வைகாசி விசாகம் என்றால் என்ன.? அதன் வரலாறு என்ன.?

Advertisement

வைகாசி விசாகம் வரலாறு | Vaikasi Visakam in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் வைகாசி விசாகம் என்றால் என்ன..? அதன் வரலாறு என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். வைகாசி விசாகம் பற்றி நாம் அனைவருமே அறிந்து இருப்போம். வைகாசி விசாகம் என்பது வைகாசி மாதத்தில் கொண்டாடக்கூடிய நாளாகும். இந்நாளில், முருக பெருமானை வழிபட வேண்டும் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

ஆனால், வைகாசி விசாகம் என்றால் என்ன..? அதன் வரலாறு என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் வைகாசி விசாகம் பற்றி விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்கடவுளான முருகப்பெருமான் விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் அவருக்கு விசாகன் என்ற பெயரும் உண்டு. இவற்றில் வி என்றால் பறவை அதாவது மயிலை குறிக்கிறது, சாகன் என்றால் பயணம் என்று பொருள். எனவே, முருகன் மயில் மீது பயணம் செய்யக்கூடியவர் என்று பொருள். முருகன் அவதரித்த இந்த பௌர்ணமியுடன் கூடி வரக்கூடிய வைகாசி விசாக நட்சத்திரம் என்று கூறப்படுகிறது.

வேண்டிய வரம் தரும் வைகாசி விசாகம்

வைகாசி விசாகம் என்றால் என்ன.? | What is Vaikasi Visakam in Tamil:

வைகாசி விசாகம் என்றால் என்ன

 கோடை காலத்தின் நிறைவாகவும் வசந்த காலத்தின் துவக்கமாகவும் வருவது தான் வைகாசி மாதம். கோடை காலத்தின் வெப்பம் தணிந்து வசந்த காலம் துவங்குகிறதோ அதேபோல், நம்முடைய வாழ்வில் உள்ள அனைத்து விதமான இன்னல்கள், துன்பங்கள் எதுவாயினும் அனைத்தையும் நீக்கி வாழ்வில் குளுமையை தருவதே வைகாசி விசாகம் ஆகும். வைகாசி மாதத்தில் வரக்கூடிய விசாகம் நட்சத்திரம் அன்று முருகப்பெருமான் அவதரித்ததால் வைகாசி விசாகம் என்று கூறப்படுகிறது. 

முருகப்பெருமான், வைகாசி மாதத்தில் வரக்கூடிய விசாகம் நட்சத்திரத்தில் பிறந்ததால் அவருக்கு விசாகன் என்று பெயர்.

விசாகன் – வி என்றால் பறவை என்றும், சாகன் என்றால் பயணம் என்றும் அர்த்தம். அதாவது மயில்மேல் பயணம் செய்பவன் முருகப்பெருமான். மேலும், விசாகன் என்றால் விசாலமான கண்களை உடையவன் என்று மற்றொரு அர்த்தமும் உள்ளது. அதாவது, அள்ளிக்கொடுப்பதில் வள்ளல். இதனால் முருகப்பெருமானை விசாகன் என்று அழைப்பார்கள்.

விசாகம் – என்பது வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்த கூடிய நாள். விசாகம் என்றால் குளிர்ந்த வசந்த காலம் ஆகும். இந்த வைகாசி விசாகம் அன்று எல்லா முருகப்பெருமான் கோவிலிலும் இத்தினத்தை வசந்த உற்சவம் என்று மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. வசந்த உற்சவம் என்றால் கோடையின் வெப்பம் தணிந்து குளிர்ந்த காலம் தொடங்குவது தான் விசாக காலம்.

நம் வாழ்க்கையில் ஒரு வசந்தம் வர வேண்டும் என்று எண்ணுபவர்கள் இந்த வசந்த காலம் என்று கூறப்படும் வைகாசி விசாகம் அன்று முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம், வாழ்க்கையில் உள்ள இன்னல்கள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியான வாழ்வு கிட்டும்.

வைகாசி விசாகம் விரதம் இருப்பது எப்படி.?

வைகாசி விசாகம் வரலாறு.?

வைகாசி விசாகம் வரலாறு

 முருகன் பிறந்த நாள் வைகாசி விசாகம். விசாகம் நட்சத்திரம் ஆறு நட்சத்திரங்கள் ஒன்று கூடியது. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். 

பராசரர் முனிவர் ஒருவர் இருந்தார். அந்த முனிவருக்கு ஆறு குழந்தைகள். இந்த ஆறு குழந்தைகளும் எப்போதும் துறுதுறுவென்று சேட்டை செய்து கொண்டிருக்கக் கூடியவர்கள். ஒரு நாள் அந்த ஆறு குழந்தைகளும் தண்ணீரில் விளையாடி கொண்டிருந்தார்கள். அப்போது, பராசரர் முனிவர் அங்கு வந்து தண்ணீரை விட்டு மேலே வாருங்கள் என அழைத்தார்.

ஆனால், அக்குழந்தைகள் யாரும் அவர் பேச்சினை கேட்காமல் தண்ணீரிலேயே விளையாடி கொண்டிருந்தார்கள். கோபமடைந்த முனிவர் அக்குழந்தைகளை பார்த்து சாபம் விட்டார். நீங்கள் நான் சொல்வதை கேட்காமல், தண்ணீரிலேயே இருக்கிறீர்கள். அதனால் நீங்கள் மீன்களாகவே மாறி விடுங்கள் என்று சாபம் விடுத்தார்.

மீன்களாக மாறிய அக்குழந்தைகள், எங்களுக்கு சாப விமோச்சனம் என்ன என்று கேட்டனர். அதற்கு முனிவர், அன்னை பார்வதியின் அமுத பாலினை முருகப்பெருமான் அருந்துருகிற போது, முருகன் திருவாயில் இருந்து என்றைக்கு ஒரு சொட்டு உங்கள் வாயில் விழுகிறதோ அன்றைக்கு தான் நீங்கள் மனிதர்களாக மாறுவீர்கள் என்று கூறினார்.

அன்னை பார்வதி தேதி, தன் அமுத பாலினை ஒரு பாத்திரத்தில் எடுத்து முருகப்பெருமானுக்கு தந்து கொண்டிருக்கும்போது, முருகப்பெருமான் வேண்டுமென்றே ஒரு சொட்டு பாலினை கீழே கொட்டினார்.

இதனை மீன்களாக இருக்கும் முனிவர்கள் அருந்தி தன் வாழ்வில் வசந்தத்தை பெற்றார்கள். இது நிகழ்ந்தது வைகாசி விசாகம் அன்று. ஆக வைகாசி விசாகம் அன்று நாம், நமக்கு என்ன விதமான இன்னல்கள் இருந்தாலும் முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால் நம் வாழ்க்கையிலும் வசந்தம் கிட்டும்.

வைகாசி விசாகம் வழிபாடு செய்யும் முறை மற்றும் சிறப்புகள்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement