இன்றைய ராசி பலன்கள் 2024 | Indraya Rasi Palan 2024 | Today Rasi Palan 2024 in Tamil
Indraya Rasipalan Tamil Language :- இன்றைய நாள் நமக்கு எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள நாம் பொதுவாக ராசி பலன் பார்ப்போம். அவ்வாறு ராசி பலன் பார்த்து அதற்கு ஏற்றது போல் நாம் முன் எச்சரிக்கையாக இருந்தால், நினைத்த செயல்கள் வெற்றி பெறும். அதாவது கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் இன்று எப்படி நடந்து கொள்ள வேண்டும், தங்களுக்கான ராசி பலன் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
அந்த வகையில் இங்கு மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.
இன்றைய நாள் எப்படி | இன்றைய நல்ல நேரம் தெரிந்துக்கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்து படிக்கவும்..! | Indraya Naal Eppadi in Tamil |
இன்றைய ராசி பலன்கள் 2024 | daily horoscope in tamil | Today rasi palan tamil 2024
மேஷம் ராசி பலன் இன்று – Mesham Today Rasi Palan:-
Daily horoscope in tamil – மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டிய நாள். மன தைரியத்துடன் இருக்க வேண்டும். பணிகள் அதிகமாக காணப்படும். ஆகவே பணிகளில் தவறுகள் ஏற்படாமல் இருக்க கவனமாக பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மனம் திறந்து பேசுங்கள். தேவையில்லாமல் செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். முதுகு வலி ஏற்படும் வாய்ப்புள்ளது.
நட்சத்திர பலன்கள்:
- அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.
- பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படும்.
- கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களால் ஆதாயம் கிடைக்கும்.
நாளைய ராசி பலன்கள் |
ரிஷபம் ராசி பலன் இன்று – Rishaba Rasi Palangal:-
Today Rasi Palan Rishabam 2024: ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும் நாளாக இருக்கும். அனைவரும் உங்கள் மீது நம்பிக்கையுடன் இருப்பார்கள். பணியிட சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் பணிகளை உற்சாகத்துடன் செய்வீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நட்பான முறையில் பழகுவீர்கள். உங்கள் இருவருக்கிடையே அதிகமான புரிதல் இருக்கும். பணவரவு அதிகமாக காணப்படும். அதை நல்ல முறையில் செலவு செய்வீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
நட்சத்திர பலன்கள்:
- கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம்.
- ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.
- மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மிதுனம் ராசி பலன் இன்று – Mithuna Rasi palan today:-
Indraya rasi palan in tamil – மிதுனம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் கடின முயற்சியின் மூலம் வெற்றி காண்பீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும். உங்கள் பணிகளில் திறமைக்கான பாராட்டுகளை பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நேர்மையான முறையில் நடந்து கொள்வீர்கள். இதுவரை வராத பணம் இப்போது கைக்கு கிடைக்கும். மகிழ்ச்சி காரணமாக ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
நட்சத்திர பலன்கள்:
- மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுடன் செலவுகளும் ஏற்படும்.
- திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு இன்று கிடைக்கும்.
- புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
கடகம் ராசி பலன் இன்று – Kataka Rasi palan today:
Today Rasi Palan Kadagam – கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சவால்களை சந்திக்கும் நாளாக இருக்கும். உங்கள் பணிகளில் தவறுகள் ஏற்படாமல் இருக்க கவனமாக பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள். அதனால் இருவருக்கிடையே பிரச்சனைகள் வராமல் இருக்கும். இன்று பணவரவு குறைந்து காணப்படும். அதனால் தேவையில்லாமல் செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
நட்சத்திர பலன்கள்:
- புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.
- பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கக்கூடும்.
- ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.
சிம்மம் ராசி பலன் இன்று – Simmam Rasi palan today:
Indraya Rasipalan- சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திட்டமிட்டு பணியாற்ற வேண்டிய நாள். வெளியூர் பயணங்களை அதிகமாக மேற்கொள்வீர்கள். பணிகள் அதிகமாக காணப்படும். அதனால் அதை குறித்த நேரத்தில் முடிக்க திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பேசும் போது கவனமாக பேச வேண்டும். செலவுகள் அதிகமாக காணப்படும். முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
நட்சத்திர பலன்கள்:
- மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சில பிரச்னைகள் ஏற்படும்.
- பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
- உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.
கன்னி ராசி பலன் இன்று – Kanni Rasi Palan Today:
Today Rasi Palan Kanni – கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உறுதியுடனும் நம்பிக்கையுடனும் காணப்படுவீர்கள். வெற்றி பெறும் நாளாக இருக்கும். உங்களின் சக பணியாளர்களுடன் அனுசரித்து செல்வீர்கள். இதனால் மேலதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். மனஉறுதி காரணமாக ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
நட்சத்திர பலன்கள்:
- உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
- அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் பணவரவு கிடைக்கக்கூடும்.
- சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.
உங்கள் ராசிக்கு எது பொருத்தமான அதிர்ஷ்ட கல் |
துலாம் ராசி பலன் இன்று – Thulam Rasi Palan Today:
Today Thulam Rasi Palan – துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுப்புகள் அதிகமாக காணப்படும் நாளாக இருக்கும். அதனால் உணர்ச்சிவசப்படுவதை தவிர்ப்பது நல்லது. வேலை காரணமாக வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். இது உங்களுக்கு கவலை அளிக்கும். உங்கள் துணையுடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. பணவரவு திருப்தி அளிக்காது. செலவுகளை குறைத்து கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
நட்சத்திர பலன்கள்:
- சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண்விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.
- சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
- விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
விருச்சிகம் ராசி பலன் இன்று – Viruchigam Rasi Palan Today:
Indraya rasi palan – விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டிய நாள். இசை கேட்பதன் மூலம் ஆறுதல் பெறலாம். பணிகளை செய்யும் போது கவனமாக பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். வரவை விட செலவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
நட்சத்திர பலன்கள்:
- விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் வீண்செலவுகள் ஏற்படும்.
- அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணிச்சுமையின் காரணமாக உடல் அசதி ஏற்படும்.
- கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாக எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கும்.
தனுசு ராசி பலன் இன்று – Dhanusu Rasi Palan:
Today Rasi Palan 2024– தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கும். மற்றவர்களுடன் பேசும் போது கவனமாக பேச வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பணிகள் அதிகமாக காணப்படும். அதை குறித்த நேரத்தில் முடிக்க திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்க வேண்டும். செலவுகள் அதிகமாக காணப்படும். குளிர்ச்சியான உணவுகளை தவிர்ப்பது நல்லது.
நட்சத்திர பலன்கள்:
- மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
- பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண்செலவுகளால் மனச்சஞ்சலம் ஏற்படும்.
- உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.
.மகர ராசி பலன் இன்று – Magaram Rasi Palan:
Today Rasi Palan 2024 in tamil – மகரம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இன்று புதிய வேலைவாய்ப்புகள் உங்களை தேடி வரும். அதை பயன்படுத்தி கொள்வது நல்லது. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உண்மையான மற்றும் நேர்மையான உணர்வுகளை பகிர்ந்து கொள்வீர்கள். இது இருவருக்கிடையே மகிழ்ச்சியை உண்டாக்கும். இன்று பணவரவு அதிகமாக காணப்படும். நம்பிக்கை காரணமாக ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
நட்சத்திர பலன்கள்:
- உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் வீண்செலவுகள் ஏற்படும்.
- திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.
- அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும்.
கும்ப ராசி பலன் இன்று – Kumbam Rasi Palan:
Today Rasi Palan 2024 in tamil – கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிக பயணங்களை மேற்கொள்வீர்கள். ஆற்றலுடன் செயல்படுவீர்கள். பணியிடத்தில் திறமையை வெளிப்படுத்தி மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான உணர்வுகளை பகிர்ந்து கொள்வீர்கள். பணப்புழக்கம் அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
நட்சத்திர பலன்கள்:
- அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறருக்குக் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கக்கூடும்.
- சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் சுமுகமாக நடந்துகொள்ளவும்.
- பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.
மீன ராசி பலன் இன்று – Meenam Rasi Palan Today:
Today Rasi Palan Meenam 2024– மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாய்ப்புகள் குறைத்து காணப்படும். அனைத்து செயல்களையும் திட்டமிட்டு செய்வது நல்லது. பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பணிகளைக் கவனமாக செய்ய வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கோபத்தை வெளிப்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. வரவை விட செலவுகள் அதிகமாக காணப்படும். சரியான நேரத்திற்கு உணவு உண்பதால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
நட்சத்திர பலன்கள்:
- பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.
- உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.
- ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |