வரப்போகும் 2023 ஆம் ஆண்டு துலாம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா..?

Advertisement

Thulam Rasi Palan 2023

இன்றைய ஆன்மிகம் பதிவில் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு 2023 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். ஜோதிட சாஸ்திரப்படி ராசிகளில் 7 ஆவது இடத்தில் இருக்கும் ராசி தான் துலாம். இதில் சித்திரை, சுவாதி, விசாகம் என்ற 3 நட்சத்திரங்கள் இடம் பெறுகின்றன. அதுபோல 2023 ஆம் ஆண்டு துலாம் ராசிக்காரர்களுக்கு பல எதிர்பாராத திருப்பங்கள் வரப்போகின்றன. மேலும், இந்த பதிவின் மூலம் துலாம் ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கை பலனை தெரிந்து கொள்ளுங்கள்..!

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 2023 ஆம் ஆண்டு இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பெய்யப் போகிறது..! இதில் உங்கள் ராசி இருக்கா 

துலாம் ராசி பலன்: 

Thulam Rasi Palan 2023

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு யோகமான ஆண்டாக இருக்கப்போகிறது. 2023 ஆம் ஆண்டு துலாம் ராசியில் பத்து மாதங்களுக்கு கேதுவின் பார்வை இருக்கும். அதனால் உங்களுக்கு நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

துலாமின் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 -வது வீட்டிற்கு சனி பகவான் வருகிறார். அதனால் நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. குருவின் பார்வை உங்கள் ராசியில் படுவதால் துலாம் ராசிக்காரர்களுக்கு திருமணம் கைகூடும்.

காதல் மற்றும் திருமணம்: 

காதல் மற்றும் திருமணம்

இந்த ஆண்டு குருவின் பார்வை உங்கள் ராசியில் இருப்பதால் உண்மையான அன்பு உங்களை தேடிவரும். காதல் வாழ்க்கையில் நீங்கள் உண்மையாக இருந்தால் உங்கள் காதலை தக்கவைத்து கொள்ளலாம். அதுபோல திருமணமானவர்கள் உங்கள் துணையை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். திருமணமாகாத துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு திருமணம் நடைபெறும்.

துலாம் ராசி தொழில்:

இந்த ஆண்டு உங்கள் தொழிலில் சில ஏற்ற தாழ்வுகள் ஏற்படும். அதனால் ஒவ்வொரு நாளும் சிந்தித்து செயல்பட வேண்டும். வரும் ஆண்டு உங்கள் தொழிலில் அதிக வேலைகள் காணப்படும். அதுபோல உங்கள் தொழிலில் சில சிக்கல்கள் ஏற்படும் ஆண்டாக 2023 ஆம் ஆண்டு இருக்கும். இருந்தாலும் உங்கள் முயற்சியால் இந்த ஆண்டில் வெற்றி பெறுவீர்கள். அதனால் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

2023 ஆம் ஆண்டு விருச்சிக ராசிக்கு இப்படி தான் இருக்குமா?

குடும்ப வாழ்க்கை:

குடும்ப வாழ்க்கை

வரும் ஆண்டு உங்கள் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் ஆண்டாக இருக்கும். அதனால் உங்களுக்கு சுபச்செலவுகள் உண்டாகும். உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களுடன் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். இந்த ஆண்டு சொந்தமாக வீடு அல்லது நிலம் வாங்குவீர்கள்.

இந்த ஆண்டு உங்களைத் தேடி நல்லச் செய்திகள் வந்துக் கொண்டிருக்கும். உங்களிடம் எவ்வளவு பொறுப்புகள் இருந்தாலும் அதை விரைவாக முடித்து காட்டுவீர்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு கொள்வதால் புதிய வாய்ப்புகள் உங்களை தேடிவரும்.

அதுபோல உங்கள் குழந்தைகள் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்வார்கள். அவர்களின் வளர்ச்சி உங்களுக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் கொடுக்கும்.

ஆரோக்கியம் எப்படி இருக்கும்..?  

இந்த ஆண்டு உங்கள் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படும் என்பதால் நீங்கள் ஆரோக்கியத்தில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும். உணவில் கவனம் செலுத்தி சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். துலாம் ராசியில் பிறந்தவர்கள் சரியான நேரத்தில் உணவு மற்றும் ஓய்வு எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.

இந்த ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டில் சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டு.!
2023 ஆம் ஆண்டு கடக ராசிக்கு இப்படி தான் இருக்குமா?

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement