாறு – Taj Mahal History in Tamil
தாஜ் மகால உலக அதிசயங்களில் ஒன்றாகும். இந்த தாஜ் மஹால் ஆக்ராவில் அமைந்துள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றான இந்த தாஜ் மஹால் முழுவதும் பளிங்குக் கற்களினால் கட்டப்பட்ட கட்டிடமாகும். இந்த தாஜ் மஹால் ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. ஏழு உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது. இக் கட்டிடம் முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது. சரி இந்த பதிவில் தாஜ் மஹால் பற்றிய வரலாறை பற்றி கொஞ்சம் படித்தறியலாம் வாங்க.
தாஜ்மஹால் உண்மை வரலாறு:
தாஜ்மஹால் வரலாறு தமிழில் – தோற்றம்:
ஜஹாங்கீர் முகலாயப் பேரரசராக இருந்தார். இந்த மன்னருக்கு மொத்தமாக நான்கு மகன்கள். அதில் ஒருவர்தான் ஷாஜகான். ஜஹாங்கீருக்கு அடுத்து முகலாயப் ஆட்சியை யார் பிடிப்பது என்ற பிரச்சனை ஏற்பட்டபோது தன்னுடைய உடன் பிறந்த மற்ற மூன்று சகோதரர்களையும் கொன்று, ஆட்சியை பிடித்தவர் தான் ஷாஜகான். ஷாஜஹான் ஆட்சியை தன்னுடைய சிறுவயதிலேயே பிடித்துவிட்டார்.
அரசராக இருந்த ஷாஜகான், மும்தாஜை சந்தித்த முதல் சந்திப்பிலேயே காதல் வசத்தில் விழுந்து விடுகின்றார். மும்தாஜை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற முடிவுக்கும் வந்து, இருவருக்கும் நிச்சயிக்கப்படுகிறது. இருப்பினும் திருமணம் நடக்கவில்லை. இதற்கு காரணம் அரச ஜோதிடர்கள் இவர்களுக்கு திருமணம் 5 ஆண்டுகளுக்கு பின்பு தான் நிகழவேண்டும் என்று கணித்து கூறிவிட்டனர். இந்த இடைப்பட்ட காலத்தில் அவரது ராஜியத்தை பாதுகாப்பதற்காக ஷாஜஹானுக்கு இரண்டு திருமணமும் செய்து கொண்டாராம். ஐந்து வருடம் கழித்து
ஷாஜகான்:
முகலாய மன்னர்களின் இந்த ஷாஜகான் மிகப்பெரிய மன்னராக பேசப்பட்டவர். இந்தியாவிலேயே அதிகப்படியான படைபலமும் பணபலமும் கொண்ட மன்னர் என்ற பெருமை இவருக்கு உண்டு. ஆக அரசியல்ரீதியாக மற்ற நாடுகளுடன் சண்டை வரும்போது, தன்னுடைய ஆட்சிக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதால் போர் செய்யக் கூடிய நாடுகளில் இருக்கும் இளவரசிகளை திருமணம் செய்துகொண்டு சுமூகமாக சண்டையை முடித்துக் கொள்வார்கள். இதனால், ஷாஜகான் அரசியல் ரீதியாக பல திருமணங்கள் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.
ஷாஜகான் மும்தாஜ் வாழ்க்கை வரலாறு – Taj Mahal History in Tamil:
மும்தாஜ் ஷாஜகானுக்கு முதல் மனைவி கிடையாது மூன்றாவது மனைவி ஆவார். மும்தாஜை திருமணம் செய்த பின்பும் ஷாஜஹான் இன்னும் பல திருமணங்களை செய்து கொண்டாராம். எத்தனை திருமணங்களை ஷாஜகான் செய்து கொண்டாலும், தன்னுடைய உயிருக்கு உயிரான மனைவியாக, காதலியாக நினைப்பது மும்தாஜை மட்டும்தான்.
பொதுவாக ’குழந்தை பிறந்துவிட்டாலே மனைவி மீது பாசம் போய்விடுகிறது’ என்பது பெண்களின் குற்றச்சாட்டு. ஒருசில ஆண்களின் செயல்களும் அப்படித்தான் இருக்கிறது. ஆனால், ஒரு குழந்தை அல்ல… இரண்டு குழந்தையும் அல்ல… ஷாஜகான் மும்தாஜ் தம்பதிகளுக்கு 14 குழந்தைகள். அத்தனை குழந்தைகள் பிறந்த பிறகும், திருமணம் செய்தபோது இருந்த அதே ஆழமான காதலோடு நேசித்து மனைவிக்கு உலகமே அதிசயிக்கும் வகையில் கல்லறை கட்ட முடிகிறது என்றால், அந்தக் காதல் உலக அதிசயங்களை விட பேரதிசயமானதுதான். ஷாஜகானின் மூன்றாவது மனைவியான மும்தாஜ் தனது 14 வது குழந்தை குஹாரா பேகம் பிறந்தபோது இறந்துவிட்டார். அவர், இறந்த ஒரு வருடம் முழுக்க துயரத்திலேயே மூழ்கி இருந்த ஷாஜகானின் நரை முடிகளும் வாடிய முகமுமே மனைவியின் மீதான பிரிவையும் காதலையும் உணர்த்தியது.
அப்படியொரு அன்பால் நிறைந்தது இவர்களின் வாழ்க்கை. இந்தியாவிற்கு பெருமையாக… காதலின் மகத்துவமாக காட்சியளிக்கும் தாஜ்மஹால் உருவாக காரணமாக இருந்தது மும்தாஜின் அன்புதான். அந்த பேரன்பே ஷாஜகானை தாஜ்மஹாலை கட்ட வைத்தது.
இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் தெரிந்து கொள்வோம் நன்றி வணக்கம்..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |