3,500 ரூபாய் முதலீட்டில் 15,000 வரை லாபம் தரக்கூடிய அருமையான தொழில்…!

குறைந்த முதலீடு அதிக லாபம்

நாம் முதலில் தொழில் தொடங்கலாம் என்று நினைக்கும் போது அதிக முதலீடு உள்ள தொழிலாக இருக்க வேண்டும் என்று நினைப்பது இல்லை. குறைந்த முதலீட்டில் ஒரு தொழில் தொடங்கி அந்த தொழிலின் முன்னேற்றம் பற்றி நன்றாக தெரிந்துக்கொள்ளலாம் என்று தான் பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ற மாதிரியான குறைந்த முதலீடு இருந்தால் போதும் அதிக வருமானம் தரக்கூடிய ஒரு தொழிலை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். மேலும் அது என்ன தொழில் அதனை எப்படி தொடங்குவது என்பது பற்றி எல்லாம் பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

High Profit Low Investment Business Ideas:

இன்று நெய் தீபம் வீட்டிலேயே தயார் செய்து அதிக வருமானம் பெறுவது எப்படி என்று தெரிந்துக்கொள்ள போகிறோம். இந்த தொழிலை செய்வதற்கு எந்த ஒரு மிஷினும் தேவையில்லை.

இத்தகைய நெய் தீபம் தொழில் செய்வதற்கு முதலீடு என்று பார்த்தால் 3,500 ரூபாய் மட்டும் போதும். இன்றைய காலம் மட்டும் இல்லாமல் என்றும் அதிகமான டிமாண்ட் உள்ள ஒரு தொழிலாக இந்த Business இருக்கிறது.

மூலப்பொருள்:

  • நெய்
  • Cotton Wick
  • தீபம் தயாரிக்கும் மோல்டு

இந்த நெய் தீபம் தயாரிக்கும் மோல்டினை நீங்கள் ஆன்லைன் மூலமும் வாங்கி கொள்ளலாம்.

தேவையான இடம்:

உங்கள் வீட்டில் 10×10 இடம் இருந்தால் போதும். சிறிய இடத்திலையே இந்த தொழிலை செய்து நீங்கள் பெரிய அளவிலான லாபத்தை பெற முடியும்.

இதையும் படியுங்கள் ⇒ எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இதற்கான கெத்து குறையாது..!

தயாரிக்கும் முறை:

குறைந்த முதலீடு அதிக லாபம்

முதலில் நீங்கள் தீபம் தயாரிக்கும் மோல்டினை வாங்கி கொள்ளுங்கள். அதன் பிறகு அந்த மோல்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் Cotton Wick– னை நேராக இருக்கும் படி வைத்து கொள்ளுங்கள்.

இப்போது Cotton Wick வைத்துள்ள மோல்டில் நெய்யினை கொஞ்சம் கொஞ்சமாக பொறுமையாக ஊற்றி 15-லிருந்து 20 நிமிடம் வரை அப்படியே அந்த மோல்டினை காய விடுங்கள்.

மோல்டில் இருக்கும் நெய் நன்றாக காய்ந்த பிறகு அதனை தனி தனியாக எடுத்து வைத்து விடுங்கள். இது மாதிரி நீங்கள் நெய் தீபங்களை எளிதில் தயாரித்து கொள்ளலாம்.

விற்பனை செய்யும் முறை:

daily income business in tamil

நீங்கள் தயார் செய்து வைத்துள்ள நெய் தீபங்களை பேக்கிங் செய்து கோவில், பூஜை சாமான்கள் விற்பனை செய்யும் கடை மற்றும் கோவில் திருவிழாக்கள் போன்ற இடங்களில் விற்பனை செய்யலாம்.

ஒரு நெய் தீபத்தின் தோராய விலை 5 ரூபாய் என்றால் ஒரு நாளைக்கு நீங்கள் 100 நெய் தீபங்கள் விற்பனை செய்தால் 500 வருமானம் பெறலாம்.

இப்படியே நீங்கள் விற்பனை செய்தால் தோராயமாக ஒரு வாரத்திற்கு 3,500 ரூபாயும் மற்றும் ஒரு மாதத்திற்கு 15,000 வரையும் லாபம் பார்க்கலாம்.

நீங்கள் ஆன்லைன் மூலமாகவும் இதனை விற்பனை செய்து கொள்ளலாம். அதற்கு நீங்கள் GST Registration கட்டாயமாக பெற்றிருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்⇒ எதிர்காலத்தில் இந்த தொழில் தான் அதிக டிமெண்ட்டுடன் வளம் வரக்கூடிய தொழிலாக இருக்க போகிறது..!