பித்த வெடிப்பு நீங்க | Pitha Vedippu Home Remedies in Tamil
வணக்கம் நண்பர்களே.! ஆண்கள், பெண்கள் என்று இருவருக்கும் வர கூடிய பிரச்சனை. ஆனால் பெண்களை தான் அதிகம் பாதிக்கும். அது என்னவென்று யோசிக்கிறீர்களா.! அது ஒன்றும் இல்லை பித்த வெடிப்புக்கான தீர்வை தான் இன்றைய பதிவில் காண போகிறோம். இந்த வார்த்தையை படித்தவுடன் மகிழ்ச்சியாக இருக்குமே. பித்த வெடிப்பு இருந்தால் நடக்கும் போது கால் அழகாக இருக்காது. சில நபர்கள் பித்த வெடிப்பு தெரியாத அளவிற்கு அவர்களின் உடைகள், காலணிகளை மாற்றுவார்கள். பித்த வெடிப்பு வலி மற்றும் குத்தலை ஏற்படுத்தும். இரவில் பித்த வெடிப்பு பாடாப்படுத்தும். நிம்மதியாக தூங்க கூட முடியாது. நமது பாதங்களின் அழகை கெடுக்கும் இந்த பித்த வெடிப்பு விரைவாக நீங்க சில டிப்ஸை காண்போம்.
கால் விரல் நகம் சொத்தை காரணம் மற்றும் குணப்படுத்தும் முறை !!! முழு விளக்கம் !!!
பித்த வெடிப்பு வர காரணம்:
இந்த பித்த வெடிப்பு வருவதற்கு முக்கியமான காரணம் சுகாதாரமின்மை. எப்படி தெரியுமா.? நாம் வெளியில் செல்லும் போது வெறும் காலுடன் நடந்து செல்வோம். அப்படி நடந்து செல்லும் போது சாலையிலும், சுற்றுப்புறங்களிலும் இருக்கும் கிருமிகள் நம் பாதங்களில் தொற்றை ஏற்படுத்துகிறது. இதனால் தான் பித்த வெடிப்பு வருகிறது.
பித்த வெடிப்பு நீங்க டிப்ஸ் 1:
உப்பு நீர்
ஒரு தாம்பாளம் அல்லது அகன்ற பாத்திரம் வெந்நீர் ஊற்ற வேண்டும். அதனோடு கொஞ்சம் கல் உப்பு சேர்க்க வேண்டும். இரவு தூங்குவதற்கு முன்பும், காலையில் எழுந்த பின்பும் நம் பாதங்களை 15 நிமிடம் வைக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் பித்த வெடிப்பில் இருக்கும் கிருமிகள் அழிந்து, புதிய தோல் வளரும்.
பித்த வெடிப்பு நீங்க டிப்ஸ் 2:
வேப்பிலை மஞ்சள்
வேப்பிலை சிறிதளவு, மருதாணி சிறிதளவு, மஞ்சள் மூன்றையும் சேர்த்து பேஸ்ட்டாக அரைக்க வேண்டும். பிறகு பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் பித்த வெடிப்பு மறைந்து விடும்.
பித்த வெடிப்பு நீங்க டிப்ஸ் 3:
தேன் | சுண்ணாம்பு
தேனையும், சுண்ணாம்பையும் சம அளவு எடுத்து இரண்டும் மிக்ஸ் ஆகும் வரை கலக்கவும். இரவு தூங்கும் முன் இந்த பேஸ்ட்டை பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவ வேண்டும். இந்த பேஸ்ட்டை வாரத்திற்கு ஒரு முறை தான் பயன்படுத்த வேண்டும். இப்படி செய்து வந்தால் நாளடைவில் பித்த வெடிப்பு மறைந்து விடும்.
பித்த வெடிப்பு நீங்க டிப்ஸ் 3:
கற்றாழை
கற்றாழையின் தோள்களை சீவினால் ஜெல் இருக்கும். அந்த ஜெல்லை நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். இரவு உறங்குவதற்கு முன் இந்த பேஸ்ட்டை தடவ வேண்டும். இது போல் தினமும் செய்து வந்தால் பித்த வெடிப்பு மிக விரைவிலேயே மறைந்து விடும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu tamil tips) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் 1000 |