சந்திராஷ்டமம் தினத்தில் இதை மட்டும் செஞ்சிடாதீங்க..! | Chandrashtama in Tamil

chandrashtama in tamil

சந்திராஷ்டமம் நாளில் செய்யக்கூடாதவை | Chandrashtama Naalil Seiya Kudathavai

ஜோதிடத்தை நம்பும் பெரும்பான்மையான மக்கள் காலண்டரில் தவறாமல் ராசிபலனையும், சந்திராஷ்டம நாட்களையும் பார்ப்பார்கள். அது என்ன சந்திராஷ்டமம் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நட்சத்திர பெயர் போட்டுள்ளதே என நினைத்திருப்போம். அஷ்டம் என்றால் எட்டு சந்திரன் உங்கள் ராசியிலிருந்து 8-வது ராசியில் சஞ்சரிப்பதற்கு சந்திராஷ்டமம் என்று பெயர். உங்கள் ராசிக்கு 8-வது இடத்தில் சந்திரன் இருந்தால் , அது உங்களுக்கான சந்திராஷ்டம காலமாக கூறப்படுகிறது. இந்த சந்திராஷ்டம் தினத்தில் கெட்டது நடந்து விடுமோ என்று பலரும் அச்சம் கொள்வார்கள். சந்திராஷ்டமதிற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் மற்றும் சந்திராஷ்டமம் அன்று செய்ய கூடாதவை என்ன என்பதை இந்த தொகுப்பில் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

சந்திராஷ்டமம் என்றால் என்ன?

  • 27 நட்சத்திரங்கள் என்பதால், 25 நாட்களுக்கு ஒருமுறை இந்த சந்திராஷ்ட நிகழ்வு உங்களின் ஜென்ம நட்சத்திரத்திற்கு ஏற்படும். சந்திரன் என்பதற்கு மனோகாரகன் என்று பொருள் அவர் நம்முடைய மன நிலையை கட்டுக்குள் வைத்திருப்பவர்.
  • சந்திராஷ்டமா தினத்தில் 8 வது இடத்தில் அசுப பலன்களை உருவாக்குவார் என்பதால் அந்த 2 1/4 நாட்கள் உங்களுக்கு சற்று மன இறுக்கம் ஏற்படும். இதனால் தான் சந்திராஷ்டம நாளிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்

சந்திராஷ்டமம் அன்று செய்ய கூடாதவை:

  • Chandrashtama in Tamil: இந்த தினத்தில் பயணம் செய்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் நம்முடைய மனது ஒரு நிலையில் இருக்காது பதட்டமான சூழ்நிலையில் காணப்படுவோம் என்பதால்.
  • மற்றவர்களை பற்றி பின்னாடி பேசக்கூடாது. நீங்கள் யாரிடம் சொல்கிறீர்களோ அவர்களாலேயே உங்களுக்கு தீங்கு ஏற்படலாம்.
  • சந்திராஷ்டம தினத்தில் புதிய முயற்சிகளோ அல்லது முக்கிய முடிவுகளோ எதுவும் எடுக்க கூடாது.
  • திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகளை தவிர்த்து கொள்வது நல்லது.
  • முக்கிய செயல், முக்கிய சந்திப்பு, பேச்சுவார்த்தை எல்லாவற்றையுமே தள்ளி வைப்பது நல்லது.
சந்திர தரிசனம் நேரம் 2022

சந்திராஷ்டமம் நாளில் செய்ய வேண்டியவை:

  • இந்த தினத்தில் நீங்கள் பதட்டம் இல்லாமல் பொறுமையை கடைபிடிக்க வேண்டும், அதனால் நீங்கள் தியானம் மேற்கொள்வது நல்லது.
  • அலுவலகத்திற்கு செல்லலாம் ஆனால் அனாவசிய பேச்சுக்களை குறைத்து கொண்டு தங்களுடைய வேலையை மட்டும் செய்து விட்டு வர வேண்டும்.
  • சந்திராஷ்டம நேரத்தில் நம் மனது பதட்டமாக இருப்பதால் செயல்கள் வெற்றி அடைவதில் சிக்கல் ஏற்படும். இதை உணர்ந்து நாம் அந்த நாளில் திட்டமிட்டு செயல்படுதல் நல்லது.

சந்திராஷ்டமம் பரிகாரம்:

Chandrashtama in Tamil: இந்த தினத்தில் உங்களுடைய இஷ்டதெய்வத்தை நினைத்து வேண்டி கொள்ளலாம். சந்திராஷ்டம நேரத்தில் நீங்கள் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருந்தாலே நமக்கு பிரச்சனைகள் எதுவும் வராது.

நாம் அன்றாட பணிகளை சாரியாக, திட்டமிட்டு செய்ய வேண்டும் என்பதற்கு தான் ஜோதிடர்கள் முன்கூட்டியே சந்திராஷ்டம தினத்தை குறித்து வைத்து கவனமாக இருக்க வலியுறுத்தியுள்ளனர்.

சந்திராஷ்டமம் 2022..!

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்