World Olympic Day History in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஒலிம்பிக் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். சர்வதேச ஒலிம்பிக் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 23 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். முதல் முதலில் 1894 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி ஒலிம்பிக் தினம் கொண்டாடப்பட்டது. ஆனால், அதன் வரலாறு பற்றி நம்மில் பலபேருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால் அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் ஒலிம்பிக் தினத்தின் வரலாறு பற்றி விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம்.
ஒலிம்பிக் தினம் வரலாறு:
கிரேக்க நகரமான ஒலிம்பியாவில் கி.மு.776 ஆம் ஆண்டு முதல் கி.மு.393 ஆம் ஆண்டு வரை, ஜீயஸ் கடவுளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரிய பல விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வந்தது. அதன் பிறகு, ரோமாபுரியைச் சேர்ந்த தியோடோஷயஸ் ஆட்சிக்கு வந்ததும் இந்த விளையாட்டுகள் அணைத்தும் தடைசெய்யப்பட்டது. அடுத்து, 1894 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி நவீன வடிவம் பெற்று ஒலிம்பிக் போட்டியாக மாறியது. இதனை பியரிடி கூபர்டின், என்பவர் வடிவமைத்தார். இவரே ஒலிம்பிக் போட்டியின் தந்தை என்று போற்றப்படுகிறார். அதுமட்டுமில்லாமல், ஒலிம்பிக் கோடியை வடிவமைத்தவரும் இவரே ஆவர்.
சர்வதேச ஒலிம்பிக் தினம் எப்போது 2024.? அதன் கருப்பொருள் என்ன.?
ஒலிம்பியாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இது கொண்டாடப்பட்டு வந்தது. அதன் பிறகு 1924-ம் ஆண்டு முதல் குளிர்கால ஒலிம்பிக் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. அதனால், இத்தகைய ஒலிம்பிக் போட்டியானது, ‘கோடைகால ஒலிம்பிக் போட்டி’ என்று அழைக்கப்பட்டது. 1992-ம் ஆண்டு வரை கோடைகால ஒலிம்பிக் போட்டியும், குளிர்கால ஒலிம்பிக் போட்டியும் ஒரே ஆண்டில் தான் நடத்தப்பட்டன.
அதன் பிறகு தான், இரண்டு போட்டிகளும் இரண்டு ஆண்டு இடைவெளியில் மாற்றியமைக்கப்பட்டது. கோடைகால ஒலிம்பிக் போட்டி நடைபெற்று இரண்டு ஆண்டுகள் கழித்து குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறும்.
உலக போரின் காரணமாக 1916, 1940 மற்றும் 1944 ஆகிய மூன்று ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நாளில் நடத்தப்படும் விழா 1908 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. ஒலிம்பிக் போட்டியின்போது ஏற்றப்படும் தீபம் முதன் முதலில் 1928-ம் ஆண்டு ஆம்ஸெடர்ம் என்பவரால் ஏற்றப்பட்டது. இந்த தீபமானது, கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு பல மாதங்களுக்கு முன்பாகவே ஏற்றப்படுகிறது. அதன் பின்னர், பல நாடுகளில் பல வீரர்களால் ஏந்திச் செல்லப்பட்டு ஒலிம்பிக் போட்டி நடைபெறும் மைய அரங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
ஒலிம்பிக் கொடியில் மொத்தம் 6 வண்ணங்கள் உள்ளது. கொடியானது வெள்ளை நிறத்திலும், கடோலியின் மேல் 5 நிறத்தில் 5 வளையங்கள் இருக்கும். இந்த வளையங்கள், ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய ஐந்து கண்டங்களைக் குறிக்கின்றன. இந்த கொடி முதன் முதலில் 1920-ம் ஆண்டு தான் பறக்கவிடப்பட்டது.
ஐரோப்பாவிற்கு நீலம் என்றும், ஆசியாவிற்கு மஞ்சள் நிறம் என்றும், ஆப்பிரிக்காவுக்கு கருப்பு நிறம் என்றும், ஆஸ்திரேலியாவிற்கு பச்சை நிறம் என்றும் மற்றும் அமெரிக்காவிற்கு சிவப்பு என்றும் வரையறுக்கப்பட்டது.
உலக ஒலிம்பிக் தின வாழ்த்துக்கள் 2024..!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |