முகம் பளபளப்பாக என்ன செய்வது | Face Shine Tips in Tamil
வணக்கம் நண்பர்களே..! இன்றைய உலகில் பல ஆண்கள், பெண்கள் எல்லோருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை.? அது என்னவென்று தெரியுமா.? முகம் கலரா இல்லை என்று தான். கடவுள் படைக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியான நிறத்தையும், தோற்றத்தையும் கொடுக்கவில்லை. ஒவ்வொருவரும் வெவ்வேறு நிறம், தோற்றம், குணம் உடையவர்களாகத்தான் இருப்பார்கள். நாம் ஏன் இந்த நிறத்தில் இருக்கிறோம் என்று கவலைப்படாதீர்கள்.
கலரா இல்லையென்றால் நமக்கு மரியாதை இருக்காது என்று நினைப்பார்கள் அதற்காக மருந்து கடையில் உள்ள சில கிரீம்களை பயன்படுத்துவார்கள். அப்படி பயன்படுத்தும்போது சில ஒவ்வாமைகள் முகத்தில் ஏற்படும். இனி அந்த மாதிரியெல்லாம் பயன்படுத்தாமல் வீட்டிலிருந்தே சில பொருட்களை பயன்படுத்தி வெள்ளையாவது எப்படி என்று பார்ப்போம் வாங்க..!
கோடையில் சருமத்தை எப்படி பாதுகாக்கலாம் |
தேவையான பொருட்கள்:
- தக்காளி
- சீனி
- தேன்
- பால்
- வெள்ளரிக்காய்
- முட்டை
- எழும்பிச்சைபழம்
- தயிர்
- கடலை மாவு
- கற்றாழை
முகம் பளபளப்பாக இருக்க செய்முறை – 1
தக்காளி | சீனி
- தக்காளியில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி அதிகப்படியாக உள்ளது. ஆண்டிபாக்டீரியா தன்மை தக்காளியில் அதிகம் இருப்பதால் பருக்கள், கரும்புள்ளிகள் நீங்கி சருமம் பளபளப்பாக மாறிவிடும்.
- முதலில் தக்காளியை இரண்டாக வெட்டி கொள்ளவும். அடுத்து சிறிய சீனியாக எடுத்துக்கொள்ளவும்.
- அதன்பின்னர் ஒரு பாதி தக்காளியுடன் சீனியையும் சேர்த்து முகத்தில் மசாஜ் செய்து 20 நிமிட வரைக்கும் வைத்து கொள்ளவும். அதன் பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
- இதுபோல் 5 நாட்கள் செய்தால் முகம் பளபளப்பாக மாறிவிடும்.
முகம் பளபளப்பாக இருக்க செய்முறை – 2
தேன் | பால்
- முதலில் அரை கப் பால் அதனோடு 3 சொட்டு தேன் இவை இரண்டையும் நல்லா கலந்து கெட்டியாகும் பதம் வரை கலக்கவும்.
- அதன்பின்னர் பிரஸ் அல்லது விரலை பயன்படுத்தி அந்த தேன் கலந்த பேக்கை முகம் முழுவதும் தடவவும். முகத்தில் தடவிய பின்னர் 10 அல்லது 15 நிமிடம் காயவிடவும். காய்ந்தபின்னர் ஈரத்துணியால் ஒத்துக்கொடுக்கவும். அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.
- முகத்தை கழுவிய பின்னர் குறைந்தது அரை மணி நேரம் வரைக்கும் எந்த விதமான சோப்புகளையும் பயன்படுத்த வேண்டாம். இதுபோல் மூன்று நாட்கள் பயன்படுத்தினால் முகம் பளபளப்பாக மாறிவிடும்.
1 முறை ட்ரை பண்ணுங்க..! முகம் தங்கம் போல் மின்னும்..! |
வெள்ளரிக்காய்
- முதலில் பாதி வெள்ளரிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். நறுக்கிய வெள்ளரிக்காயை நன்றாக அரைத்து கொள்ளவும்.
- இப்போது அரைத்த வெள்ளரிக்காயை வடிகட்டியில் வைத்து வடிகட்ட வேண்டும். வெள்ளரிக்காய் வடிகஞ்சியை எடுத்து வைக்கவும்.
- அதன் பிறகு சிறிய பாத்திரத்தில் 4 தேக்கரண்டி கடலை மாவு, 2 தேக்கரண்டி தயிர், 3 தேக்கரண்டி வெள்ளரிக்காய் வடிக்கஞ்சி மூன்றையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
- இப்போது மிக்ஸ் செய்த வெள்ளரிக்காயை முகத்தில் தடவி 20 நிமிடம் காய விடவும். காய்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள்.
- இதுபோல் வாரத்தில் மூன்று முறை செய்யுங்கள் முகம் பளபளப்பாக மாறிவிடும்.
முகம் பளபளப்பாக இருக்க செய்முறை – 3
முட்டை
- நமது ஊரில் எளிதில் கிடைக்கக்கூடியதில் ஒன்று முட்டை. முட்டையில் புரோட்டீன் சத்து அதிகம் நிறைந்துள்ளது. முட்டையை வைத்து முகம் பளபளப்பாவது எப்படி என்று பார்ப்போம் வாங்க..!
- முதலில் ஒரு முட்டையை இரண்டாக உடைத்து வெள்ளைக்கரு, மஞ்சள்கரு என்று தனித்தனியாக எடுத்துக்கொள்ளவும். அடுத்து வெள்ளைக்கரு தனியாகவும் மஞ்சள்கரு தனியாகவும் கலக்க வேண்டும். இப்போது மஞ்சள் கருவை முகத்தில் தடவ வேண்டும்.
- முகத்தில் தடவிய பின்னர் முகம் இறுகிய நிலை மாறும் அப்போது முகத்தை கழுவ வேண்டும்.
- அதன் பின்னர் வெள்ளைக்கருவில் 1 தேக்கரண்டி எழும்பிச்சைபழம் சாறு, 1 தேக்கரண்டி தேன் விட்டு கலக்கவும்.
- இப்போது வெள்ளைக்கரு பேஸ்ட்டை முகத்தில் தடவுங்கள்.
- முகத்தில் தடவி நன்றாக காய்ந்ததும் முகத்தை கழுவ வேண்டும்.
- இதுபோல் ஒரு வாரத்தில் இரு முறை செய்தால் முகம் சுருக்கம் நீங்கி பளபளப்பாக மாறிவிடும்.
கற்றாழை
- நண்பர்களே கற்றாழையை வைத்து முகம் பளபளப்பாவது எப்படி என்று பார்ப்போமா.!
- கற்றாழையில் இயற்கையாகவே மருத்துவ குணம் உள்ளது.
- முதலில் கற்றாழை மற்றும் மஞ்சள் தூள் இரண்டையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
- இப்போது கலந்து வைத்த கற்றாழையை முகத்தில் தடவ வேண்டும்.
- முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
- இது போல் ஒரு வாரத்தில் மூன்று முறை செய்தால் முகத்திலுள்ள கரும்புள்ளிகள், சுருக்கங்கள் நீங்கி முகம் அழகாக தோற்றமளிக்கும்.
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |