வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பொங்கல் பற்றிய சிறப்பு கவிதைகள் | Pongal Kavithai In Tamil

Updated On: January 8, 2026 1:02 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Pongal Kavithai In Tamil

இந்த பதிவில் பொங்கல் பற்றிய சிறப்பு கவிதைகள் பற்றி பார்க்க போகிறோம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தமிழ் மாதத்திலே மிக சிறப்பு வாய்ந்த மாதமாக விளங்குகிறது தை மாதம். தமிழர் திருநாளான தை பொங்கலை அறுவடை திருநாளாக கூறுகிறார்கள். பொங்கல் பண்டிகையானது 4 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. போகி பொங்கல், தை பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் ஆகும். இந்த நான்கு தினங்களுக்கும் தனி தனி சிறப்பு பெயர் உள்ளது.

தமிழர்கள் எத்தனை வகையான விழாக்கள் கொண்டாடினாலும் முதன்மை பெற்றுள்ளது இந்த பொங்கல் பண்டிகை. பொங்கல் அன்று அனைவரும் பொங்கல் வைத்து சூரிய வழிபாடு செய்தால் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம். சரி வாங்க பொங்கல் பற்றிய சிறப்பு கவிதைகள் பார்க்கலாம் வாங்க….

பொங்கல் பற்றிய கவிதைகள்:

1) புதுமலரின் வசமுடன் 

புன்னகைக்கும் நேசமுடன் 

புத்துணர்வு பொங்க 

வாழ்த்தி வரவேற்போம் தைமகளை 

 

2) அனைவரின் வாழ்விலும் 

மகிழ்ச்சி பொங்கி 

செல்வம் பெருகி 

நீடித்த ஆரோக்கியத்துடன் 

வாழ இறைவனை வேண்டுகிறோம். 

 

3) சேற்றில் நீங்கள் கால் வைப்பதால் தான் 

சோற்றில் நாங்கள் கை வைக்கின்றோம் 

உழவர் திருநாள் வாழ்த்துக்கள் 

 

4) பொன்னையும் மண்ணையும் தேடி அலையும் 

இன்றைய வாழ்க்கையில் 

சிறிதளவு மகிழ்ச்சியையும் 

தேடி வைப்போம் 

கிடைக்கும் என்ற நம்பிக்கையில் 

போகட்டும் தீய எண்ணெங்கள் 

கிடைக்கட்டும் புதிய எண்ணெங்கள் 

அனைவருக்கும் இனிய போகி திருநாள் நல்வாழ்த்துக்கள் 

 

5) மஞ்சள் கொத்தோடும் 

மாமரத்து இலையோடும் 

இஞ்சி தண்டோடு 

எறும்பூரும் கரும்போடு 

வட்டப் புதுப்பானை 

வாயெல்லாம் பால்பொங்க 

பட்டுப் புதுச்சோறு 

பொங்கிவரும் பொங்கலிது 

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 

 

6) இனிய பொங்கல் வாழ்த்துக்கள் 

பொங்கல் இனிப்பை போல் 

இந்த நன்னாளை 

உங்கள் குடும்பத்தினரோடு 

மகிழ்ச்சியாக கொண்டாட 

என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 

 

7) இருளை போக்கும் 

ஆதவனாய் பிறந்த இத்தையில் 

இல்லங்களிலும், உள்ளங்களிலும் 

இருள் நீங்கி மகிழ்ச்சி 

என்றென்றும் பொங்கிட அனைத்து 

உணர்வுகளுக்கும் தை பொங்கல் 

நல்வாழ்த்துக்கள்

இதுபோன்று வாழ்த்துக்கள் சம்மந்தப்பட்ட பதிவுகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Wishes in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now