15 நிமிடத்தில் பாத்ரூம் பளிச்சென்று மாற டிப்ஸ்

தேவையான பொருட்கள்

எலுமிச்சை பழத்தோல் – 8 பேக்கிங் சோடா – 1 டேபிள் ஸ்பூன் வினிகர் – 2 டேபிள் ஸ்பூன் உப்பு – 1 டேபிள் ஸ்பூன் சலவைத்தூள் – 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – 1/2 கப்

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 8 எலுமிச்சை பழத்தோல்களையும் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடன் 1/2 கப் தண்ணீரையும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் வடிக்கட்டி கொள்ளவும். அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா, 2 டேபிள் ஸ்பூன் வினிகர், 1 டேபிள் ஸ்பூன் உப்பு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சலவைத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பிறகு இந்த கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சேர்த்து உங்கள் பாத்ரூமில் ஸ்ப்ரே செய்து 10 நிமிடங்கள் கழித்து  தேய்த்து கழுவினீர்கள் என்றால் உங்கள் வீட்டு பாத்ரூம் எப்பொழுதும் சுத்தமாகவும் மற்றும் நறுமணத்துடனும் இருக்கும்.