Teacher Day Quotes in Tamil
ஒவ்வொரு மாணவனின் வாழ்க்கையிலும் ஒளியை தருவது ஆசிரியர்கள் தான். எதிர்கால வாழ்க்கையை பற்றி ஒவ்வொருவருக்கும் பயம் இருக்கும், அந்த பயத்தை நீக்கி அவர்களுடைய திறமையை வெளிப்படுவது ஆசிரியர்கள் தான். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 டாக்டர் ராதாகிருஷ்னன் அவர்களின் பிறந்த நாளை தான் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். ராதாகிருஷ்னன் ஆசிரியர் மட்டுமில்லை மாணவர்களோடு கலந்து கல்வியை கற்பித்தவர். சுதந்திரத்திற்கு பிறகு இந்திய நாட்டின் முதல் துணை குடியரசு தலைவரும், இரண்டாவது குடியரசு தலைவர் என்ற பெருமையும் இவருக்கே உரியது. பல சிறந்த மாணாக்கர்களை உருவாக்கி பாரத ரத்னா விருது பெற்ற நல் ஆசிரியரும் இவர்தான். ஆகையால் தான் இவருடைய பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். இந்த பதிவில் ஆசிரியர்களை பற்றிய கவிதைகளை பதிவிட்டுள்ளோம்.
ஆசிரியர் தின வாழ்த்து கவிதை:
கல்வி என்னும் கடலிருந்து
கரை சேர்ந்திடும் கலங்கரை விளக்கமாய் இருக்கும் ஆசிரியர்களுக்கு
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
Aasiriyar Thinam Kavithai:
நாம் பயணிக்கும்
வாழ்க்கைப் பாதையில்
வாழ்வியல் பாடங்களை கற்றுத்தரும்
அனைவருமே ஆசிரியர்கள் தான்…
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
ஆசிரியர் தின வாழ்த்து கவிதை:
தவறுகளை திருத்த தண்டனை கொடுத்து
திறமையை ஊக்குவிக்க பரிசுகள் கொடுத்து
சிந்தனையை தூண்டி சிற்பங்களை செதுக்கும்
சிறந்த சிற்பிகள் தான் ஆசிரியர்…
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கவிதை:
புதர்களை கூட பக்குவப்படுத்தி
நற்பயிர்களை உருவாக்கும்
விளை நிலமே உங்களுக்கு
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கவிதை:
அரிதென அறிவையும் எளிதென பெற,
புத்தகமின்றிய பாடமும் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு…
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |