விநாயகர் வரலாறு | Vinayagar History in Tamil inayagar history in tamil

Vinayagar History in Tamil

பிள்ளையார் வாழ்க்கை வரலாறு | God Vinayagar History in Tamil

விநாயகர் வரலாறு: நாம் எந்த ஒரு நல்ல காரியத்தை தொடங்குவதற்கு முன்பு முதலில் பிள்ளையார் கடவுளை வணங்கிவிட்டு தான் செய்வோம். விநாயகர் வழிபாடு இந்தியாவிலும், நேபாளத்திலும் முழுவதாகக் காணப்படுகிறது. இவர் கணபதி, ஆனைமுகன் என வேறு பல பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். அனைவருக்கும் விநாயகர் என்றாலே மிகவும் பிடித்த கடவுளாகும். இந்துக்கள் பெரும்பாலும் முழு முதல் கடவுளாக வணங்கி வழிபாடு செய்வது விநாயகரை தான். இந்த பதிவில் விநாயகர் உருவான கதையை சுருக்கமாக படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் வரலாறு மற்றும் சிறப்புகள்..!

விநாயகர் பற்றி குறிப்பு:

விநாயகர் வேறு பெயர்கள் விநாயகர், சர்வாயுதர், மயூரேசர், கபிலர், விகடர்..
சமஸ்கிருதம்  கணேஷா 
விநாயகர் மந்திரம்  ஓம் கணேசாய நமஹ
விநாயகர் துணை  சித்தி, புத்தி
விநாயகரின் பெற்றோர்கள்  சிவபெருமான், பார்வதி அம்மை
விநாயகரின் சகோதரன்  முருகப்பெருமான்
விநாயகர் வாகனம்  சுண்டெலி (மூஞ்சுறு)
விநாயகர் நூல்  கணேச புராணம்,விநாயக கவசம், விநாயகர் அகவல்
சமயம் காணாதிபத்தியம்
பண்டிகை  விநாயகர் சதுர்த்தி

முப்பத்தியிரண்டு விநாயக மூர்த்தங்கள்:

உச்சிட்ட கணபதி உத்தண்ட கணபதி
ஊர்த்துவ கணபதி ஏகதந்த கணபதி
ஏகாட்சர கணபதி ஏரம்ப கணபதி
சக்தி கணபதி சங்கடஹர கணபதி
சிங்க கணபதி சித்தி கணபதி
சிருஷ்டி கணபதி தருண கணபதி
திரயாக்ஷர கணபதி துண்டி கணபதி
துர்க்கா கணபதி துவிமுக கணபதி
துவிஜ கணபதி நிருத்த கணபதி
பக்தி கணபதி பால கணபதி

 

மஹா கணபதி மும்முக கணபதி
யோக கணபதி ரணமோசன கணபதி
லட்சுமி கணபதி வர கணபதி
விக்ன கணபதி விஜய கணபதி
வீர கணபதி ஹரித்திரா கணபதி
க்ஷிப்ர கணபதி க்ஷிப்ரபிரசாத கணபதி

 

ஔவையார் அருளிய விநாயகர் அகவல்

விநாயகர் தோன்றிய கதை:

விநாயகர் அவதரித்த திதியினையே விநாயகர் சதுர்த்தி என்று கொண்டாடப்படுவதாக புராணங்கள் கூறப்படுகிறது. சிவபெருமான் ஒருமுறை வெளியில் சென்ற நேரத்தில் பார்வதி தேவி குளிக்க சென்றுள்ளார். அப்போது பார்வதி தேவி தனக்கு காவலுக்கு யாரும் இல்லையென்பதால், தனது நீராட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சந்தனக் குழம்பை எடுத்து ஒரு உருவம் உருவாக்கி அனுக்கிரகத்தால் அதற்கு உயிர் கொடுத்தார். பார்வதி தேவியால் உயிர் கொடுக்கப்பட்ட அந்த உருவம் அவருடைய பிள்ளை ஆகிவிட்டது.

பார்வதி தேவியார் விநாயகரிடம் மற்றவர்கள் யாரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று அறிவுறுத்தி விட்டு நீராடச் சென்றார். அந்த நேரம் பார்த்து திடீரென்று சிவபெருமான் வந்ததும் பிள்ளையார் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. அதனால் கோபம் கொண்ட சிவன் விநாயகருடைய தலையை வெட்டிவிட்டு உள்ளே சென்றார்.

பார்வதி தேவி நீராடி முடித்ததும் வெளியே வந்து பிள்ளையாருக்கு தலை இல்லாததை பார்த்ததும் கடும் கோபமும், ஆவேசமும் அடைந்தார். தான் செய்த பிள்ளையாரைச் சிவனே சிதைத்ததை அறிந்த அவர் காளியாக மாறி உருவம் எடுத்து வெளியேறி மூவுலகிலும் தமது கண்ணில் பட்ட சகலவற்றையும் அழிக்கத் தொடங்கினார்.

சங்கடஹர சதுர்த்தி 2022 தேதிகள்

 

தேவர்கள் அனைவரும் காளியின் ஆவேச குணத்தை கண்டு சிவனிடம் சென்று முறையிட்டார்கள். காளி உருவம் எடுத்த பார்வதி தேவியை சமாதானப்படுத்த முடிவு செய்த சிவன், தனது தேவர்களை அழைத்து வட திசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் வெட்டி வருமாறு ஆணையிட்டார். அவர் கூறியபடியே தேவர்களும் வடதிசை நோக்கிச் சென்ற போது அவர்களுக்கு ஒரு யானையே முதலில் கிடைத்தது.

தேவர்களும் யானையின் தலையை வெட்டி எடுத்துச் சென்று சிவனிடம் கொடுத்தனர். அவர் யானையின் தலையை வெட்டுப்பட்டு கிடந்த பிள்ளையாரின் முண்டத்தில் வைத்து உயிர் கொடுத்தார். இதை பார்த்ததும் சமாதானம் அடைந்த பார்வதி தேவியார் மனமகிழ்ந்து பிள்ளையாரைக் கட்டி அணைத்துக் கொண்டார்.

அந்தப் பிள்ளையாருக்கு சிவன் ‘கணேசன்’ என பெயர் வைத்து தமது தேவர்களுக்கு தலைவராக நியமித்தார் என ‘நாரதபுராணத்தில்’ தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே பிள்ளையாரின் அவதார கதையாகும். சுக்கில பட்ச சதுர்த்தி அன்று இந்த நிகழ்ச்சி நடந்தது. அன்றிலிருந்து அத்தினம் விநாயகர் சதுர்த்தி என்ற புனித தினமாக ஆகிவிட்டது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil