முகத்தில் கரும்புள்ளிகள் அதிகம் இருக்கிறதா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!

Dark Spots Home Remedies

பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி முகத்தில் பருக்கள் வருவது இயல்பு தான். ஆனால் அந்த பருக்கள் நாளடைவில் மறைந்து கரும்புள்ளிகளாக மாறி விடுகிறது. அதனால் முகத்தின் அழகே போய் விடுகிறது. இதன் காரணமாக பலரும் கடைகளில் கிடைக்க கூடிய கெமிக்கல் சேர்க்கப்பட்ட கிரீம்கள் மற்றும் சோப்புகளை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் சருமத்தில் மேலும் பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்த கரும்புள்ளிகளை நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சரி செய்யலாம்..! அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Dark Spots Home Remedies in Tamil: 

தயிர் மற்றும் தக்காளி

  1. தயிர் – 4 ஸ்பூன்
  2. தக்காளி சாறு – 2 ஸ்பூன்
  3. கோதுமை மாவு – 1 ஸ்பூன்
 தயிர் மற்றும் தக்காளி இரண்டும் சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளை நீக்கும் பண்புகளை கொண்டுள்ளது. இது முகத்தை எப்பொழுதும் பொலிவுடன் வைத்திருக்க உதவுகிறது. கோதுமை மாவு சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசையை நீக்க உதவுகிறது.  
3 நாட்களில் உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைய இதை ட்ரை பண்ணுங்க..!

தயிர் எடுத்து கொள்ளவும்:

தயிர் எடுத்து கொள்ளவும்

முதலில் ஒரு கிண்ணத்தில் 4 ஸ்பூன் அல்லது உங்கள் முகத்திற்கு தேவையான அளவு தயிர் எடுத்து கொள்ளவும்.

அடுத்து ஒரு மிக்சி ஜாரில் ஒரு தக்காளியை போட்டு பேஸ்ட் போல அரைத்து கொள்ள வேண்டும். இந்த தக்காளி பேஸ்ட் 2 ஸ்பூன் அளவிற்கு எடுத்து தயிரில் சேர்த்து கொள்ள வேண்டும்.

அப்ளை செய்யும் முறை..!

பின் அதில் கோதுமை மாவு 1 ஸ்பூன் அளவிற்கு எடுத்து கொள்ள வேண்டும். இந்த மூன்று பொருட்களையும் நன்றாக பேஸ்ட் போல கலந்து கொள்ள வேண்டும்.

முகத்தில் அப்ளை செய்யும் முறை: 

இந்த பேஸ்டை முகத்திற்கு அப்ளை செய்வதற்கு முன் உங்கள் முகத்தை நன்றாக கழுவி கொள்ள வேண்டும். பின் முகத்தை ஒரு துணியை கொண்டு ஈரப்பதம் இல்லாமல் துடைக்க வேண்டும்.

அதன் பிறகு நாம் தயார் செய்து வைத்துள்ள இந்த பேஸ்டை முகம் முழுவதும் அப்ளை செய்து 5 நிமிடம் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இந்த பேஸ்ட் 20 நிமிடம் வரை முகத்தில் அப்படியே இருக்கட்டும்.

20 நிமிடம் கழித்து உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கொள்ள வேண்டும். இதுபோல தொடர்ந்தோ அல்லது வாரத்திற்கு 3 முறையோ செய்து வந்தால் உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். மேலும், முகம் எப்பொழுதும் பிரகாசமாக இருக்கும்.

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் 2 நாட்களில் மறைய இதை தடவுங்கள்..!

 

இதையும் படியுங்கள் ⇒ முகத்தில் எண்ணெய் பசை நீங்கி, பருக்களை நீக்க இந்த ஒரு பொருள் போதும்

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil