திருவாதிரை களி வரலாறு..! | Thiruvathirai Kali History In Tamil..!

Advertisement

திருவாதிரை களி வரலாறு..! | Thiruvathirai Kali History In Tamil..!

மார்கழி மாதம் திருவாதிரை விரதம் இருந்து திருவாதிரை களி செய்து சிவபெருமானுக்கு படைப்பார்கள். மார்கழி மாதம் என்றாலே சிறப்பு தான் அதுவும் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த நட்சத்திரமான திருவாதிரை அன்று கொண்டாடப்படும் திருவாதிரை நோன்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது. சிவபெருமானுக்கு ஏன் திருவாதிரை களி படைக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? அதனுடைய வரலாறு பற்றி தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.

திருவாதிரை நட்சத்திரம் இந்த ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி வருகிறது. இந்த நாளன்று சிவபெருமானுக்கு வெவ்வேறு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். மேலும் இந்த நன்னாளில் ஆருத்ரா தரிசனமும் நடைபெறும். திருவாதிரை நோம்பு மற்றும் ஆருத்ரா தரிசனம் இரண்டுமே சிவபெருமானுக்காக நடக்கக்கூடிய விசேஷங்கள். இந்த இரண்டு விஷேஷங்களையும் பார்த்தால் நமக்கு கோடி புண்ணியங்கள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

திருவாதிரை விரதம் 2025 | Thiruvathirai Viratham 2025 in Tamil

திருவாதிரை களி வரலாறு:

சேந்தனார் என்கின்ற ஒரு விறகு வெட்டி சிதம்பரம் பக்கத்தில் உள்ள ஒரு ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் மிகசிறந்த சிவன் பக்தன். தினமும் ஒரு சிவனடியாருக்காவது உணவு அளித்த பிறகு தான் அவர் சாப்பிடுவார். இது சேந்தனாரின் வழக்கமாகும். சேந்தனாரின் பக்தியை இந்த பிரபஞ்சத்துக்கு உணர்த்த விரும்பிய சிவபெருமான் ஒரு நாள் கடுமையாக மழை பெய்ய வைத்தார் இதனால் சேந்தனாரால் விறகு விற்க முடியவில்லை விறகு விற்றால் தான் அரிசி வாங்குவதற்கு பணம் கிடைக்கும். அதனால் சமையல் சமைக்க இயலவில்லை.

சமையல் செய்வதற்கு மாறாக அரிசியை பொடித்து மாவாக்கி அதில் களி செய்து சிவனடியார்கள் யாரேனும் வருவார்களா என்று எதிர்பார்த்து கொண்டிருந்தார் சேந்தனார். அன்றைக்கு எந்த சிவனடியார்களும் சேந்தனார் கண்களுக்கு தென்படவில்லை. மனம் உளைச்சலுக்கு ஆளான சேந்தனார் வீட்டிற்கு வந்து சிவபெருமானை வேண்டினார். அந்த நேரம் சிவபெருமான் சிவனடியார் வேடம் அணிந்து சேந்தனார் வீட்டிற்கு செல்கிறார்.

சேந்தனாரிடம் உண்ண எதாவது இருக்கிறதா என்று கேட்கிறார். சேந்தனார் மிகவும் மகிழ்ச்சி அடைந்து அவர் செய்த களியை சிவனடியாருக்கு கொடுக்கிறார். சிவனடியாருக்கு அந்த களியை மன நிறைவோடு சாப்பிட்டுவிட்டு மீதம் இருந்த களியை அடுத்த வேலை உணவிற்கு கொடுப்பீர்களா என்று கேட்டு வாங்கிக்கொண்டு அந்த இடத்தில் இருந்து சென்றார்.

அன்று இரவு சிதம்பரத்தில் உள்ள ஒரு அரசர் கனவில் சிவபெருமான் தோன்றி “நான் சேந்தனார் என்கின்ற பக்தனின் அன்புக்கு கட்டுப்பட்டு அவர் இல்லத்தில் களி உண்டேன்” என்று கூறியிருக்கிறார். மறுநாள் அதிகாலை வழக்கம் போல் தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் திருக்கோவிலின் கருவறையை திறந்தார்கள். அப்பொழுது சிவபெருமானை சுற்றி களி சிதறல்கள் இருந்தது. இது என்ன அதிசயம் என்று அனைத்து அந்தணர்களும் வியந்தனர்.

உடனே அந்தணர்கள் இந்த செய்தியை அரசர்க்கு தெரிவித்தனர். இதை கேட்ட அரசர் நேற்று இரவு அவர் கண்ட கனவை நினைத்து மகிழ்ச்சி அடைந்து அந்தணர்களிடம் அந்த கனவை பற்றி கூறினார். அப்பொழுது சித்தமபாரத்தில் தேர் திருவிழாவும் நடந்தது. அரசன் உட்பட அனைவரும் அந்த இடத்தில இருந்தார்கள், சேந்தனாரும் அந்த திருவிழாவுக்கு வந்தார்.

அரசரும் அனைவரும் சிவபெருமானை தேரில் அமர்த்தி தேரை வடம்பிடித்து இழுத்தார்கள். மழை காரணமாக தேர் நகரவே இல்லை. தேர் இழுக்கும் நேரத்தில் தேர் சக்கரம் சேத்தில் மாட்டிகிட்டதே என்று மன்னரும் மக்களும் கவலை கொண்டனர். அப்பொழுது ஒரு அசரீரி சத்தம் கேட்டது. சேந்தா நீ பல்லாண்டு பாடு என்று அசரீரி சத்தம் ஒலித்தது.

சேந்தனாரோ ஒன்றும் தெரியாத நான் எப்படி பல்லாண்டு பாடுவது என்று சிவபெருமானை வணங்கினார். அப்பொழுது சிவபெருமான் சேந்தனாருக்கு அருள் புரிந்தார். அந்த நேரம் சேந்தனார் மண்ணுகதில்லை என்று தொடங்கி பல்லாண்டு கூறுதுமே என்று முடித்து 13 பாடல்கள் சிவபெருமானை வாழ்த்தி பாடியிருக்கிறார். உடனே அந்த தேர் நகர்ந்தது.

அரசனும் சிவனடியார்களும் சேந்தனாரின் கால்களில் விழுந்து வணங்கினர். சேந்தனார் “அரசன் அடியவனின் கால்களில் விழ வேணடாம்” என்று தயங்கி கூற அரசர் நடராஜ பெருமானே உங்கள் வீட்டில் களி உண்டார் என்ற செய்தியை தெரிவித்தார். அதை கேட்ட சேந்தனார் சிவபெருமானை நினைத்து பக்தி பரவசம் அடைந்தார். இந்த அடியவன் வீட்டில் எம்பெருமானே வந்து களி உண்டாரா என்று ஆச்சரியம் அடைந்தார்.

இதன் காரணமாக தன திருவதிரை திருநாள் அன்று களி உண்ண வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அன்றைய தினத்தில் ஆடல் வள்ளலான அனைத்து சிவபெருமான் ஸ்தலங்களிலும் களி படைக்கிறார்கள்.

திருவாதிரை களி செய்வது எப்படி.? | Thiruvathirai Kali Recipe in Tamil

இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> Varalaru
Advertisement