யோகர்ட் தயிர் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் | Difference Between Curd and Yoghurt in Tamil

தயிர் மற்றும் யோகர்ட் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு | Curd and Yogurt Difference in Tamil

உடல் பருமனாக உள்ளவர்கள் தங்களது எடையை குறைப்பதற்கு கட்டாயம் யோகர்ட் எடுத்து கொள்கிறார்கள். நாம் தயிர் மற்றும் யோகர்ட் இரண்டும் ஒன்று என நினைத்து வருகிறோம், ஆனால் உண்மையில் தயிர் மற்றும் யோகர்ட் இரண்டுமே சற்று வேறுபாடு உள்ள உணவுப்பொருள். தயிர் மற்றும் யோகர்ட் அதை தயாரிக்கும் முறை, பாலின் தன்மை மற்றும் நொதித்தல் போன்றவற்றை பொறுத்து வேறுபடுகிறது. நாம் இந்த தொகுப்பில் தயிருக்கும், யோகர்டுக்கும் உள்ள வேறுபாடு மற்றும் பயன்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Difference Between Curd and Yoghurt in Tamil:

Curd and Yogurt Difference in Tamil

Difference Between Curd and Yoghurt in Tamil
தயிர்  யோகர்ட் 
தயிர் பாலை காய்ச்சி அதில் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து திரள வைத்து தயாரிக்கப்படுகிறது. யோகர்ட் பாக்டீரியாக்கள் மூலம் பாலை நொதிக்க வைத்து தயாரிக்கப்படுகிறது. 
ஒரு பெளல் தயிரில் நமக்கு 3-4 வரை புரதசத்து கிடைக்கிறது. ஒரு பெளல் யோகர்ட்டில் 8-10 வரை புரதச்சத்து கிடைக்கிறது. (யோகர்ட்டில் பெரும்பான்மை மக்கள் கிரேக் யோகர்ட்டை தான் அதிகம் உபயோகப்படுத்துகிறார்கள்)
கால்சியம், இரும்புச் சத்து, பொட்டாசியம், விட்டமின் பி6 போன்றவை தயிரில் உள்ளது. கால்சியம், பாஸ்பரஸ், விட்டமின் பி12 போன்ற சத்துக்கள் யோகர்ட்டில் உள்ளது 
தயிர் அதன் தன்மையை பொறுத்து சுவையை கொடுக்கும். சில சமயம் புளிப்பு சுவையை தயிர் கொண்டுள்ளது. யோகர்ட் மாங்கோ, ஸ்ட்ரா பெர்ரி, வெண்ணிலா, ப்ளூ பெர்ரி சுவைகளில் கிடைக்கிறது.
மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பதற்கு மற்றும் ஜீரண சக்தியை அதிகரிப்பதற்கு தயிர் உதவுகிறது. இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு உதவுகிறது.
உடற்பயிற்சி செய்பவர்களுக்கு தசைகளில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்க தயிர் உதவுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் உதவுகிறது. யோகர்ட் உடற்பயிற்சி செய்பவர்களின் தசை களைப்பை போக்குவதற்கு உதவுகிறது.

தேவையான பொருட்கள்:

Difference Between Curd and Yoghurt in Tamil

  1. பால் – தேவையான அளவு
  2. உறை தயிர் – 2 டேபிள் ஸ்பூன்

தயிர் செய்முறை:

  • தேவையான அளவு பால் எடுத்து அதனை நன்கு காய்ச்சி கொள்ளவும். பால் நன்றாக கொதித்த பின்பு அதில் 2 டேபிள் ஸ்பூன் உறை தயிர் சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.
  • பின் அதை ஒரு எட்டு மணி நேரம் அல்லது இரவு முழுவதும் மூடி வைக்கவும். மறுநாள் காலையில் அது தயிராக மாறி விடும் (தயிர் செய்வதற்கு பெரும்பாலும் பசும்பால் பயன்படுத்துவது நல்லது)

தேவையான பொருட்கள்:

Difference Between Curd and Yoghurt in Tamil

  1. பால் – தேவையான அளவு
  2. யோகர்ட் – 1 டேபிள் ஸ்பூன்

யோகர்ட் செய்முறை:

  • தேவையான அளவு பாலை நன்கு காய்ச்சி கொள்ளவும். காய்ச்சிய பாலை வேறொரு பாத்திரத்தில் மாற்றி கொள்ளுங்கள். பின் அதை 100 – 105 Fahrenheit வரை ஆறவைக்கவும்.
  • பின் அதன் மேல் ஆடை படிந்து இருக்கும், அதை கிளறி விடாமல் அதன் மேல் 1 டேபிள் ஸ்பூன் யோகர்ட் சேர்த்து மெதுவாக மிக்ஸ் பண்ணவும். பின்னர் இதை வெதுவெதுப்பான நீருக்குள் வைத்து எட்டு மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
  • பின் அதில் உள்ள நீரை வடிகட்டி விட்டு குளிர்சாதனப்பெட்டியில் 4 மணி நேரம் வைத்திருக்கவும். இதை நீங்கள் ஐந்து நாட்கள் வரை உபயோகப்படுத்தலாம்.
பால் மற்றும் தயிர் இவற்றில் உள்ள நன்மைகள்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்