செல்வம் பெருக பரிகாரம்
எல்லோரும் வீட்டிலும் செடிகள் மற்றும் பூச்செடிகள் வளர்ப்பது மிகவும் பிடித்தமான செயலாக இருக்கிறது. மேலும் வீட்டை அழகாக வைத்து கொள்வதற்காக வாசலில் பலம் பூச்செடிகளை வளர்த்து வருகிறோம். அந்த வகையில் இந்துக்கள் அனைவரும் வீட்டிலும் துளசி செடியை நம்பிக்கையுடன் வளர்த்து வருகின்றனர். இந்து மதத்தில் துளசி செடியை புனிதமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கும் போது துளசி மட்டும் வளர்க்காமல் அதோடு சில செடிகளை சேர்த்து வளர்ப்பதன் மூலம் செல்வ செழிப்போடு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. துளசி செடியை இட திசையில் வைக்க வேண்டும், அதோடு எந்த செடியை சேர்த்து வளர்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
துளசி செடி வைக்கும் திசை:
துளசி செடியை கிழக்கு திசையில் வைக்க வேண்டும். வீட்டின் மையப்பகுதியில் வைக்க வேண்டும். இல்லையென்றால் பால்கனி, அல்லது வடக்கு திசை அல்லது வடகிழக்கு திசை போன்ற திசைகளில் வைக்கலாம்.
இந்த திசைகளில் துளசி செடியில் வளர்ப்பதன் மூலம் எதிர்மறை ஆற்றலை நீக்கி வீட்டில் நேர்மறை ஆற்றலை உருவாக்க கூடிய சக்தி துளசி செடிக்கு இருக்கிறது.
பணக்கஷ்டம் வராது துளசி வேரை இப்படி பண்ணுங்க..!
துளசி செடி வளர்க்கும் முறை:
துளசி செடியை ஒற்றைப்படையில் வளர்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு என்ற எண்ணிக்கையில் வளர்க்க வேண்டும். வீட்டை சுற்றி துளசி செடியை வளர்ப்பதன் மூலம் மகாலட்சுமியை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள முடியும். துளசி செடியை வீட்டின் முற்றத்தில் நட்டால் வீட்டில் உள்ள தீமைகள் நீங்கும்.
செல்வம் பெருக ஊமத்தை செடி:
ஊமத்தை செடியை வீட்டில் வளர்ப்பதன் மூலம் செல்வ செழிப்பு மற்றும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. கருப்பு ஊமத்தை செடி சிவபெருமானுக்கு உரியதாக கருதப்படுகிறது. அதனால் ஆன்மிகத்தில் இந்த செடியை வீட்டில் நடுவதன் மூலம் சிவபெருமானின் அருள் கிடைத்து வீட்டில் செல்வம் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. துளசி செடியை எப்படி பராமரிக்கிறீர்களோ அது போலவே ஊமத்தை செடியையும் பராமரிக்க வேண்டும். இப்படி செய்வதால் வீட்டில் உள்ள கஷ்டங்கள் நீங்கி பணவரவு அதிகரிக்கும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |