வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

விஜயதசமி என்றால் என்ன.? அதன் வரலாறு என்ன.?

Updated On: September 27, 2025 1:46 PM
Follow Us:
Vijayadashami History in Tamil
---Advertisement---
Advertisement

Vijayadashami History in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் விஜயதசமி என்றால் என்ன.? என்பதையும் அதன் வரலாற்று காரணங்கள் பற்றியும் பின்வருமாறு கொடுத்துள்ளோம். ஆயுத பூஜைக்கு அடுத்ததாக கொண்டாடப்படும் விழா தான் விஜயதசமி. எப்படி ஆயுத பூஜை நாளில் நம் தொழிலுக்கும் கல்விக்கு பயன்படும் பொருட்களை சுத்தம் செய்து பொட்டு வைத்து வழிபாடு செய்கிறமோ அதேபோன்று விஜயதசமி அன்று, புதிதாக தொழில் தொடங்குவது, குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, புதிய கலைகள் கற்றுக்கொள்வது, புதிய தொழில் தொடங்குவது என புதிய முயற்சிகள்/விஷயங்களை தொடங்கலாம்.

இந்த ஆண்டு விஜயதசமி ஆனது, அக்டோபர் 12 ஆம் தேதி சனிக்கிழமை அன்று வருகிறது. விஜயதசமி நவராத்திரி பண்டிகையின் இறுதி நாளாக வருகிறது. இப்பண்டிகை ஆனது, வங்காளம், கன்னடம், மலையாளம், மராத்தி, இந்தியா, நேபாளம் போன்ற நாடுகளில் பல்வேறு பெயர்களில் பல்வேறு முறைகளில் கொண்டாடப்படுகிறது.

இனிய விஜயதசமி வாழ்த்துக்கள் 

விஜயதசமி என்றால் என்ன.?

 விஜயதசமி வரலாறு

9 நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகை முடிந்து, 10 -வது நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதத்தின் அமாவாசை முடிந்து வரும்பத்தாம் நாள் அன்று விஜயதசமி கொண்டாடப்படுகிறது. விஜயதசமி அன்று புதிய விஷயங்களை செய்ய தொடங்கலாம். கல்வி கற்பது, தொழில் கற்றுக்கொள்வது, புதிய தொழில் தொடங்குவது இதுபோன்ற செயல்களை செய்யலாம்.

விஜயதசமி வரலாறு:

அசுரனை அழித்து வெற்றியடைந்த 10-வது நாள்:

உலகை ஆட்டி படைத்த தீயவனான மகிசாசூரனை, தேவி துர்க்கையாக அவதரித்து, 9 நாட்கள் போராடி  வதம் செய்தாள். எனவே, துர்க்கை மகிசாசூரனை வதம் செய்த வெற்றியை கொண்டாடும் சக்தியின் வெற்றி விழாவாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

மகிஷன் என்று அசுரன் சாகா வரம் வேண்டி, பிரம்மனை நோக்கி பெரும் தவம் புரிகிறான். எந்தவொரு, உயிராலும் தன்னை கொல்ல முடியாது. கருவில் உருவாகாத பெண்ணை தவிர வேறு யாராலும் எனக்கு ஏற்படக்கூடாது என்ற வரத்தினை பெறுகிறான்.

வரம் பெற்றதும், ஆணவத்தில் உலகில் உள்ள மக்கள், தேவர்கள் அனைவரையும் துன்புறுத்தினான். இதனால், மகிஷா அசுரனிடம் இருந்து இந்த உலகத்தை காக்குமாறு தேவர்கள் மும்மூர்த்தி தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன்  ஆகியவர்களிடம் சென்று முறையிட்டனர்.

எனவே, மும்முர்த்திகளின் சக்தியும் ஒன்று சேர்ந்து உருவாக்கிய சக்தி தான் மாகாளி என்று கூறப்படுகிறது. அதன் பிறகு, மாகாளியாக உருவெடுத்த துர்க்கை அம்மன், மகிஷன் அசுரனனோடு 9 நாட்கள் போர் செய்து, வெற்றியடைந்த 10வது நாள் விஜயதசமி என்று அளிக்கப்படுகிறது.

இந்த நாளில்தான் இராமாயணத்தில் அரக்கன் ராவணனை ராமன் வென்றான். இது தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியாக கருதப்படுகிறது.  மகாபாரதத்தில்  பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசமும் ஓராண்டு வாழ்க்கையும் முடித்து விஜயதசமி நாளில் அவர்கள் மறைத்து வைத்திருந்த நாளில் சாமி மரத்திலிருந்து எடுத்தனர். அர்ஜுனன் இந்த நாளில் கௌரவர்களை வென்றனர். அசோக மன்னர் காலிங்க போரில் வெற்றி பெற்ற பத்தாவது நாளை விஜயதசமி என்று  கூறப்படுகிறது.

விஜயதசமி அன்று வன்னி மரத்தை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள்.

ராவணனை ராமன் வதம் செய்த நாள்:

இராமாயணத்தில் சீதையை இராவணன் கடத்தி சென்றபோது, இராவணனிடம், இராமன் சீதையை விடுவிக்குமாறு கேட்டபோது, இராவணன் மறுத்து விட்டார். இதனால் போர் செய்ய நேர்ந்தது. விஜயதசமி அன்று தான் இராமன், இராவணனை, போரில் வீழ்த்தி வெற்றி பெற்றார் என்று கூறப்படுகிறது. வட இந்திய பகுதிகளில் இராவணனை கொன்ற தினத்தை ராம்லீலா என்று கொண்டாடி வருகிறார்கள்.

இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> Varalaru
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now