30 நாட்களில் தலை முடி வளர வைக்க டிப்ஸ்

தேவையான பொருட்கள்

வெந்தயம், சின்ன வெங்காயம், கற்றாழை ஜெல் இந்த மூன்று பொருட்களும் புது முடி வளர வைக்கும் தன்மை கொண்டது

வெந்தயத்தை  மிக்சி ஜாரில் போட்டு பொடி போல் அரைத்துக் கொள்ளவும்.

சின்ன வெங்காயம், கற்றாழை  ஜெல் இரண்டையும் மிக்சி ஜாரில் எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும். அதன் பின்பு வெந்தய பொடியை 2 டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிடவும். 

பிறகு அந்த வெந்தயம் சூடாக இருக்கும் போது வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். அடுத்து மிக்சி ஜாரில் கற்றாழை ஜெல், சின்ன வெங்காயம்  அனைத்தையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்

அரைத்த பொருட்களை ஒரு துணியை வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும் இப்போது ஹேர் பேக் ரெடி

இதை தலையில் கொஞ்சம் கொஞ்சமாக அப்ளை செய்யவேண்டும் அதன் பின்பு 20 நிமிடம் கழித்து எப்போதும் போல் தலை குளித்துக்கொள்ளலாம்