தேமல் மறைய என்ன செய்வது | Themal Home Remedies

themal kunamaga tips in tamil

தேமல் மறைய டிப்ஸ் | Themal Home Remedies 

நம் உடலுக்கு பாதுகாவலனாக இருப்பது தோல். தோலின் முக்கிய வேலை சூரிய ஒளி, காற்று மற்றும் தொற்று கிருமிகள் ஏற்படாமல் பல்வேறு கால சூழ்நிலைகளில் இருந்தும் நம் உடலை பாதுகாப்பது. இப்பொழுது நூற்றுக்கும் மேற்பட்ட நோய்கள் நம் தோலை பாதிக்கின்றன, அதில் குறிப்பாக ஒவ்வாமையால் ஏற்படும் தேமலை சொல்லலாம்.

தோலின் மீது தட்டையாக வெண்மையாக தெரிவதை தான் தேமல் என்கிறோம். மலேசேசியாஃபர்ஃபர் (Malassezia Furfur) எனும் கிருமியால் இந்தப் பாதிப்பு உண்டாகிறது. தேமல் ஒரு சிலருக்கு ஆரோக்கிய குறைபாட்டால் ஏற்படலாம். சரி வாங்க நாம் இந்த பதிவில் தேமல் வருவதற்கான காரணம் மற்றும் அதை சரி செய்வதற்கான மருந்து பற்றியும் பார்க்கலாம்.

தேமல் ஏன் வருகிறது:

 • பூஞ்சை தொற்று வருவதற்கான முக்கிய காரணம் வியர்வை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது மற்றும் தொற்று ஏற்பட்டவர்கள் பயன்படுத்தும் சோப்பு, டவல் போன்றவற்றை நாமும் பயன்படுத்துவதினால் கூட தேமல் உருவாகும்.
படர் தாமரை குணமாக என்ன செய்ய வேண்டும் 

வெள்ளை தேமல் குணமாக – Themal Kunamaga Tips in Tamil

 • காலை மற்றும் மாலை வீசும் வெயிலில் வைட்டமின் டி இருப்பதால் தோல் சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் சூரிய ஒளி ஒரு சிறந்த மருந்து.
 • தேமலை சரி செய்வதற்கு மருந்தை உணவாகத்தான் எடுத்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை அதனை Ointment-ஆக கூட எடுத்து கொள்ளலாம்.

Themal Maraiya Tips in Tamil – தேமலை சரி செய்வதற்கு சாப்பிட வேண்டிய உணவு:

வெள்ளை தேமல் குணமாக

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

 • தேமல் உள்ளவர்கள் இனிப்புகளை தவிர்த்து கசப்பான உணவுகளை எடுத்து கொள்வது நல்லது. பாவக்காயை வறுத்து அல்லது குழம்பில் வேக வைத்து சாப்பிடலாம்.
தோல் நோய் நீங்க மருத்துவம்

 

 • தேமல் மறைய டிப்ஸ் சுண்டக்காயை வத்தலாகவும் எடுத்துக்கொள்ளலாம் இல்லை என்றால் குழம்பில் சேர்த்து சாப்பிடலாம்.
 • கருவேப்பிலை மற்றும் வெந்தயத்தை பொடியாக செய்து சாப்பிடுவது நல்லது.
வெயில் காலத்தில் ஏற்படும் வியர்க்குரு குறைய சில இயற்கை மருத்துவ குறிப்புகள்

தேமல் மறைய பாட்டி வைத்தியம் – Vellai Themal Maraiya

வெள்ளை தேமல் குணமாக

 • சீமை அகத்தி இலையை நன்றாக அரைத்து அதன் சாறை மட்டும் தேமல் இருக்கும் இடத்தில் தடவி வர Fungus சரியாகிவிடும்.
 • சீமை அகத்தி இலை கிடைக்கவில்லை எனில் அந்த இலையின் களிம்புகளில் செய்ய கூடிய மருந்து நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அதனை பயன்படுத்தலாம்.

தேமல் குணமாக என்ன செய்ய வேண்டும்:

தேமல் மறைய என்ன செய்வது

 • கருஞ்சீரகத்தை நன்றாக பொடி செய்து அதனை எலுமிச்சை சாறுடன் கலந்து தேமல் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் பூஞ்சையை சரி செய்யும்.
 • குப்பை மேனி அல்லது வேப்பிலையை அரைத்து தேமல் இருக்கும் இடத்தில் தடவி வர வேண்டும்.

தேமல் மறைய டிப்ஸ் – Themal Maraiya Tips in Tamil:

தேமல் மறைய என்ன செய்வது

 • குளிக்கும் பொழுது நலங்கு மாவு என்று சொல்லக்கூடிய பாசிபருப்பு மாவில் வெட்டி வேறு, விளாமிச்ச வேறு, கோர கிழங்கு, சீம கிச்சிலி கிழங்கு, சீமை அகத்தி இலை, வேப்பிலை, கருஞ்சீரகம் இவற்றை பொடியாக செய்து குளிக்கும் போது தடவி வர முழுமையாக தேமல் சரியாகி விடும்.

Vellai Themal Maraiya:

themal kunamaga tips in tamil

 • தேமல் உள்ளவர்கள் 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். உடல் சூட்டை அதிகப்படுத்தும் உணவை தவிர்ப்பது நல்லது. குளிர்ச்சி நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
 • ஒரு நாளில் 2 முறை குளிப்பது சிறந்தது. குளித்து முடித்தவுடன் ஈரப்பதத்தை நன்றாக துடைத்தவுடன் ஆடை அணியுங்கள்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>உடல் ஆரோக்கிய குறிப்புகள்