முட்டைகோஸ் சட்னி செய்வது எப்படி

முதலில் முட்டைகோஸ், வெங்காயம், தக்காளி சிறியதாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும்.

பின் அதில் நறுக்கிய முட்டைகோஸை பொன்னிறம் வரும் வரை வதக்க வேண்டும்

கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, கொத்தமல்லி  விதை ,   மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும்.

பின் அதில் வெங்காயம், தக்காளி, புளி, கொத்தமல்லி, வதக்கி வைத்த முட்டைகோஸ் சேர்த்து வதக்க வேண்டும்

வதக்கி வைத்த பொருட்களை அரைத்து விட்டு தாளித்தால் சட்னி ரெடி