கர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்..!

Advertisement

கர்ப்பகாலத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள்..!

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய ஆரோக்கியம் பகுதியில் நாம் அனைவரும் மிக முக்கியமாக தெரிந்துக்கொள்ள வேண்டிய ஒரு தகவலை பற்றித்தான் பார்க்க இருக்கின்றோம். அது என்னவென்றால் பெண்கள்  கர்ப்பகாலத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள் என்ன என்பதை பற்றித்தான். பொதுவாக திருமணமான பெண்களுக்கு பெருங்கனவாக இருப்பது குழந்தை பேறுதான். அப்படிப்பட்ட கர்ப்பகாலத்தின் பொழுது நீங்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். அதிலும் உங்களுக்கு உணவுக்கட்டுப்பாடுகள் முதலில் தெரிந்திருக்கவேண்டும்.

கர்ப்பகாலத்தில் எதையெல்லாம் சாப்பிடலாம் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது என்ற புரிதல் முதலில் உங்களுக்கு வேண்டும். அதற்காகத்தான் இந்த பதிவில் கர்ப்பகாலத்தில் தவிர்க்கவேண்டிய உணவுகளை பற்றி பார்க்க இருக்கின்றோம்.

கர்ப்ப காலத்தில் சப்போட்டா பழம் சாப்பிடலாமா

கர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்:

கத்திரிக்காய் :

pregnancy time foods

பொதுவாக நம் வீடுகளில் அடிக்கடி பயன்படுத்தும் காய்தான் இந்த கத்திரிக்காய். தினமும் அரை கத்திரிக்காய்  சாப்பிட்டு வந்தால் கூட அது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஆபத்து. அதோடு கத்திரிக்காயில் இருக்கும் சத்து, மாதவிடாயை வரச் செய்திடும். இதனால் கர்ப்பத்தின் போது இந்தக்காய் சாப்பிடக்கூடாது.

பெருஞ்சீரகம் :

pregnant woman should avoid foods in tamil

கர்ப்பமான பெண்கள் பெருஞ்சீரகம் மற்றும் மல்லி விதைகளை தவிர்ப்பது நல்லது. இவை அதிகமானால் ஆபத்தையே ஏற்படுத்திடும். இது நம் உடலில் பைட்டோ ஈஸ்ட்ரோஜனை  அதிகப்படுத்திவிடும். இதனால் கருப்பை  வலுவிழக்க வாய்ப்புகள் உண்டு.

எள் விதைகள் :

pregnancy time foods in tamil

பொதுவாக ரத்த சோகை இருப்பவர்களுக்கான மருந்துதான் இந்த எள். அதனால் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது. சிலருக்கு இது கருக்கலைப்பை ஏற்படுத்திவிடும். மேலும் கருப்பையின்  தசைகளை தளர்த்திடும். முதல் ட்ரைம்ஸ்டரில் இதனை நீங்கள் முற்றிலுமாக தவிர்த்திடல் வேண்டும்.

​சமைக்காத அல்லது பாதி வேக வைத்த முட்டைகள்:

pregnancy time avoid foods

பொதுவாக கர்ப்ப காலத்தில் முட்டை சாப்பிடுவது நல்லது தான். ஆனால் சமைக்காத அல்லது பாதி வேகவைத்த முட்டைகளை சாப்பிடுவது கருவில் வளரும் குழந்தைக்கு நல்லதல்ல. முட்டையில் உள்ள சால்மோனெல்லா என்ற பாக்டீரியா தொற்றுநோயை ஏற்படுத்தும். 

​கடல் உணவுகள்:

 pregnancy time avoid foods in tamil

கடல் உணவுகளும் கருவுக்கு தீங்கு விளைவிக்கக் கூடும். இது கருவுற்ற பெண்களை சில ஒட்டுண்ணி நோய்களுக்கு ஆளாக்கும். மேலும் சில மீன்களில் அதிக அளவு பாதரசம் இருப்பதால் அவை கருவின் மூளை வளர்ச்சியில் சேதத்தை ஏற்படுத்துகிறது. அதனால் இவைகளையும் தவிர்க்கலாம்.

பச்சை காய்கறிகள் மற்றும் முளைக்கட்டிய பயிறு வகைகள்:

pregnancy food chart

​பச்சை காய்கறிகளை சாப்பிடுவது தவறில்லை. ஆனால் பச்சை காய்கறிகளை உண்ணும் போது நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பச்சை காய்கறிகளை அதிக நேரம் திறந்த வெளியில் வைக்காமல் இருக்க வேண்டும். அப்படி திறந்த வெளியில் வைத்திருப்பதால் அவற்றின் மேல் பாக்டீரியா பெருக்கத்தை ஏற்படுத்தும். மேலும் கழுவப்படாத முளைக்கட்டிய பயிறு வகைகளில் கூட பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன என்பதால் இவற்றையும் தவிர்க்கலாம் அல்லது கவனமாக இவற்றை கழுவிவிட்டு சாப்பிடலாம்.

அழற்சியை ஏற்படுத்தும் உணவுகள்:

pregnancy food chart in tamil

பொதுவாக உங்களுக்கு சில உணவுகள் அழற்சியை ஏற்படுத்தும் என்றால் அதை கர்ப்ப காலத்தில் முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. இந்த உணவுகள் வளரும் கருவில் ஒரு எதிர்வினையை ஏற்படுத்தும்.

​செயற்கை இனிப்புகள்:

 pregnancy time should avoid foods in tamil

இந்த செயற்கை இனிப்புகள் தாய் மற்றும் கருவின் ஆரோக்கியத்திற்கு இடையூறு அளிக்கக் கூடியது. சில ஆய்வுகள் செயற்கையான இனிப்பு குளிர்பானங்கள் கூட குறைப்பிரசவத்திற்கு வழி வகுக்கும். எனவே அதிலிருந்து விலகி இருப்பதே நல்லது.

​தேன்:

pregnancy time should avoid foods

பல ஆய்வுகளின்  முடிவுகளில் இந்த தேனை கர்ப்பகாலத்தில் சேர்த்து கொள்வதால் கருவில் உள்ள குழந்தைக்கு போட்டுலிசம் என்ற ஒரு வகை ஒட்டுண்ணி நோய் வருவதற்கு அதிக ஆபத்து உள்ளது என்று தெரியவந்துள்ளது.

மிஞ்சிய உணவுகள்:

 karpa kalathil thavirka vendiya unavugal in tamil

நிறைய பேர் கர்ப்ப காலத்தில் மிஞ்சிய பிரியாணிகளையும், கறிகளையும் பிரிட்ஜில் வைத்து குளிர்வித்து சாப்பிடுவது உண்டு. இந்த உணவில் உருவாகும் பாக்டீரியாக்கள் வயிற்றில் வளரும் குழந்தை மற்றும் தாய் இருவருக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியது. எனவே இதனை தவிர்ப்பது நல்லது.

மேலும் கர்ப்பகாலத்தில் வெந்தயம், முழுதானியங்கள், சீனா உணவு வகைகள், பதப்படுத்தப்படாத பால்பொருட்கள் ,​ மூலிகை டீ போன்றவற்றையும் தவிர்க்கலாம்.

கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாத பழங்கள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in tamil

 

Advertisement