தலைமுடி அடர்த்தியாக வளர உதவும் டிப்ஸ் 

தேவையான பொருட்கள் 

இந்த டிப்ஸிற்கு பாசிப்பயறு – 1 கப் முட்டை – 2 தயிர் – 2 டேபிள் ஸ்பூன்   சின்ன வெங்காயம் – 10 ஆகியவை தேவைப்படும் 

பாசிப்பயிர்

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் பாசிப்பயிரை எடுத்து நன்கு ஊறவைத்து முளைக்கட்ட வைத்து கொள்ளுங்கள்.

மிக்சி ஜாரில் முளைக்கட்ட வைத்துள்ள 1 கப் பாசிப்பயிர் மற்றும் 10 சின்ன வெங்காயத்தையும் சேர்த்து நன்கு அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளுங்கள்.

சின்ன வெங்காயம்

இப்பொழுது அதில் 2 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 2 முட்டையையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

இதனை உங்கள் தலையில் தடவி 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளியுங்கள். இதனை தொடர்ந்து செய்து வருவதால் தலைமுடி நன்கு வளரும்