Lipoma Meaning in Tamil!!
மனிதர்களாகிய அனைவருமே ஒவ்வொரு வகையான நோயினால் ஏதும் ஒருமுறையாவது பாதிக்கப்படுவோம். இவ்வுலகில் ஆரயோக்கியமானவர்கள் எவரும் இலர். நோய்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம். அப்படி ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஏற்றாற்போல் சிகிச்சை இருக்கிறது. எல்லா வயதினருக்கும் வரும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று தான் கட்டிகள், இது நிறைய வகைப்படும் அவை நீர்க்கட்டி, கொழுப்பு கட்டி போன்றவை.
இந்த பதிவில் கட்டிகளில் ஒன்றான Lipoma என்பதன் சரியான விவரங்களை பற்றி தான் பார்க்கப்போகிறோம். அதாவது Lipoma என்றால் என்ன, Lipoma Tamil Meaning மற்றும் அதனுடைய வகைகள்.
Lipoma Tamil Meaning
Lipoma என்ற வார்த்தையை தமிழில் கொழுப்புத் திசுக்கட்டி என்று கூறுவர். மருத்துவ ரீதியாக, இந்த கட்டிகள் லிபோமாஸ் என்று அழைக்கப்படுகின்றன. இது ஒரு கொழுப்பு திசு கட்டி, இது வலியை ஏற்படுத்தாது. மேலும் இது ஒரு மென்மையான திசு கட்டிகளில் பொதுவான வகையாகும். இந்த கட்டிகள் பெரும்பாலும் கைகள் மற்றும் கால்களில் காணப்படும்.
லிபோமா கட்டியானது தொடுவதற்கு வலியற்றது மற்றும் தோலுக்கு அடியில் வளரும். இந்த கட்டிகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கவில்லை என்றாலும், அவை சந்தேகத்திற்கு இடமின்றி உங்கள் தோலின் தோற்றத்தை குறைக்கின்றன. இந்த கட்டி வந்தால் தோல் உப்பியது போல காணப்படும்.
கருப்பை நீர்கட்டி பிரச்சனையை குணப்படுத்தும் சிறந்த மருத்துவ குறிப்பு
கொழுப்புத் திசுக்கட்டி வகைகள்
- ஆன்ஜியோலிப்போலெயோமையோமா (Angiolipoleiomyoma)
- ஆன்ஜியோ லிப்போமா (Angiolipoma)
- சோண்ட்ராய்ட் கொழுப்புத் திசுக்கட்டிகள் (Chondroid lipomas)
- இணைப்பு மெய்ய கொழுப்புத் திசுக்கட்டி (Corpus callosum lipoma)
- ஹைபர்னோமா (Hibernoma)
- சருமத்துள் கதிர் செல் கொழுப்புத் திசுக்கட்டி (Intradermal spindle cell lipoma)
- நரம்பிய மிகை கொழுப்புத் திசுக்கட்டி (Neural fibrolipoma)
- பல்லுறுமாற்ற கொழுப்புத் திசுக்கட்டிகள் (Pleomorphic lipomas)
- கதிர்-செல் கொழுப்புத் திசுக்கட்டி (Spindle-cell lipoma)
- மேலோட்டாமான தோலடி கொழுப்புத் திசுக்கட்டி (Superficial subcutaneous lipoma)
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான, பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.
Lipoma Tamil Meaning with Example
சீதாவின் தோளில் ஒரு மென்மையான, அசையும் கட்டி இருந்தது, அது ஒரு தீங்கற்ற லிபோமா என்று மருத்துவர் தீர்மானித்தார்.
லோகி முதுகில் உள்ள லிபோமாவால் வலியை உணரவில்லை, அதன் அளவு இருந்தபோதிலும், அறுவை சிகிச்சை தேவையில்லை.
பதற்றத்துடன் தன் கையில் உள்ள சிறிய லிபோமாவைத் தேய்த்துக் கொண்டிருந்த சஹானா.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |