சுவையான உருளைக்கிழங்கு நக்கட்ஸ் செய்வது எப்படி..?

பிரட் – 4 உருளைக்கிழங்கு – 6 வெங்காயம் – 1 கேரட் – 1 மிளகாய்தூள் – 1 டேபிள் ஸ்பூன் கரம்மசாலா – 2 டேபிள் ஸ்பூன் சோளமாவு – 4 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு தண்ணீர் – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு

4 பிரட்களை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பொடியை அரைத்து வைத்து கொள்ளுங்கள். அடுத்து நாம் எடுத்து வைத்துள்ள 6 உருளைக்கிழங்குகளை நன்கு வேகவைத்து தோல்களை நீக்கி நன்கு மசித்து கொள்ளுங்கள்.

அடுத்து 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்தூள், 2 டேபிள் ஸ்பூன் கரம்மசாலா, தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட் மற்றும் நாம் அரைத்து வைத்துள்ள பிரெட் தூளில் பாதியளவு ஆகியவற்றை சேர்த்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளுங்க

4 டேபிள் ஸ்பூன் சோளமாவுடன் தேவையான அளவு தண்ணீரை சேர்த்து நன்கு கலந்து நாம் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டு எடுத்து நாம் அரைத்து வைத்துள்ள பிரட் தூளில் போட்டு புரட்டி எடுத்து கொள்ளுங்கள்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி அதில் நாம் தயாரித்து வைத்துள்ள Nuggets-யை போட்டு பொறித்து எடுத்தால் மிகவும் சுவையான உருளைக்கிழங்கு Nuggets தயார்.