Vertigo Meaning in Tamil
வணக்கம் நண்பர்களே இன்று நம் பொதுநலம். காம் பதிவில் Vertigo என்றால் என்ன மற்றும் அவற்றின் அர்த்தங்கள் பற்றி தான் தெரிந்துகொள்ளப் போகிறோம். Vertigo என்பது மனிதனின் உடலில் ஏற்பட கூடிய பிரச்சனைகளில் ஒன்றாகும். இந்த பிரச்சனைகள் பொதுவாக எல்லோருக்கும் இருக்கக்கூடிய ஒன்றாகும். அப்படி என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? மேலும் இதற்கான அர்த்தங்களையும், நம் பதிவில் மூலம் படித்து அறியலாம் வாங்க.
சினைப்பை நோய்கள் அர்த்தம் என்ன தெரியுமா? |
Vertigo Meaning in Tamil:
வெர்டிகோ (Vertigo) என்னும் ஆங்கில சொல்லானது வெர்டோ என்னும் இலத்தின் சொல்லில் இருந்து தேன்றியதாகும்.
வெர்டிகோ என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் பல அர்த்தங்கள் உள்ளது அதாவது, தலைச்சுற்றல், உடலின் நிலையற்ற தன்மை, உடல் வலி மற்றும் உடல் சோர்வு போன்றவற்றை குறிக்கிறது. இது போன்ற பிரச்சனைகள் இருந்தால் உடலுக்கு பல சிக்கல்கள் என்றும் சொல்லப்படுகிறது.
வெர்டிகோ என்றால் என்ன?
வெர்டிகோ என்பது மனிதனுக்கு ஏற்படும் ஒரு வியாதியாகும், இது மனிதனுக்கு பல சிக்கல்களையும் தருகிறது. வெர்டிகோ ஆனது சில சமயங்களில் மனிதனுக்கு புரியாத நிலையில் தலைசுற்றல் போன்ற பிரச்சனைகள் வந்து செல்வதை தான் வெர்டிகோ என்று சொல்வார்கள்.
இந்த நோயானது அக்ரோபோபியா உள்ள மனிதர்களுக்கு இதனுடைய தாக்கம் அதிகமாகவே இருக்கும். அக்ரோபோபியா என்பது ஒரு உயரனமான இடத்தில் நின்று கொண்டு கீழ் பகுதிகளை பார்ப்பதினால் ஏற்படும் ஒருவகையான தலை சுற்றலாகும்.
இது போன்ற காரணங்களினால் அக்ரோபோபியா பிரச்சனை உள்ளவர்கள் உயரமான இடத்திற்கு செல்லும் பொழுது அதிகமான பயம் ஏற்படும்.
வெர்டிகோவுக்கு வருவதற்கு காரணம் என்ன?
இந்த வெர்டிகோ பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் காது, மூளை மற்றும் நரம்பு மண்டலங்களில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் இது போன்ற வெர்டிகோ பாதிப்புகள் ஏற்படும். இது போன்ற பிரச்சனைகள் எல்லா வயதினருக்கும் ஏற்படும் பாதிப்புகள் ஆகும். அதோடு இந்த பிரச்சனைகள் வயத்தானவர்களுக்கு அதிகமாவே இருக்கக்கூடிய ஒன்றாகும்.
வெர்டிகோ பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு மூலையில் அதிகமான பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது என்றும் சொல்லப்படுகிறது.
வெர்டிகோ அறிகுறிகள்:
- உடல் நிலையற்றதாக இருப்பது போன்ற உணர்வுகள்.
- உயரமான இடங்களுக்கு செல்வதில் அதிகமான பயம்.
- அடிக்கடி மயக்கம் போன்ற பிரச்சனைகள்.
- காது கேப்பதில் கோளாறு.
- அதிகமான சத்தத்தின் போது தலைசுற்றல்.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |