What is The Meaning of Brother in Law in Tamil
வணக்கம் நண்பர்களே. பொதுவாக, ஆங்கிலத்தில் உள்ள சில வார்த்தைகளுக்கான அர்த்தம் என்ன என்பது நம்மில் பலபேருக்கு தெரியாது. அப்படி நமக்கு தெரியாமல் இருக்கும் வார்த்தைகளில் ஒன்றான Brother in Law என்பதற்கான அர்த்தத்தை இப்பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம் வாங்க.
Brother in Law என்ற வார்த்தையை நாம் அதிகமாக கேட்டு இருப்போம். ஆனால், அப்படி என்றால் என்ன என்று ஒரு நிமிடம் யோசித்து இருப்போம். எனவே, அப்படி யோசித்து இருக்கும் நபர்களுக்கு இப்பதிவு பயனுள்ளளதாக இருக்கும். அதாவது, இப்பதிவில் Brother in Law Meaning in Tamil With Example -யுடன் பார்க்கலாம்.
Brother in Law Meaning in Tamil:
Brother in Law என்பது ஒரு உறவுமுறை வார்த்தையாகும். Brother in Law என்பதற்கு தமிழில் மைத்துனன் என்பது அர்த்தம் ஆகும். அதாவது, கணவரின் அண்ணன் அல்லது தம்பியை Brother in Law என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். மேலும், மாமன், மச்சான், மைத்துனன், கொழுந்தன், சகலை என்றும் கூறுவார்கள். அதாவது, சகோதரரின் கணவர், அல்லது மனைவியின் சகோதரர், கணவரின் அண்ணன் அல்லது தம்பி போன்றவர்களை Brother in Law என்று ஆங்கிலத்தில் கூறலாம்.
Brother in Law Meaning in Tamil With Example:
- உங்கள் கணவருக்கு அண்ணனோ அல்லது தம்பியோ இருக்கிறார்கள் என்றால் அவரை நீங்கள் Brother in Law அழைக்கலாம்.
- உங்கள் மனைவிக்கு அண்ணனோ அல்லது தம்பியோ இருக்கிறார்கள் என்றால் அவரை நீங்கள் brother in law அழைக்கலாம்.
- உங்கள் தங்கையின் கணவரை நீங்கள் Brother in Law என்று அழைக்கலாம்.
Younger Brother-in-Law Meaning in Tamil:
Younger Brother-in-Law என்பதற்கு தமிழில் இளைய மைத்துனர் என்று அர்த்தம்.
Elder Brother-in-Law Meaning in Tamil:
Elder Brother-in-Law என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் மூத்த மைத்துனர் என்று அர்த்தம்.
Co brother-in-Law Meaning in Tamil:
Co brother-in-Law என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் இணை மைத்துனர் என்று அர்த்தம்.
👇தொடர்புடைய பதிவுகள் |
நாத்தனார் என்பதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா? |
களிப்பு என்பதன் தமிழ் அர்த்தம் |
ஆக்கம் தமிழ் அர்த்தம் என்ன. |
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |