30 October 2023 Rahu Ketu Peyarchi Palangal
ஜோதிடத்தை பொறுத்தவரை கிரங்களின் மாற்றம் என்பது மாதம் ஒருமுறை அல்லது வருடத்திற்கு ஒரு முறை என நிகழக்கூடிய ஒன்றாக உள்ளது. அந்த வகையில் செவ்வாய், புதன் என இத்தகைய கிரங்களின் பெயர்ச்சி மாதத்திற்கு மாதம் நடந்தாலும் கூட சனி, குரு மற்றும் ராகு கேது பெயர்ச்சி என இவை எல்லாம் 1 அல்லது 1 1/2 வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே தனது ராசியை மாற்றுகிறது. அதேசமயம் சில நேரத்தில் வக்ர நிலையினையும் அடைகிறது. இவ்வாறு பெயர்ச்சி அடைந்தாலும் அல்லது வக்ர நிலையினை அடைந்தாலும் கூட பலன்கள் என்பது ஒவ்வொரு ராசிக்கும் வேறுபட்டு தான் இருக்கிறது. அந்த வகையில் 2023-ஆம் ஆண்டில் ராகு கேது பெயர்ச்சி ஆனது 30-ஆம் தேதி அக்டோபர் மாதம் நிகழவிருக்கிறது. இத்தகைய நிகழ்வினால் அதிர்ஷ்டத்தை அள்ளி செல்லப்போகும் ராசிக்காரர்கள் யார் என்பதை விரிவாக பார்க்கலாம் வாங்க..!
அட்ரா சக்க சனி பெயர்ச்சியால் 2025 வரை அமோகமான வாழ்க்கை வாழப்போகும் ராசிக்காரர்கள்
ராகு கேது பெயர்ச்சி பலன்:
விருச்சிக ராசி:
ராகு கேது பெயர்ச்சியினால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இதுநாள் வரையிலும் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி ஆனது இருக்கும். மேலும் பொருளாதார நிலையில் இருந்த சிக்கல் நீங்கி பண வரவு உண்டாகும். அதேபோல் தேவையற்ற செலவுகள் அனைத்தும் குறையத்தொடங்கும்.
மேலும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு உடல் நலத்தில் முன்னேற்றம் இருக்கும் மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
தனுசு ராசி:
வில் போன்ற அமைப்பினை கொண்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி ஆனது புதியதாக தொழில், வீடு மற்றும் வாகனம் என இவற்றை எல்லாம் வாங்குவதற்கான அமைப்பினை உண்டாக்குகிறது. மேலும் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும், லாபமும் அதிகரிக்க தொடங்கும்.
அதேபோல் இந்த நேரத்தில் புதிய முயற்சிகள் எடுப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாக கிடைக்கும்.
மீன ராசி:
மீன ராசிக்காரர்களுக்கு இத்தகைய பெயர்ச்சி காரணமாக இதுநாள் வரையிலும் காணப்பட்ட திருமண பேச்சு நல்ல முடிவினை அளிக்கும் விதமாக அமையும். ஆகவே விரைவில் சுப நிகழ்ச்சி உண்டாகும்.
மேலும் நிதிநிலையில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகி நல்ல முன்னேற்றம் காணப்படும். அலுவலகத்தில் உங்களுக்கான இடத்தை பெறுவதற்கு திட்டமிடுதலும், கவனமும் அவசியம்.
துலாம் ராசி:
துலாம் ராசியை பொறுத்தவரை ராகு கேது பெயர்ச்சியினால் வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதனால் உங்களுக்கான கஷ்டம் அனைத்தும் நீங்கும். அதேபோல் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் விலகி மகிழ்ச்சி ஏற்படும். மேலும் குடும்பத்தில் மகிழ்ச்சியை அளிக்கும் விதமாக நல்ல செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |