Mugam Palapalakka Tips Tamil
அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் முகம் எப்பொழுதும் பளபளப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். முகம் எப்பொழுதும் பளபளப்பாக இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் இருக்க கூடிய மிகப்பெரிய ஆசை என்றே சொல்லலாம். அதிலும் பெண்கள் தங்கள் அழகை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக எத்தனையோ முயற்சிகளை செய்கிறார்கள். அந்த வகையில் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவின் மூலம் உங்கள் முகத்தை பளபளப்பாக வைத்து கொள்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
இந்த இரண்டு பொருட்கள் இருந்தாலே போதும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முகத்தை வெள்ளையாக்கலாம் |
முகம் பளபளப்பாக இருக்க டிப்ஸ்:
Tips -1
முதலில் உங்கள் முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவிக் கொள்ளுங்கள். பின் சிறிதளவு பாலை உங்கள் முகத்தில் தடவி கொள்ளுங்கள். பிறகு 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவுங்கள்.
இதுபோல தினமும் செய்து வந்தால் உங்கள் முகம் பளபளப்பாகவும் பொலிவுடனும் இருக்கும்.
Tips -2
5 புதினா இலைகளை அரைத்து கொள்ளுங்கள். பின் அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.
இது போல வாரம் 2 முறை செய்து வருவதால் முகம் பொலிவாக இருக்கும். முகத்தில் இருக்கும் மாசுகள் அகற்றப்பட்டு முகம் பளபளப்பாக இருக்கும்.
Tips -3
ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு கடலை மாவு சேர்த்து அதனுடன் 1 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதை முகத்தில் தடவ வேண்டும். பிறகு 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
இதுபோன்று செய்து வருவதால் முகம் அழகாக மாறும். முகம் எப்பொழுதும் பொலிவாக இருக்கும்.
Tips -4
வேப்பிலை, புதினா, மற்றும் சிறிது மருதாணி இலைகளை வெயிலில் காயவைத்து பொடியாக செய்து கொள்ளவும்.
பின் அதை தினமும் சிறிதளவு எடுத்து பாலில் கலந்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடம் சென்ற பிறகு முகத்தை சுத்தமான நீரை கொண்டு முகத்தை கழுவ வேண்டும்.
இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், பருக்கள், தழும்புகள் அதேபோல வேர்க்குரு வராமல் தடுக்க முடியும்.
இதையும் படியுங்கள் ⇒ வெயிலில் கருத்து போன உங்கள் முகத்தை பளிச்சென்று வைக்க இதை follow பண்ணுங்க…!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tami |