வள்ளலார் வாழ்க்கை வரலாறு | Vallalar History in Tamil

Advertisement

வள்ளலார் பற்றிய குறிப்புகள் | Vallalar Kurippu in Tamil

தமிழ்ச் சங்கத்தில் வாழ்ந்த பல ஆன்மிக தலைவர்களுள் இராமலிங்கம் எனும் வள்ளலாரும் ஒருவர். உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தவர். இந்த உலகத்தில் நல்ல எண்ணங்களும், சிந்தனைகளும் பரவ வேண்டும் என்று கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டவர் திருவருட்பிரகாச வள்ளலார் என்று போற்றப்படும் சிதம்பரம் இராமலிங்க அடிகள். இவரை பற்றிய பல சுவாரசியமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

பிறப்பு:

  • வள்ளலார் வரலாறு: திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் அக்டோபர் மாதம் 5-ம் தேதி 1823-ம் ஆண்டு மருதூர் என்னும் சிற்றூரில் பிறந்தார். இவர் ஒரு ஆன்மீகவாதி. பெற்றோர் பெயர் இராமையாபிள்ளை, சின்னம்மை. இவருக்கு மூன்று சகோதரர்கள், ஒரு சகோதரி.
  • சகோதரர் பெயர் சபாபதி பிள்ளை, பரசுராமன், உண்ணாமுலை. சகோதரி சுந்தரம்மாள் ஆவார். இவருடைய தந்தை தமிழாசிரியராகவும், கணக்காளராகவும் இருந்தார். இராமலிங்கர் பிறந்த ஆறாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார்.

கல்வி:

  • Vallalar History in Tamil: தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சென்று வாழ்ந்தார். பின்னர் குடும்பத்தில் பொருள் ஈட்டுவதற்காக அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு ஆற்றி வந்தார். அண்ணனுக்கு இராமலிங்க சுவாமிகளை பெரிய அளவில் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசை ஆனால், வள்ளலார் அவர்களுக்கு படிப்பில் நாட்டம் இல்லை.
  • வள்ளலாரை, சபாபதி முதலியாரிடம் கல்வி பயில்வதற்காக அனுப்பி வைத்தார். இராமலிங்க சுவாமிகள் அங்கும் சரியாக படிக்கவில்லை. கந்தகோட்டத்தில் முருகனுக்கு பாடிய பாடலை கேட்ட சபாபதி முதலியார் அவருடைய ஆன்மிக உணர்வை பார்த்து இனி நான் இராமலிங்க அடிகளுக்கு பாடம் சொல்லி தரமாட்டேன் என்று கூறி விட்டு சென்றார். மேலும் அவர் ஒரு தெய்வப்பிறவி என்றும் கூறினார்.

ஆன்மிக சொற்பொழிவு:

  • Vallalar History in Tamil: அண்ணன் சபாபதி அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாத போது இராமலிங்க அடிகள் தான் ஆன்மிகச் சொற்பொழிவுக்கு சென்றார். அங்கு அவர் பாடிய தேவார பாடல்கள் மக்கள் அனைவரையும் கவர்ந்தது. இதை அறிந்த சகோதரர் இராமலிங்க அடிகளாரை படிக்க வற்புறுத்தாமல் அவர் போக்கிலேயே விட்டு விட்டார்.
  • அதன் பிறகு இராமலிங்க அடிகளார் தன் இறைபணியில் ஆழ்ந்து பயணிக்க தொடங்கி விட்டார். இவர் மொத்தம் நாற்பதாயிரம் பாடல்களை பாடியுள்ளார். அதில் இவர் இயற்றிய முதல் நூல் தெய்வமணிமாலை ஆகும்.
வள்ளலார் பொன்மொழிகள்

துறவி:

  • வள்ளலார் வரலாறு: இராமலிங்கருக்கு திருமணம் செய்து கொள்வதற்கு விருப்பமில்லை. இருப்பினும் சகோதரன் வற்புறுத்தி திருமணம் செய்து வைத்தார். தாம்பத்திய உறவில் நாட்டம் இல்லாததால் துறவியாகவே வாழ்ந்து வந்தார்.
  • கடவுளின் பெயரில் செய்யப்படும் உயிர்ப்பலியை தடுத்து நிறுத்தினார். மக்களின் பசியை போக்குவதற்காக தருமசாலையை தொடங்கினார். சமய சமரச சுத்த சன்மார்க்கம், சத்திய ஞானசபை போன்றவற்றை நிறுவியுள்ளார்.
  • சமத்துவம், கல்வி, தியானம் போன்றவற்றை மக்களிடம் பரப்பினார். இந்திய அரசு இவரது சேவையை கருத்தில் கொண்டு 2007 ஆகஸ்ட் 17ல் அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்தது.

இறப்பு:

  • Vallalar History in Tamil: உலகிற்கு பல சேவைகளையும், தத்துவங்களையும் கொடுத்த இராமலிங்க அடிகள் ஜனவரி மாதம் 3-ம் தேதி 1874-ம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார்.
சுரதா வாழ்க்கை வரலாறு

 

இதுபோன்று வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Varalaru
Advertisement