கேரளா பெண்கள் அழகின் இரகசியம் தேங்காய் எண்ணெய் என்று தெரியும்..! ஆனால் அதை எப்படி பயன்படுத்துவது..?

Advertisement

கேரள பெண்களின் அழகின் ரகசியம் | How to Apply Coconut Oil On Face

தமிழ்நாட்டு பெண்களை விட கேரளா பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்று அனைவருக்கும் தெரியும். என்ன தான் அப்படி அழகுக்கு செய்கிறார்கள் என்று அனைவரின் கேள்வியாக இருக்கிறது. இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக இந்த பதிவு இருக்கும். ரொம்ப பெரிதாக ஒன்றுமில்லை நண்பர்களே.! தேங்காய் எண்ணெய் தான் அவர்களின் அழகின் இரகசியத்திற்கு காரணம். இந்த தேங்காய் எண்ணெயை எப்படி பயன்படுத்துவது என்று இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம்.

தேங்காய் எண்ணெய் முகத்தில் தடவினால்:

கேரள பெண்களின் அழகின் ரகசியம்

No:1

இரவு தூங்குவதற்கு முன் முகத்தை கழுவி விட்டு ஈரம் இல்லாமல் துடைத்து விடவும். பின் தேங்காய் எண்ணெயை முகத்தில் அப்ளை செய்து கொஞ்ச நேரம் மசாஜ் செய்து அப்படியே இரவு முழுவதும் இருக்கட்டும். காலையில் எழுந்து முகத்தை கழுவி விடவும்.

முக்கியமாக ஆயில் ஸ்கின் உடையவர்கள் இந்த பேக்கை தவிர்க்க வேண்டும். ஆயில் ஸ்கின் உடையவர்கள் 2 அல்லது 3 நிமிடங்கள் வைத்திருந்து முகத்தை கழுவி விட வேண்டும்.

No:2

கேரள பெண்களின் அழகின் ரகசியம்

ஒரு கிண்ணத்தில் காய்ச்சாத பால் 1 தேக்கரண்டி, தேன் 1 தேக்கரண்டி, தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவி விடவும். இப்படி செய்வதினால் முகம் பளபளப்பாக இருக்கும். 

இதையும் படியுங்கள் ⇒  தலை சீவும் போது சீப்பில் முடி அதிகமாக கொட்டுதா..! அப்போ இந்த எண்ணெயை மட்டும் ட்ரை பண்ணுங்க..!

No:3

கேரள பெண்களின் அழகின் ரகசியம்

ஒரு பவுலில் 1 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள், கிழங்கு மஞ்சள் தூள் ஏதவாது ஒன்றை சேர்த்து கொள்ளவும். இதனுடன் 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக் கண்களுக்கு கீழ் கருவளையம் அல்லது கருப்பாக இருக்கும் அல்லவா.! இதனை நீக்குவதற்கு பெரிதும் உதவுகிறது. அதனால் இந்த பேக்கை இரவு தூங்குவதற்கு முன்பு கண்களுக்கு கீழ் அப்ளை செய்து 15 நிமிடம் வைத்திருந்து பிறகு கழுவி விட வேண்டும்.

No:4

கேரள பெண்களின் அழகின் ரகசியம்

ஒரு பவுலில் காபி தூள் சிறிதளவு, தேங்காய் எண்ணெய் சிறிதளவு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக் சிறந்த ஸ்கிரப் ஆக இருக்கும். இதனை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவி கொள்ளலாம்.

No:5

கேரள பெண்களின் அழகின் ரகசியம்

ஒரு கிண்ணத்தில் ஆரஞ்சு சாறு சிறிதளவு, தேங்காய் எண்ணெய் சிறிதளவு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.  இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவி கொள்ளலாம்.

இதையும் படியுங்கள் ⇒ இந்த பொருள் 1 கைப்பிடி இருந்தால் போதும் முகம் மட்டுமில்லாமல் உடலும் வெள்ளையாகும்..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement