கடக ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்..?

Kadaga Rasi Thirumana Valkai

Kadaga Rasi Thirumana Valkai

அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய ஆன்மிகம் பதிவில் கடக ராசியில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். கடக ராசியில் புனர்பூசம், பூசம், ஆயில்யம் போன்ற நட்சத்திரங்கள் இடம் பெறுகின்றன. கடக ராசி ஆடி மாதத்தை குறிக்கிறது. கடக ராசியில் பிறந்தவர்கள் அன்பானவர்களாக இருப்பார்கள்.

நினைத்த காரியத்தில் வெற்றி பெறுவார்கள். அனைவரிடத்திலும் அன்புடன் பழகுவார்கள். கடக ராசிக்காரர்களின் அதிபதி சந்திரன் என்பதால் இவர்கள் நேர்மையான எண்ணங்களை கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும், கடக ராசியில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

கடக ராசி பூசம் நட்சத்திரம் வாழ்க்கை பலன்கள் எப்படி இருக்கும்..!

கடக ராசி திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்:

கடக ராசி திருமண வாழ்க்கை

கடக ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு நல்ல ஆசானாக இருப்பார்கள். நேர்மையானவர்களாகவும் உண்மையானவர்களாகவும் இருப்பார்கள். அனைவரிடத்திலும் அன்புடனும் பாசத்துடனும் பழகுவார்கள்.

இவர்கள் பிடித்தவர்களுக்காக எதையும் செய்வார்கள். இவர்கள் ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் அதிக பேச்சாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.

கடக ராசியில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இவர்கள் வாழ்க்கை துணையிடம் அன்பை பகிர்ந்து கொள்வார்கள். காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியுடன் இருப்பார்கள்.

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு திருமண முயற்சியில் கால தாமதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. கடக ராசியில் பிறந்த ஒரு சிலருக்கு திருமணம் நிச்சயித்த பிறகு மாறி அமையும் நிலை ஏற்படலாம்.

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு வரும் வாழ்க்கை துணை அன்பானவராக இருப்பார்கள். இவர்களின் வாழ்க்கை துணை அமைதியானவர்களாக இருப்பார்கள்.

எவ்வளவு அமைதியாக இருக்கிறார்களோ அந்த அளவிற்கு கோபமும் இருக்கும். கடக ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணை நியாயமான விஷயத்திற்காக மட்டுமே கோபப்படுவார்கள்.

இவர்களின் வாழ்க்கை திருமணத்திற்கு பின் சிறப்பாக இருக்கும். திருமணத்திற்கு பின் தொழில், பதவி, உத்தியோகம், சுயதொழிலில் முன்னேற்றம் அடைவார்கள். இவர்களின் வாழ்க்கையில் பண தட்டுப்பாடு இருக்காது.

கடக ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணை அவர்களின் வாழ்க்கையை மாற்றி அமைப்பவராக இருப்பார்கள். கடக ராசியில் பிறந்தவர்கள் பிள்ளைகளால் மகிழ்ச்சி காண்பார்கள். பிள்ளைகளின் வளர்ச்சி இவர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்