ரைட் சகோதரர்கள் வாழ்க்கை வரலாறு | Wright Brothers History in Tamil

Wright Brothers History in Tamil

ரைட் சகோதரர்கள் குறிப்பு | Wright Brothers Biography in Tamil

ரைட் சகோதரர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் பெயர் ஓர்வில் ரைட் மற்றும் வில்பர் ரைட் இவர்களது பெயர்கள். ரைட் சகோதரர்கள் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் இவர்கள் இருவரும் முதன் முதலில் டிசம்பர் 17,1903 ஆம் ஆண்டில் 12 வினாடிகளில் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர்கள். இவர்களது முயற்சிகள், சாதனைகள் பல இருக்கின்றன அதனை விரிவாக காண்போம்.

ரைட் சகோதரர்கள் குறிப்பு:

  • வில்பர் ரைட் பிறந்த தேதி: 16.4.1867 அன்று பிறந்தார்.
  • ஓர்வில் ரைட் பிறந்த தேதி: 19.08.1871 அன்று பிறந்தார்.
  • மொழி இனம்: ஜெர்மனி, டச்சு, ஆங்கிலம்.
  • பெற்றோர் பெயர்கள்: (தந்தை) மில்டன் ரைட், (தாய்) சுசான் கேத்ரின்.
  • வில்பர் ரைட் பணி: இதழாசிரியர், மிதிவண்டி விற்பனையாளர் மற்றும் தயாரிப்பாளர், விமானக் கண்டுபிடிப்பாளர்/ விமானத் தயாரிப்பாளர், விமான ஓட்டி/ பயிற்சியாளர்.
  • ஓர்வில் ரைட் பணி: பதிப்பாளர், மிதிவண்டி விற்பனையாளர் மற்றும் தயாரிப்பாளர், விமானக் கண்டுபிடிப்பாளர்/ விமானத் தயாரிப்பாளர், விமான ஓட்டி/ பயிற்சியாளர்,
  • வில்பர் ரைட் இறப்பு: 30.05.1912
  • ஓர்வில் ரைட் இறப்பு: 30.01.1948
சுந்தர் பிச்சை வெற்றி பெற்ற கதை

ரைட் சகோதரர்கள் பற்றிய தகவல்:

மில்டன் ரைட், சுசான் கேத்ரின் என்பவர்களுக்கு மொத்தம் ஏழு குழந்தைகள். ஏழு குழந்தைகளில் வில்பர் ரைட் 16.04.1867 ஆம் ஆண்டு இண்டியானாவிலுள்ள மில்வில்லே என்ற இடத்தில் பிறந்தார். ஒர்வின் ரைட் 19.08.1871 ஆம் ஆண்டு ஒஹையோவின் டேட்டன் என்ற இடத்தில் பிறந்தார்கள். இவர்கள் இருவரும் திருமணமே செய்துகொள்ளவில்லை. இவர்களது சகோதரரான மற்ற இரட்டை சகோதர்கள் சிறுவயதிலே இறந்துவிட்டார்கள்.

தொடக்கப்பள்ளியில் படிக்கும் போது ஓர்வில் ரைட்க்கு குறும்புத்தனம் அதிகம். ஓர்வில் பள்ளியில் ஒருமுறை குறும்புத்தனம் செய்து பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டார். 1878 இல் அவருடைய தந்தை சர்ச் ஆஃப் தி யுனைடெட் பிரெத்ரென் இன் கிறிஸ்ட்டில் ஆயராக இருந்தார். அவர் பயணம் செய்யும் போது எலிகாப்டர் பொம்மையை வாங்கி வந்தார். வான்வழி தொலையளவு முன்னோடியான அல்ஃபோன்ஸ் பேனாட் என்ற பிரஞ்சு நாட்டவரின் கண்டுபிடிப்பை அடிப்படையாகக்கொண்ட காகிதம், மூங்கில், கார்க்கு, இரப்பர் வளையம் ஆகியவற்றால் ஒரு அடி நீளத்திற்கு பொம்மை செய்யப்பட்டிருந்தது. வில்பர் ரைட், ஓர்வில் ரைட் இருவரும் அதிகமாக அதனை வைத்து விளையாடினார்கள். அந்த பொம்மை தான் அவர்களை வானில் பறக்க ஆர்வத்தை உருவாக்கியது.

ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த விமானம்: 

இவர்கள் இருவரும் உயர்கல்வி வரை படிப்பை முடித்தார்கள். ஆனால் அதற்கான பட்டயங்கள் ஏதும் பெறவில்லை. ரைட் குடும்பம் இண்டியானாவிலிருந்து ஒஹையோவிலுள்ள டேட்டனுக்குக் 1884-ஆம் ஆண்டு குடி பெயர்ந்தார்கள். வில்பர் ரைட் பனி சறுக்கில் விளையாடி கொண்டிருந்த போது அடிபட்டு முன் பற்கள் உடைந்துவிட்டது. அவர் கோபம் கொண்டு வெளியில் செல்லாமல் வீட்டில் இருக்க ஆரம்பித்தார். சில வருடம் விட்டில் இருந்த வில்பர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அம்மாவுக்கு உதவியாக இருந்தார். வீட்டில் அதிகம் இருந்ததால் தந்தையின் நூலகத்திலிருந்து படித்தார். சில சமயங்களில் தந்தைக்கு உதவியாக இருந்து வந்தார். சகோதரர் ஆலிவர் ரைட் வில்பரின் உதவியுடன் அச்சுக்கூடத்தை நிறுவினார். இருவரும் இணைந்து ஒரு வார இதழை தொடங்கினார்கள். மேற்கத்திய செய்திகள் என பெயரில் வெளிவந்தது.

இவ்விதழுக்கு ஆர்வில் வெளியிடுவோராகவும், வில்பர் ஆசிரியராகவும் இருந்தனர். அதற்கு பிறகு நாளிதழாக மாற்றி ‘தி ஈவினிங் ஐடெம்’ என்ற பெயரில் வெளியிட்டனர். அந்த நாளிதழ் நான்கு மாதம் வரை வெளிவந்த நிலையில் அதன் பிறகு நின்று போனது. அதன் பின் வாணிக அச்சிடமாக மாறியது. அதற்கு பிறகு நண்பர்கள், அவருடன் படித்த மாணவர்களை அச்சகத்தின் வாடிக்கையாளராக ஆக்கினார்கள்.
பிறகு அச்சு தொழில் லாபம் தராததால் 1892 ஆம் ஆண்டு மிதிவண்டி பழுது பார்த்தார்கள். சில நாட்களுக்கு பிறகு விற்பனை நிறுவனமாக மாறியது. அதன் பின் ரைட் மிதிவண்டி நிறுவனமாக மாறியது. 1896-ல் மிதிவண்டியை தயாரிக்கும் நிறுவனாக மாறியது.

பகத்சிங் வாழ்க்கை வரலாறு

 

அவர்களின் ஆய்விற்கு தேவையான பணம் கிடைத்தது. 1890 ல் அவர்கள் ஒரு முறை நாளிதழ் செய்தி ஒன்றில் ஜெர்மனியைச் சேர்ந்த ஒட்டோ லிலியந்தால் என்பவர் தான் தயாரித்த கிளைடர் என்ற கருவியின் மூலம் இயந்திரம் எதுவுமின்றி காற்றின் சக்தியினால் ஆகாயத்தில் பறந்ததைப்பற்றி ரைட் சகோதரர்கள் கேள்விப்பட்டனர். அதற்கு பிறகு அக்டேவ் சான்யூட், சாமுவேல் பி. லாங்லீ கிளைடர் விமானப் பயணம் பற்றிய முயற்சிகளையும் ஆர்வமுடன் படித்தனர். படித்தவுடன் இயந்திரத்தை கண்டுபிடித்துவிடலாம் என்று அதிக நம்பிக்கை வந்தது.

அதனை பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆசையில் ஒட்டோ லிலியந்தால் ஒரு பறக்கும் சோதனை முயற்சியில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த உயிரிழப்பில் உடைந்து போனாலும் அவர்களின் நம்பிக்கை ஆர்வம் உடைந்து போகவில்லை. சிமித்சோனியன் என்ற அமைப்பின் தலைவருக்கு இருவரும் கடிதம் எழுதினார்கள். ரைட் சகோதரர்களின் ஆர்வத்தை உணர்ந்த கழகத்தின் தலைவர் சாமுவேல் பி. லாங்க்லீ ஆகாயத்தில் பறக்க அதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைப் பற்றியும், வெற்றி தோல்விகளைப் பற்றியும், முன்னேற்றம் பற்றி என இப்படி எல்லாத் தகவல்களையும் அனுப்பி வைத்தார். அவர்களுக்கு முன் அதிகம் பேர் பல மேற்கொண்ட முயற்சிகளை பார்த்து வியந்தனர். அவர்கள் விடாமல் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளை வைத்து சிந்தித்தார்கள். 1899 இல் அவர்களே வானில் பறப்பது பற்றிய வேலைகளைத் தொடங்கினர். 4 ஆண்டு உழைப்புக்குப் பிறகு 1903 டிசம்பரில் அவர்களது முயற்சி வெற்றி பெற்றது.

ரைட் சகோதரர்கள் தொழில்நுட்பம் | Wright Brothers First Flight: 

வானில் பறக்க பல அறிஞர்கள் தோல்வியுற்ற போது ரைட் சகோதரர்கள் பல சோதனைக்கு பிறகு மூன்று தொழில்நுட்பங்கள் உதவின. முதல் முதலாக இறக்கை ஊர்திப் பறப்பியல் பயிற்சி முறையில் ‘முன்னுந்தல்’ (Thrust), ‘மேலெழுச்சி'(Lift), ‘திசைதிருப்பி ‘(Rudder) எனப்படும் ‘முப்புற உந்தல் கட்டுப்பாடு ‘என்ற நுணுக்கத்தை ரைட் சகோதரர்கள் கையாண்டனர். ரைட் சகோதரர்கள் அதன் பின் இரண்டாவது ஊர்திக்கு முன்னுந்தல் ஆற்றலைத் தருவதற்கு எண்ணெய்யில் இயங்கும் எரிபொருள் இயந்திரத்தை அதில் பொருத்தி அதிக வேகத்தை அளித்தனர். மூன்றாவதாக 1900-1903 ஆண்டுகளில் ஆர்வில் ரைட், வில்பர் ரைட் இருவரும் [Wind Tunnel] ஒன்றைத் தயாரித்து 200 விதமான இறக்கைகளைச் சோதித்துத் தகுதியான ஒன்றைத் தேர்ந்தெடுத்தனர்.

விமானத்தின் வகைகள்:

அமெரிக்கா வட கரோலினா கிட்டி ஹாக்கில் [Kitty Hawk, North Carolina] ஆர்வில் ரைட் முதல் முதலாக எஞ்சின் ஊர்தியை இயக்கி 12 வினாடிகள் பூமிக்கு மேல் பறந்தார். அடுத்து வில்பரும், ஆர்விலும் அன்றைய தினம் மாறி மாறி நான்கு தடவைகள் பறந்து காட்டி ஊர்தியின் பறப்பியல் திறனை நிரூபித்தார்கள். வில்பர் ரைட் முற்பட்ட மூன்றாவது இறுதி முயற்சியில் ஆர்வில் ரைட் 12 குதிரைத் திறன் ஆற்றல் கொண்ட 600 பவுண்டு எடை கொண்டிருந்த, பெட்ரோல் இயந்திரம் பூட்டிய பறக்கும் ஊர்தியில் முதன் முதலாகப் பூமிக்கு மேல் ஆகாயத்தில் மணிக்கு 30 மைல் வேகத்தில் 59 வினாடிகள் 852 அடி தூரம் பறந்து காட்டிச் சரித்திரப் புகழடைந்தனர். இருபதாம் நூற்றாண்டின் மகத்தான இரண்டாவது சாதனையாக 1903 இல் ரைட் சகோதரரின் வான ஊர்திப் பறப்பு கருதப்படுகிறது.

முப்படை தளபதி பிபின் ராவத் வரலாறு

ரைட் சகோதரர் இறப்பு:

விமானம் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வமும், விடாமுயற்சியால் அவர்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை. வில்பர் 1912 தொழில்நுட்ப பயணத்தின் போது டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். நோயின் தீவிரத்தால் தன் நினைவின்றி பல நாட்கள் இருந்தார். இறுதியாகத் தனது 45 ஆம் வயதில் தமது இல்லத்தில் 1912, மே 30 இல் காலமானார்.

இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> Varalaru