முடி அடர்த்தியாக வளர பாட்டி வைத்தியம்

தேவையான பொருட்கள்

கொய்யா இலை – 10 சின்ன வெங்காயம் – 20 கடுகு எண்ணெய் – 2 டீஸ்பூன் விளக்கெண்ணெய் – 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்

ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 10 கொய்யா இலை மற்றும் 20 சின்ன வெங்காயம் ஆகியவற்றை  சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு அதில் உள்ள சாற்றினை மட்டும் ஒரு கிண்ணத்தில் வடிகட்டி கொள்ளுங்கள்

அதில் 2 டீஸ்பூன் கடுகு எண்ணெய், 2 டீஸ்பூன் விளக்கெண்ணெய், 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்  ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்

பிறகு இதனை உங்களின் தலைமுடியின் வேர்களில் படுமாறு தடவி 1/2 மணிநேரம் வைத்து பின்னர் தலைக்கு குளியுங்கள்.