10 நிமிடத்தில் சுவையான சேமியா பாயாசம் தயார்..!

கடாயில் 2 ஸ்பூன் நெய் சேர்த்து அதில் முந்திரி, திராட்சையை பொன் நிறமாக வறுத்து தனியாக வைத்து விடுங்கள் 

பின்பு 200 கிராம் சேமியாவை நெய்யில் வறுத்து கொள்ளுங்கள்.

இப்போது 3 ஸ்பூன் ஜவ்வரிசியுடன் 2 கப் பால் மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து வேக விடுங்கள் 

10 நிமிடம் கழித்து கடாயில் உள்ள ஜவ்வரிசியுடன் சர்க்கரை மற்றும் வறுத்த சேமியாவை சேர்த்து கலந்து விடுங்கள் 

கடைசியாக 2 கப் பால், வறுத்த முந்திரி திராட்சை மற்றும் ஏலக்காய் சேர்த்து இறக்கினால் சேமியா பாயாசம் தயார்.