மிகவும் சுவையான பாலக் பன்னீர் தோசை செய்வது எப்படி..?

தேவையான பொருட்கள்

பாலக் கீரை – 1 கட்டு பச்சை மிளகாய் -1 பூண்டு – 3 பல் சீரகம் – ½ தேக்கரண்டி தோசை மாவு – 3 கப் நெய் – 2 டீஸ்பூன் துருவிய பன்னீர் – 100 கிராம் தண்ணீர் – தேவையான அளவு உப்பு – ½ தேக்கரண்டி

முதலில் பாலக் கீரையை  சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வேகவைத்து கொள்ளுங்கள்

ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் வேகவைத்து எடுத்துவைத்துள்ள கீரை, 3 பல் பூண்டு, 1 பச்சை மிளகாய் மற்றும் ½ தேக்கரண்டி சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்கு பசைபோல் அரைத்து கொள்ளுங்கள்.

இப்பொழுது நாம் அரைத்து வைத்துள்ள பசையை 3 கப் தோசை மாவில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பின்னர் இதனை தோசையாக ஊற்றி அதன் மீது 2 டீஸ்பூன் நெய் மற்றும் துருவிய பன்னீரை சேர்த்து நன்கு வேகவைத்து எடுத்தால் நமது பாலக் பன்னீர் தோசை தயார்