D -யில் உங்கள் பெயர் ஆரம்பிக்கிறதா? அப்போ நீங்க இப்படித்தான்?

Advertisement

D Letter Name Personality in Tamil

நண்பர்களே வணக்கம் அனைவருமே நாம் எப்படிப்பட்டவர் என்பதை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்போம். பொதுவாக நம்மை பற்றி ஆயிரம் சொல்வார்கள் சிலர் நம்மை பற்றி நல்லவிதமாக சொல்வார்கள் அதேபோல் சிலர் நம்மை கெட்ட விதமாகவும் சொல்வார்கள். ஆனால் இதில் எது உண்மை என்று எப்போதாவது யோசித்தது உண்டா? ஏன் நமக்கே அதுபோல் நிறைய கேள்விகள் மனதில் இருக்கும்.

கோவத்தில் நிறைய கேள்விகள் கேட்போம் அதேபோல் சில நேரங்களில் நல்ல விதமாக இருப்போம் அப்போதெல்லாம் யோசித்தது உண்டா நாம் நல்லவர்களா இல்லை கெட்டவர்களா என்று? ஆனால் நம்மை பற்றி மற்றவர்கள் ஒவ்வொரு விதமாக தெரிந்துகொள்வார்கள் அதில் ஒன்று தான் உங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து நீங்கள் எப்படி என்று அறிந்துகொளவ்து. உங்கள் பெயர் D என்ற எழுத்தில் ஆரம்பிக்கிறது என்றால் உங்கள் குணம் இப்படி தான் இருக்கும்.

D பெயரை முதல் எழுத்தாக கொண்டவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

  • D எழுத்தில் பெயர் கொண்டவர்கள் எல்லா விதத்திலும் ஒரே மாதிரியாக இருப்பார்கள். அதாவது அவர்களுக்கு மகிழ்ச்சி என்றாலும் சரி, தூக்கம் என்றாலும் சரி அவர்களுக்கு இரண்டும் ஒரே மாதிரியாகத்தான் இருப்பார்கள்.
  • எந்த ஒரு விஷயத்தையும் ஈசியாக எடுத்துக்கொள்வார்கள். மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் போது முன்கூட்டிய அதில் உள்ள நல்லது கேட்டது அனைத்தையும் அவர்களுக்கு சொல்வார்கள்.
  • இவர்கள் பொதுவாக நிறைய உதவி செய்ய கூடியவராக இருப்பார்கள். இவர்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள்.
  • இவர்கள் நண்பர்களுக்கு இவர்களுடைய தனிப்பட்ட விஷயத்தை சொல்வார்கள் அதேபோல் அவர்களுக்கு நிறைய விதமான உதவிகளையும் செய்வார்கள். இவர்கள் எப்போதும் நண்பர்களுக்கு உதவி செய்யவதனால் இவர்களை சுற்றி நிறைய நண்பர்கள் இருப்பார்கள்.
  • இவர்கள் எந்த துறையில் இருந்தாலும் சாதிக்க கூடியவராக தான் இருப்பார்கள்.
  • பிறருக்கு எந்த வேலை செய்தாலும் அவர்களுக்கு மிகவும் உதவியாகவும் ஆர்வமாகவும் அக்கறையுடன்மும் செய்வார்கள்.
  • இவர்களுக்கு என்று வேலை இருந்தால் அதனை ஆர்வமாக செய்ய மாட்டார்கள். அலட்சியமாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக எடுக்கிற முயற்சி இவர்களுக்காக எடுக்கமாட்டார்கள்.
  • இவர்கள் குடும்பத்திற்காக நிறைய வேலைகளை செய்வார்கள். பணம் சம்பாதிப்பார்கள். அதேபோல் குடும்பத்தில் உள்ளவர்களிடம் நிறைய எதிர்பார்க்கும் போது அது அவர்களுக்கு இல்லை என்றால் அதனை நினைத்து மனம் உடைந்து விடுவார்கள்.
  • இவர்கள் மற்றவர்களை பார்க்கும் போது நன்றாக இருக்கிறது என்று நினைப்பார்கள் ஆனால் அவர்களுக்கு என்று நினைக்கும் போது நல்லதாக இல்லை எனக்கு மட்டும் ஏன் இப்படி உள்ளது என்று நினைத்து மனம் உடைந்து இருப்பார்கள்.
  • இவர்களுடைய திறமையே கெட்டிக்காரத்தனமாக இருப்பார்கள்.
  • இவர்களுடைய வலிமை என்வென்றால் நிறைய யோசிப்பார்கள் அதன் மூலம் வெற்றியும் அடைவார்கள்.
  • இவர்கள் நிறைய யோசனை திறன் மிக்கவராக இருப்பார்கள், அதேபோல் நிறைய கவிதை கதை ஆசிரியராகவும் இருப்பார்கள்.
  • நிறைய கண்டுபிடிக்க  வேண்டும் அதில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 K என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்குதா? அப்போ நீங்க இப்படித்தான் இருப்பீங்க..!

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement